search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரியம்"

    • தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின்பாதைகள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
    • இதேபோல் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின்பாதைகள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    எனவே அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன்சாலை, தென்றல் நகர், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதர் நகர் ஆகிய இடங்களிலும், திலகர் திடல் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம் ஆகிய பகுதிகளிலும், வண்டிக்கார தெரு மின்பாதையில் மின்வினியோகம் பெறும் ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர் நோம்புச்சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெள்ளைபிள்ளையார் கோவில், சேவியர் நகர், சோழன் நகர், ஆகிய இடங்களிலும், சர்க்யூட் ஹவுஸ் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் ஜி.ஏ.கெனல் சாலை, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் சாலை, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பர்மா பஜார், ஜுபிடர் தியேட்டர் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு ஆகிய பகுதிகளிலும், கீழவாசல் மின்பாதையில் பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரதெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜ பாளையம் ஆகிய பகுதிகளிலும், வ.உ.சி.நகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் இடங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 40 மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள், கலெக்டரிடம் முறையிட்டனர்.
    • தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்தில், பணி நிரந்தரம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் :

    மின்வாரியத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள், தொழிலாளர் சட்ட விதிகளின்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென போராட துவங்கி விட்டனர்.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 40 மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள், கலெக்டரிடம் இதுகுறித்து முறையிட்டனர்.தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்திலும், பணி நிரந்தரம் கோரிவிண்ணப்பித்துள்ளனர்.

    இதையடுத்து தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராக வந்திருந்தனர்.தற்காலிக பணியாளர்கள் -உதவி கமிஷனர் மலர்க்கொடி வந்திருந்தனர். அடுத்த மாதம் 2-ந்தேதி தேதி மாலை 3 மணிக்கு, அசல் ஆவணங்களுடன் ஆஜரானால், பணிநிரந்தரம் கோருவது தொடர்பாக உத்தரவிடப்படும் என உதவி கமிஷனர் அவகாசம் வழங்கியுள்ளார்.

    • பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக மதுரை மின்வாரிய உயர் அதிகாரி குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கொண்டல்ராஜ், மதுரை தலைமை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக (பாதுகாப்பு) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    மதுரை

    மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் வர்ஷா (வயது 24). இவர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

    நான் பி.எஸ்.சி. பேஷன் டிசைனிங் படித்து உள்ளேன். எனது தந்தை கே.புதூரில் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் எனக்கு ஜனார்த்தனன் என்பவருடன் திருமணமா னது. அப்போது என் வீட்டார் சார்பில் 23 லட்சம் ரூபாய் செலவில் நிலம் ஒன்றை வாங்கி கொடுத்தோம். திருமணத்தின்போது 300 பவுன் நகை வரதட்ச ணையாக கொடுக்கப்பட்டது. இது தவிர 15 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கணவர் ஜனார்த்தனன் தினந்தோறும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு அவரது தந்தை கொண்டல்ராஜ் மற்றும் தாய் சுமதி ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    எனது தந்தை பெயரில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை, என் பெயருக்கு மாற்ற வேண்டுமென்று ஜனார்த்தனன் தொந்தரவு செய்து வந்தார். எனவே நான் தற்கொலை முயற்சி செய்தேன். அப்போது என்னை உறவினர்கள் காப்பாற்றினார்கள். எனக்கு வரதட்சணை கொடுமை செய்துவரும் ஜனார்த்தனன், கொண்டல்ராஜ் மற்றும் சுமதி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    எனவே இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் அக்பர்கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொண்டல்ராஜ், மதுரை தலைமை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக (பாதுகாப்பு) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    • பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.
    • திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள்.

    திருப்பூர் :

    பருவமழை பெய்ய தொடங்கி இருப்பதால் மின் விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டுமென மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது.மின் கம்பி அறுந்தாலோ, கம்பி ஆபத்தான நிலையில் இருந்தாலோ அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்*ன்டை.

    மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய பணியாளர் மூலமாக மட்டுமே சரி செய்து கொள்ள வேண்டும். வெளியாட்களை கொண்டு மின்கம்பத்தில் வேலை செய்ய கூடாது. கால்நடைகளை மின்கம்பம் அல்லது இழுவை கம்பிகளில் கட்டி வைக்கக்கூடாது. இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் நிற்கக்கூடாது.மின்கம்பி, மரங்கள், உலோக கம்பி வேலி இல்லாத தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும்.

    மிக உயரமான வாகனங்களை மின் கம்பி குறுக்கே செல்லும் பாதையில் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.பண்ணைகள், வயல்களில் மின் வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றம். அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே வயரிங் செய்ய வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய, 3பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலம் மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

    மின் கசிவு தடுப்பானை(இ.எல்.சி.பி.,), மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்க்கலாம். சுவிட்ச்கள், பிளக்குகள் போன்றவற்றை எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

    மின் கம்பத்துக்காக போடப்பட்ட, ஸ்டே கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். குளியல் அறை, கழிப்பறை மற்றும் ஈரமான இடங்களில் சுவிட்ச் பொருத்தக்கூடாது. மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீ விபத்து மின்சாரத்தால் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மெயின் சுவிட்ச்சை நிறுத்திவிட வேண்டும்.

    இடி அல்லது மின்னலின் போது, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி மற்றும் செல்போன் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது. மேலும் திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள். ஜன்னல், இரும்பு கதவு ஆகியவற்றை தொடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் ஸ்டாலின்பாபு கூறுகையில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.பேரிடர்கால மின்தடை தகவல்களுக்கும், புகார்களுக்கும், 94987 94987 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார்.

    ×