search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகேஷ் அம்பானி"

    • உலகின் மிகவும் மதிப்பு மிக்க முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இதுவாகும்.
    • ரிலையன்ஸ் ஒரு குஜராத்தி நிறுவனமாக இருந்தது. எப்போதும் அது இருக்கும்.

    காந்திநகர்:

    குஜராத் தலைநகர் காந்தி நகரில் 10-வது சர்வதேச வர்த்தக உச்சி மாநாடு இன்று தொடங்கியது.

    இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத், செக் குடியரசு பிரதமர் பீட்டர் பியாலா, மொசாம்பிக் அதிபர் பிலிப், குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ் வரத், முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:-

    உலகின் மிகவும் மதிப்பு மிக்க முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இதுவாகும். குஜராத் நவீன இந்தியாவின் வளர்ச்சியின் நுழைவு வாயிலாகும். வெளிநாட்டினர் புதிய இந்தியாவை நினைக்கும்போது அவர்கள் குஜராத்தை நினைக்கிறார்கள். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது.

    நமது காலத்தின் மிகப் பெரிய உலக தலைவராக உருவெடுத்த தலைவரால் இது முடிந்தது. இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

    ரிலையன்ஸ் ஒரு குஜராத்தி நிறுவனமாக இருந்தது. எப்போதும் அது இருக்கும். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் குஜராத்தில் ஜிகா தொழிற்சாலை தொடங்க தயாராக உள்ளோம்.

    2047-ல் குஜராத் மட்டும் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும். 2047-க்குள் இந்தியா 35 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த உச்சி மாநாட்டில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி பேசியதாவது:-

    குஜராத்தில் 2025 வரை ரூ.55 ஆயிரம் கோடியும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேலும் முதலீடு செய்யப்படும். இந்தியாவை ஒரு முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் பாதையில் செல்கிறது. பிரதமர் மோடி இந்தியா ஒரு பெரிய சக்தியாக உலக வரைப்படத்தில் வெற்றிகரமாக இணைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது.
    • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-பசுமை ஹைட்ரஜன் தொழில் தொடங்கப்பட உள்ளது.

    சென்னை:

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொள்ளவில்லை. வீடியோ மூலம் அவர் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

    முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு அறிவுசார், பாரம்பரியத்தில் சிறந்து விளங்கும் மாநிலம். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக உள்ளது.

    ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-பசுமை ஹைட்ரஜன் தொழில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆலை அடுத்த வாரம் தொடங்கப் பட உள்ளது.

    தமிழகத்தில் ஜியோவின் 300 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. ஜியோ வாடிக்கையாளர்களாக 3.5 கோடி பேர் உள்ளார்கள். இதில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளோம்.

    தமிழகத்தில் ஜியோ நிறுவனம் 5 ஜி சேவையை கடந்த மாதமே முழுமையாக வழங்க தொடங்கிவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஹிண்டர்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் அதானி குழுமத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
    • அதானியின் நிகர மதிப்பு நேற்று ஒரே நாளில், 7.6 பில்லியன் அதிகரித்தது.

    புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவில் பல மாதங்களாக முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி கவதம் அதானி முதல் இடத்தை பெற்றுள்ளார்.

    அதானியின் நிகர மதிப்பு நேற்று ஒரே நாளில், 7.6 பில்லியன் அதிகரித்து, தற்போது 97.6 பில்லியனாக உள்ளது.

    ஹிண்டர்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் அதானி குழுமத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, நேற்று ஒரே நாளில் அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.

    • கடந்த 2023-ம் ஆண்டு புதிதாக 26 பேர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
    • 2023-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் அம்பானி, இந்தியாவின் கோடீஸ்வரர் அட்டவணையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    மும்பை:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறை முக்கிய பங்காற்றி வரும் நிலையில் தனியார் நிறுவனங்களின் அசுர வளர்ச்சி காரணமாக நாட்டின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இதே நேரத்தில் நாட்டில் உள்ள பணக்காரர்கள் பட்டியலிலும் புதிதாக பலர் இடம்பெறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு புதிதாக 26 பேர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 2022-ம் ஆண்டு முதலிடத்தில் இருந்த கவுதம் அதானி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மீண்டும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற பெருமையை மீண்டும் தக்க வைத்துள்ளார்.

    இதன் காரணமாக இந்திய பணக்காரர்களின் தரவரிசை 2023-ல் 152 ஆக உயர்ந்துள்ளது அவர்களின் மொத்த நிகர பண மதிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் முன்னோடியில்லாத வகையில் 858.3 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து (126) பில்லியனர் ஊக்குவிப்பாளர்களின் எண்ணிக்கையில் 21 சதவிகிதம் அதிகரிப்பையும், முந்தைய ஆண்டை விட (சுமார் 739 பில்லியன் டாலர்) அவர்களின் மொத்த நிகர மதிப்பில் 16 சதவிகித உயர்வையும் குறிக்கிறது.

    இந்த கோடீஸ்வரர்களின் நிறுவனங்களில் தங்கள் குடும்பத்தின் பங்குகளின் சந்தை மதிப்பின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதால், 2023-ல் 16.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நிகர மதிப்பில் 15.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 26 பேர் இடம் பெற்றுள்ளது 2023-ம் ஆண்டின் பில்லியனர் கிளப்பின் ஜனநாயக மயமாக்கலை வெளிப்படுத்துகிறது. புதிய உறுப்பினர்கள் இடம் பிடித்ததின் காரணமாக ஒட்டுமொத்த நிகர மதிப்பில் முதல் 3 இடங்களை பிடித்த கோடீஸ்வர நிறுவனங்களின் பங்கு குறைந்து வருகிறது.

    நாட்டின் 2 முதன்மையான பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோர் மற்ற அனைத்து கோடீஸ்வரர்களின் மொத்த நிகர மதிப்பில் 25.5 சதவிகிதம் ஆகும்.

    2023-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் அம்பானி, இந்தியாவின் கோடீஸ்வரர் அட்டவணையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் அதானி, 2022-ல் முதல்முறையாக பட்டியலில் முதலிடத்தை பிடித்த நிலையில் அம்பானியின் நிகர மதிப்பு 4.7 சதவீதம் உயர்ந்து 112.4 பில்லியன் டாலரை எட்டியிருந்தது.

    இந்த நிலையில் 2023-ம் ஆண்டில் அதானி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதுபோல கடந்த 2022-ல் நாடார் அவென்யூ சூப்பர்மார்ட்சின் ராதாகிஷன் தமானியை விஞ்சி இந்தியாவின் 3-வது பணக்கார தொழிலதிபர் ஆனார், நிகர மதிப்பு 29.3 பில்லியன் டாலர். இது 2022 இறுதியில் (21.75 பில்லியன்) 34.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

    எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ராதாகிஷன் தமானி 2023-ல் பிசினஸ் ஸ்டாண்டர்ட் கோடீஸ்வரர் பட்டியலில் 4-வது இடத்திற்கு சரிந்தார். அவரை தொடர்ந்து விப்ரோவின் அசிம் பிரேம்ஜி இப்போது இந்தியாவின் 5-வது பணக்காரராக உள்ளார். அவரது நிகர மதிப்பு 21.8 பில்லியன் டாலராக உள்ளது.

    மேலும் இந்திய பணக்காரர்கள் தரவரிசையில் முதல் 10 பேர் பட்டியலில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் ஏசியன் பெயிண்ட்சின் மாலவ் டானி, அம்ரிதா வக்கீல் மற்றும் மனிஷ் சோக்ஸி (ஒருங்கிணைந்த நிகரம்) மதிப்பு 20.8 பில்லியன் டாலர்), சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் திலீப் எஸ்.ஷங்வி (20.7 பில்லியன் டாலர்), பார்தி ஏர்டெல்லின் சுனில் மிட்டல் ((20.2 பில்லியன் டாலர்), ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் சஜ்ஜன் ஜிண்டால் (18.9 பில்லியன் டாலர்) மற்றும் ராஜீவ் மற்றும் சஞ்சீவ் பஜாஜ், ராகுல் பஜாஜ் குழுமத்தின் (16.7 பில்லியன் டாலர்).

    2023-ல் ஐ.பி.ஓ. ஏற்றம் காரணமாக புதிய கோடீஸ்வரர்களும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மேன்கைண்ட் பார்மாவைச் சேர்ந்த ரமேஷ் சந்த் ஜுனேஜா இந்தியாவின் 25-வது பணக்கார தொழி லதிபர் ஆனார். கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக இடம் பிடித்தவர்கள் செலோ வேர்ல்டின் பிரதீப் ஜி ரத்தோட் (1.6 பில்லியன் டாலர்), ஆர்.ஆர்.கேபலின் திரிபுவன்பிரசாத் கப்ரா (1.3 பில்லியன் டாலர்), மற்றும் சிக்னேச்சர் குளோபலின் பிரதீப் குமார் அகர்வால் (1 பில்லியன் டாலர்) ஆகியோரும் அடங்குவர்.

    கடந்த 2023-ம் ஆண்டு தனியார் துறையில் பல்வேறு வளர்ச்சிகள் எட்டப்பட்டுள்ள நிலையில் பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 26 பேர் இடம் பிடித்துள்ளது இந்திய பணக்காரர்கள் பட்டியலில் புதிய வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • உலக அளவில் 15-வது இடத்தில் உள்ளார்.
    • அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரூ.5.99 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    புதுடெல்லி:

    உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் இந்திய பணக்காரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்டீரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 7 லட்சத்து 82 ஆயிரம் கோடி ஆகும். உலக அளவில் 15-வது இடத்தில் உள்ளார்.

    அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரூ.5.99 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் எச்.சி.எல். நிறுவன தலைவர் ஷிவ் நாடார் ரூ.2.58 லட்சம் கோடி சொத்துடன் உள்ளார். 4-வது இடத்தில் சாவித்திரி ஜிண்டால் (ரூ.2.40 லட்சம் கோடி), 5-வது இடத்தில் சைரஸ் பூனாவாலா (ரூ.1.83 லட்சம் கோடி), 6-வது இடத்தில் திலிப் ஷாங்வி (ரூ.1.66 லட்சம் கோடி), 7-வது இடத்தில் குமார் பிர்லா (ரூ.1.55 லட்சம் கோடி) 8-வது இடத்தில் ராதாகிருஷ்ணன் தாமணி (ரூ.1.49 லட்சம் கோடி), 9-வது இடத்தில் லட்சுமி மிட்டல் (ரூ.1.36 லட்சம் கோடி), 10-வது இடத்தில் குஷல் பால்சிங் (ரூ.1.25 லட்சம் கோடி) உள்ளனர்.

    • கொல்கத்தாவில் சர்வதேச வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது.
    • 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவன பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் சர்வதேச வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவன பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    மேற்கு வங்காள மாநிலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கு வங்காளத்தில் சுமார் 45,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மாநிலத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.20,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    ரிலையன்ஸ் அறக்கட்டளை கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலை புதுப்பிக்கும் ஒரு லட்சிய திட்டத்தை எடுத்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய கட்டமைப்புகள் உள்பட முழு கோவில் வளாகத்தையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    • முகேஷ் அம்பானிக்கு இ.மெயில் மூலம் தொடர் கொலை மிரட்டல் வந்தது.
    • அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த தெலுங்காவை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மும்பை:

    இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு சில தினங்களுக்கு முன் மர்ம நபர் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.

    அவர் அந்த இ.மெயிலில், "எனக்கு ரூ.20 கோடி பணம் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்" என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதுகுறித்து தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மும்பை கம்தேவி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, முகேஷ் அம்பானிக்கு மீண்டும் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. அவர் விடுத்த கொலை மிரட்டலில், "நான் ரூ.20 கோடிதான் கேட்டேன். ஆனால் எனக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன். நீங்கள் எனக்கு இனி ரூ.200 கோடி தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்" என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மும்பை போலீசாரும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில், அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த தெலுங்கானாவைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், தொடர்ந்து 5 முறை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    • முகேஷ் அம்பானிக்கு நேற்று மீண்டும் 2-வது முறையாக இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
    • தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டும் கொலை மிரட்டல் வந்தது.

    மும்பை:

    இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு நேற்று முன்தினம் மர்ம நபர் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.

    அவர் அந்த இ.மெயிலில், "எனக்கு ரூ.20 கோடி பணம் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்" என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதுகுறித்து தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மும்பை கம்தேவி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முகேஷ் அம்பானிக்கு நேற்று மீண்டும் 2-வது முறையாக இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. வெள்ளிக்கிழமை மிரட்டிய அதே நபர்தான் மீண்டும் மிரட்டல் விடுத்திருந்தார்.

    நேற்று 2-வது தடவை அவர் விடுத்த கொலை மிரட்டலில், "நான் ரூ.20 கோடிதான் கேட்டேன். ஆனால் எனக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன்.

    நீங்கள் எனக்கு இனி ரூ.200 கோடி தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்" என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இ.மெயில் எங்கிருந்து வந்திருக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மும்பை போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டும் கொலை மிரட்டல் வந்தது.

    அந்த மிரட்டலை விடுத்த பீகாரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த தடவை அம்பானியை மிரட்டியது யார்? என்று விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் எங்களிடம் சிறந்த துப்பாக்கி சுடும் நபர் உள்ளனர்
    • பணம் தராவிட்டால் கொலை செய்யப்படுவீர்கள் என இ-மெயில் மூலம் மிரட்டல்

    ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 27-ந்தேதி சதாப் கான் என பெயரிட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது.

    அதில் எங்களுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்காவிடில் உங்களை கொலை செய்வோம். இந்தியாவில் சிறந்த துப்பாக்கி சுடும் நபர்கள் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் அடையாளம் தெரியாத அந்த நபர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த வருடம் பீகாரில் இருந்து அம்பானி மற்றும் அவரது குடும்ப நபர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த ஆண்டு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு 2 புதிய கோடீஸ்வரா்கள் இந்தியாவில் உருவாகி வந்தனா்.
    • இந்தியாவில் 51 பணக்காரர்களின் சொத்துக்கள் நடப்பாண்டில் இரட்டிப்பாகி உள்ளது.

    மும்பை:

    இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவா் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளாா். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.8.08 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அதானி நிறுவனங்களின் தலைவா் கவுதம் அதானியின் சொத்துக்கள் 57 சதவீதம் சரிந்து ரூ.4.47 லட்சம் கோடியுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா். அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை காரணமாக அதானியின் சொத்து மதிப்பு சரிந்தது.

    'ஹுருன் இந்தியா' வெளியிட்டுள்ள இந்திய செல்வந்தா்களின் பட்டியலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

    2019-ம் ஆண்டு 6-வது இடத்தில் இருந்த அதானியின் சொத்துக்கள் நடப்பாண்டு 5 மடங்கு அதிகரித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 2.1 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அவர் இந்திய பணக்காரர்களில் மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளார்.

    மூன்றாம் இடத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவா் அதாா் பூனாவாலாவின் சொத்து மதிப்பு (ரூ.2.78 லட்சம் கோடி) மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

    எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவா் சிவ நாடாரின் சொத்து மதிப்பு 23 சதவீதம் அதிகரித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ.2.28 லட்சம் கோடி ஆகும். இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் வரிசையில் சிவ நாடார் 4-வது இடத்தில் உள்ளார்.

    இந்தியாவில் மொத்தம் 1,319 பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு 2 புதிய கோடீஸ்வரா்கள் இந்தியாவில் உருவாகி வந்தனா். தற்போது இந்த எண்ணிக்கை 259-ஆக உள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகமாகும்.

    இந்தியாவில் 51 பணக்காரர்களின் சொத்துக்கள் நடப்பாண்டில் இரட்டிப்பாகி உள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 24-ஆக இருந்தது.

    மும்பையை சோ்ந்த 328 பேரும், டெல்லியில் 199 பேரும், பெங்களூரில் 100 பேரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

    கோடீஸ்வர பணக்காரர்களை உருவாக்கும் முதல் 20 நகரங்களில் முதல் முறையாக திருப்பூரும் இடம் பெற்றுள்ளது.

    • முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது.
    • இதில் கலந்து கொள்ள பல்வேறு பாலிவுட் நடிகர், நடிகைகள் வருகை தந்தனர்.

    மும்பை:

    ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு மும்பையில் பிரமாண்ட வீடு உள்ளது. அன்டிலியா இல்லம் என அழைக்கப்படும் இந்த வீடு மொத்தம் 27 மாடிகளைக் கொண்டது. நீச்சல் குளம் முதல் ஹெலிபேட் வரை பல்வேறு ஆடம்பர வசதிகள் இங்கு உள்ளன.

    இந்நிலையில், இந்த அன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் வருகை தந்தனர்.

    நடிகர் சல்மான் கான், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக் நடிகை ரேகா, ஹேமமாலினி, தீபிகா படுகோன், ஜெனிலியா, அனன்யா பாண்டே, கரீஷ்மா கபூர், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரேவும் வருகை தந்தனர்.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஜவான் திரைப்பட இயக்குனர் அட்லி, அவரது மனைவி பிரியா ஆகியோரும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

    • முகேஷ் அம்பானிக்கு வலது கரம் என்று அழைக்கப்படு பவர் மனோஜ் மோடி.
    • மனோஜ் மோடிக்கு மும்பை நேபியர் சாலையில் உள்ள 22 மாடிகள் கொண்ட பிரமாண்ட வீட்டை முகேஷ் அம்பானி வழங்கி உள்ளார்.

    மும்பை:

    உலக பணக்காரர்களில் ஒருவரான இந்தியாவின் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமங்களின் தலைவராக உள்ளார்.

    இந்த நிலையில் முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    முகேஷ் அம்பானிக்கு வலது கரம் என்று அழைக்கப்படு பவர் மனோஜ் மோடி. இவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மனோஜ் மோடிக்கு மும்பை நேபியர் சாலையில் உள்ள 22 மாடிகள் கொண்ட பிரமாண்ட வீட்டை முகேஷ் அம்பானி வழங்கி உள்ளார்.

    1.7 லட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இந்த சொகுசு வீடு ரூ.1500 கோடி மதிப்புடையது. முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்தியபோதே மனோஜ் மோடி அந்நிறுவனத்தில் சேர்ந்தார்.

    மேலும் அம்பானி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வருகிறார். ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். அந்நிறுவனத்தின் பல ஒப்பந்தங்களுக்கு மூளையாக இருந்துள்ளார்.

    இதனால் மனோஜ் மோடிக்கு பல கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை பரிசாக முகேஷ் அம்பானி வழங்கி உள்ளார்.

    ×