search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி பலி"

    • பரிசோதித்த டாக்டர்கள் இன்னாச்சி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி பகுதியை சேர்ந்தவர் இன்னாச்சி (வயது38). எலக்ட்ரீஷியன். நேற்று அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இடையடுத்து அவர் அருகே உள்ள டிரான்ஸ்பாரம் அருகே சென்றுள்ளார். அப்போது எதிர்பாரவிதமாக டிரான்ஸ்பாரம் அருகே மின் கசிவால் மின்சாரம் பாய்ந்து இன்னாச்சி தூக்கி வீசப்பட்டார்.

    மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்னாச்சியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இன்னாச்சி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    • வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பள்ளிப்பட்டு சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சாமுவேல் (வயது 38).

    இவர் கிரி சமுத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.

    வழக்கம்போல் தொழிற்சாலைக்கு இன்று காலை வேலைக்கு சென்றார். தொழிற்சாலையில் ஏராளமான எலக்ட்ரிக் மெஷின்கள் உள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணியில் சாமுவேல் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் சாமுவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமுவேல் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மின்வேலி அமைத்தனர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானைகளை மீட்டனர்

    திருப்பதி:

    ஒடிசாவில் இருந்த வந்த 6 காட்டு யானைகள் ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாமினி மண்டலத்தில் சுற்றித்திரிந்தன.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

    இந்நிலையில், யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மின்வேலி அமைத்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை பார்வதிபுரம் அடுத்த கத்ரகெடா கிராமத்திற்குள் 6 யானைகள் புகுந்தன. உணவைத் தேடி விளைநிலங்களை நோக்கி வந்த யானைகள் மீது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் உரசியது இதில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் பலியாகின. 2 யானைகள் உயிர்தப்பின.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானைகளை மீட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாங்காய் பறித்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள ஆராத்திரி வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 46). இவர் சென்னையில் கண்ணகி நகரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று பிரகாசம் அவரது தம்பி மோகன் இருவரும் சொந்த கிராமமான ஆராத்திரி வேலூருக்கு வந்தனர். பிரகாசம் அவரது வீட்டில் இருந்த மாங்காய் மரத்தில் மாங்காய் பறிப்பதற்கு வீட்டு மாடியில் ஏறினார்.

    மாங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது மாடியில் இருந்த மின்சார ஒயரில் தவறுதலாகபட்டது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பிரகாசம் இறந்தார்.

    இதுகுறித்து பிரகாசம் மனைவி திலகவதி மோரணம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரோந்து போலீசார் விரைந்து வந்து காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • செல்போனை சார்ஜரில் போட்டபடி பேசிய வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    பழைய வண்ணாரப்பேட்டை, கெனால் தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது22). இவர் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்தபடி வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று மாலை அவர் மெரினா கடற்கரைக்கு சென்றார். பின்னர் இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது செல்போனில் சார்ஜ் குறைந்து இருந்தது.

    இதைத்தொடர்ந்து காமராஜ், தனது செல்போனை சார்ஜரில் போட்டபடி அதில் நண்பர் ஒருவரிடம் பேசினார். இதில் காமராஜ் மீது மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அருகில் வசிப்பவர்கள் போலீஸ் கட்டுpபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து போலீசார் விரைந்து வந்து காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செல்போனை சார்ஜரில் போட்டபடி பேசிய வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • புவனகிரி பகுதியில் நேற்றிரவு மழை பெய்தது.

    புவனகிரி:

    புவனகிரி அடுத்த கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 45). கொத்தனார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் நேற்று இரவு புவனகிரி அருகே குரியாமங்கலம் சாலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்றார். அங்கு மதுபானத்தை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தார்.

    புவனகிரி பகுதியில் நேற்றிரவு திடீர் மழை பெய்தது. இதனால் டாஸ்மாக் கடையிலேயே நின்றார். டாஸ்மாக் கடையில் இருந்த இரும்பு கம்பத்தை பிடித்து நின்றார். அதிலிருந்து வந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைக் கண்ட மற்ற குடிமகன்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    அங்கு வந்த ஒரு சிலர், இந்த கம்பத்திலிருந்து மின்சாரம் வருகிறது என்று நாங்கள் ஒரு மணிநேரத்திற்கு முன்பே கூறினோம். நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் ராஜாராமன் மின்சாரம் தாக்கி இறந்திருக்கமாட்டார் என்று டாஸ்மாக் ஊழியர்க ளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார், ராஜாராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி அங்கு வந்தார். மின் கசிவினை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இல்லையேல் கடையை திறக்க கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • பள்ளிகொண்டாவில் விவசாயிகளை ஏமாற்றி வீடுகள் நிலங்களை பறித்துள்ளனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

    விவசாய கூட்டத்துக்கு அணைக்கட்டு தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பொன்முருகன், தலைமையிடத்து துணை தாசில்தார் குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    விவசாயிகளுக்காக நடத்தப்படும் ஜமாபந்தி விழாவில் அரசிய ல்வாதிகள் தலையிட்டால் விவசாயிகள் புறக்கணிக்க ப்படுகிறார்கள். எனவே, இந்த ஆண்டு நடைபெறும் ஜமாபந்தி விழாவில் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

    அனைத்து தாலுகாவிலும் மழை மானியம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டு தாலுகாவில் மழை மானியம் இல்லாததால் விவசாயிகள் எந்த அளவிற்கு மழை பெய்தது, எந்த அளவில் பாதிப்ப டைந்துள்ளது என தெரியாமல் உள்ளனர். ஆகவே அணைக்கட்டு தாலுகாவில் மலைப்பகுதியில் மழை மானியம் வைக்க வேண்டும்.

    பட்டா நிலத்தில் செங்கல் சூளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். 6 மாதகாலமாக அனுமதி கேட்டு விவசாயிகள் தாலுகா அலுவலகம் வந்து செல்வது வேதனை அளிக்கிறது. அணைக்கட்டு தாலுகாவில் ஒரே மாதத்தில் 4 பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    பள்ளிகொண்டாவில் விவசாயிகளை ஏமாற்றி வீடுகள் நிலங்களை பறித்துள்ளனர். அதற்க்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மலைப்பகுதிகளில் முள் இல்லா மூங்கில் மரங்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் வனவி லங்குகள் பாதிப்படையாமல் அங்கேயே இருக்கும் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க உதவும், மேலும் நாட்டு ரக காளைகளின்

    சினை ஊசிகளை கால்நடை மருத்துவர்கள் கிராம பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

    அதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை களுக்கு அதிகாரிகள் பதிலளித்து பேசினர். கூட்டத்தில் சில துறை அதிகாரிகள் மட்டுமே கலந்துக்கொண்டு இருந்தனர். பல துறை அதிகாரிகள் வராமல் இருந்ததால் அங்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காமளே இருந்தது. எனவே அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்துக்கு அணைத்து துறை அதிகா ரிகள் கலந்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்பர் செல்வகுமார் (வயது 74).

    இவர் பஞ்சலிங்கபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். இவர் இன்று காலை தனது வீட்டின் அருகில் உள்ள தோப்புக்கு சென்றார். அப்போது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இந்த மின்கம்பியை அவர் மிதித்து உள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதனால் மயங்கி நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிரகப்பிரவேசம் முடிந்து மதியம் 1.30 மணியளவில் விருந்தினர்கள் மதிய உணவு சாப்பிட பந்தலுக்கு கீழ் நாற்காலிகளில் அமர்ந்தனர்.
    • மின்சார ஒயர் அறுந்து இரும்பு மேசையின் மீது விழுந்தது. சாப்பிட உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம், பெட்டிப்பா சமுத்திரம் மண்டலம், கனுகமாகுலப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டி . இவர் அப்பகுதியில் புதியதாக வீடு கட்டி நேற்று கிரகப்பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.

    கிரகப்பிரவேசத்திற்கு தனது உறவினர்கள் நண்பர்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்தவர்கள் உணவு அருந்துவதற்காக வீட்டின் அருகிலேயே சாமியான பந்தல் போடப்பட்டிருந்தது.

    நேற்று காலை கிரகப்பிரவேசம் முடிந்து மதியம் 1.30 மணியளவில் விருந்தினர்கள் மதிய உணவு சாப்பிட பந்தலுக்கு கீழ் நாற்காலிகளில் அமர்ந்தனர்.

    அப்போது திடீரென வீசிய பலத்த காற்றால் பந்தலின் ஒருபுறம் காற்றில் பறந்தது. டியூப்லைட் கட்டப்பட்டிருந்த மின்சார ஒயர் அறுந்து இரும்பு மேசையின் மீது விழுந்தது. சாப்பிட உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.கொத்தப்பள்ளியை சேர்ந்த சின்ன லட்சுமம்மா (வயது 70), விஜயபிரசாந்த் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோட்டகோட்டையைச் சேர்ந்த லட்சுமணா (53), சாந்தகுமாரி (54) ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்.

    கனுகமாகுலப்பள்ளியைச் சேர்ந்த திம்மையா, மூலக்கல்செருவைச் சேர்ந்த சுனிதா, ஓடிகிலோல்லப்பள்ளியைச் சேர்ந்த சுப்பம்மா (70) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மதனப்பள்ளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவொற்றியூர் ஒத்தவாடை தெருவில் தனியாருக்கு சொந்தமான சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.
    • மின்சாரம் தாக்கி ரவி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் ஒத்தவாடை தெருவில் தனியாருக்கு சொந்தமான சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த தொழிலாளி ரவி (வயது19) வேலை பார்த்து வந்தார். இவர் திருவொற்றியூர் கார்கில் நகரில் தங்கி இருந்தார். நேற்று உருளைக்கிழங்கு சிப்ஸ் போடுவதற்காக மெஷினை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ரவி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • நெல் விதைத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிபேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 58) விவசாயி.இவர் விவசாய நிலங்களில் விதை நெல்லை விதைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

    ஞானராஜ் நேற்று மதியம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தனது மகனுடன் விதை நெல்லை விதைத்து கொண்டிருந்தார்.

    அப்போது, நிலத்தின் ஒரு பகுதியில் இருந்து மின்மோட்டாருக்காக மின்சாரம் கொண்டு செல்ல அமைக்கப்பட்டு இருந்த சேதமடைந்த மின்ஒயரில் எதிர்பாராதவிதமாக ஞானராஜ் தவறி விழுந்துள்ளார்.

    இதனால் மின்சாரம் பாய்ந்து ஞானராஜ் கீழே விழுந்தார். அவரது மகன் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஞானராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மத்துார் கிராமத்தில் கட்டிய புதுவீட்டிற்கு மின் விளக்குகள் அலங்காரம் செய்வதற்காக கிஷோர் சென்றார்.
    • வீட்டின் மாடியின் மீது அலங்கார விளக்குகள் அமைக்கும் போது, அருகே சென்ற மின் வயர் அறுந்து கிடந்தது.

    திருத்தணி:

    திருத்தணியை அடுத்த மத்தூர் காலனியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிஷோர் (வயது 17). மத்தூர் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

    இவர் பொதுத் தேர்வு எழுதி இருந்தார். தற்போது விடுமுறை என்பதால், கிஷோர் தனது உறவினர் ஒருவருடன் திருவிழா மற்றும் புதுமனை புகுவிழா நடக்கும் வீடுகளுக்கு ரேடியோ மற்றும் மின்விளக்குகள் அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தார்.

    இந்த நிலையில் மத்துார் கிராமத்தில் கட்டிய புதுவீட்டிற்கு மின் விளக்குகள் அலங்காரம் செய்வதற்காக கிஷோர் சென்றார்.

    அப்போது வீட்டின் மாடியின் மீது அலங்கார விளக்குகள் அமைக்கும் போது, அருகே சென்ற மின் வயர் அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காத கிஷோர் வயர் மீது கால் வைத்தார்.

    இதில் மின்சாரம் பாய்ந்து கிஷோர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மின்சாரம் தாக்கியதில் மாணவன் கிஷோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×