search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் அதிகாரி"

    • ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் ஈரோடு போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
    • ஊழியரை அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெருந்துறை:

    பெருந்துறை சுள்ளி பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). இவர் கடந்த 20 வருடங்களாக பெருந்துறை அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நடராஜன் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் மண்டல மேலாளரை சந்திக்க சென்றார். அப்போது பணி சம்பந்தமாக வணிக மேலாளர் நடராஜனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த அவர் பெருந்துறை போக்குவரத்து கழக கிளை அலுவலகம் வந்தார். இதையடுத்து அவர் அங்கு சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதைப் பற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை கிளை அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் சுமார் 80 பேர் நள்ளிரவில் பணிமனை நுழைவு வாயில் பகுதியில் திரண்டர். இதை தொடர்ந்து அவர்கள் சக ஊழியரை அவமானப்படுத்தி அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனின் மருத்துவ செலவை அவரே ஏற்க வேண்டும். இல்லை என்றால் இன்று அதிகாலை முதல் பெருந்துறை கிளை பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று கூறி அந்த பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் ஈரோடு போக்குவரத்து கழக பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் ஈரோடு போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் யுவராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் ஊழியரை அவதூறாக பேசிய வணிக மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சை பெற்று வரும் டிரைவரின் மருத்துவச் செலவினை போக்குவரத்து கழகமே கவனித்து கொள்ளும் என்றும் கூறினர். இதை யடுத்து அவர்களுக்கிடையே சமரசம் ஏற்பட்டு போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

    • பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக மதுரை மின்வாரிய உயர் அதிகாரி குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கொண்டல்ராஜ், மதுரை தலைமை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக (பாதுகாப்பு) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    மதுரை

    மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் வர்ஷா (வயது 24). இவர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

    நான் பி.எஸ்.சி. பேஷன் டிசைனிங் படித்து உள்ளேன். எனது தந்தை கே.புதூரில் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் எனக்கு ஜனார்த்தனன் என்பவருடன் திருமணமா னது. அப்போது என் வீட்டார் சார்பில் 23 லட்சம் ரூபாய் செலவில் நிலம் ஒன்றை வாங்கி கொடுத்தோம். திருமணத்தின்போது 300 பவுன் நகை வரதட்ச ணையாக கொடுக்கப்பட்டது. இது தவிர 15 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கணவர் ஜனார்த்தனன் தினந்தோறும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு அவரது தந்தை கொண்டல்ராஜ் மற்றும் தாய் சுமதி ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    எனது தந்தை பெயரில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை, என் பெயருக்கு மாற்ற வேண்டுமென்று ஜனார்த்தனன் தொந்தரவு செய்து வந்தார். எனவே நான் தற்கொலை முயற்சி செய்தேன். அப்போது என்னை உறவினர்கள் காப்பாற்றினார்கள். எனக்கு வரதட்சணை கொடுமை செய்துவரும் ஜனார்த்தனன், கொண்டல்ராஜ் மற்றும் சுமதி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    எனவே இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் அக்பர்கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொண்டல்ராஜ், மதுரை தலைமை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக (பாதுகாப்பு) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    ×