search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி பலி"

    • சத்யா பதறியபடி விரைந்து வந்து தனது குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
    • ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உள்ள எடப்பட்டி பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் நதியா.

    இவரது சகோதரி சத்யா (வயது 23). இவர் அரியலூர் மாவட்டம் செந்துறையில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரது 2 குழந்தைகளை தனது சகோதரி நதியா வீட்டில் விட்டிருந்தார். அதில் 2½ வயது குழந்தை ஹரிகிருஷ்ணன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது தையல் மிஷினுக்கு வைத்திருந்த சுவிட்ச் பாக்ஸ் பிளக்கில் திடீரென கை வைத்தான். இதில் மின்சாரம் தாக்கி அலறியபடி கீழே விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நதியா குழந்தையை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நதியா தனது சகோதரி சத்யாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சத்யா பதறியபடி விரைந்து வந்து தனது குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் இருந்து 4 சாமிகளின் வீதிஉலா நடைபெற்றது.
    • படுகாயம் அடைந்த திருமுருகன், ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி பகுதியில் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 10 நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் கோவிலில் ஆடிமாத பிரம்மோற்ச விழா கடந்த 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. முன்னதாக விழாவில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் விழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் இரவில் கோவிலில் இருந்து அங்காளம்மன், அய்யனார், முத்தாலம்மன், முருகன், உள்ளிட்ட சாமிகள் 4 வாகனங்களில் ஊரை சுற்றி வலம்வரும் வீதிஉலா நடக்கும்.

    அதேபோல் நேற்று இரவு கோவிலில் இருந்து 4 சாமிகளின் வீதிஉலா நடைபெற்றது. இதில் கோவில் நடுத்தெருவில் இருந்து வீதிஉலா தொடங்கி 3 சாமிகள் தேர்களில் வடக்கு தெரு பகுதிக்கு வந்தன. கடைசியாக 4 வதாக வந்த தேர் சாலை ஓரத்தில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியது. உடனே தேரில் மின்சாரம் பாய்ந்து அதிலிருந்த 3 பேர் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்டதில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் கோகுல கிருஷ்ணன் (வயது 17) உடல் கருகி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். மேலும் வேல்முருகன் மகன் திருமுருகன், ஜானகிராமன் மகன் ராஜேஷ் ஆகியோர் பலத்த படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேரில் மின்சாரம் தாக்கி இறந்த கோகுல கிருஷ்ணணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் படுகாயம் அடைந்த திருமுருகன், ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற இருந்த நிலையில் நேற்று நடந்த வீதிஉலா நிகழ்ச்சியில் தேரில் மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சுலோச்சனா மின்சாரம் தாக்கி பலியானார்.
    • பலத்த காயம் அடைந்த மாணவன் சபரிவாசனுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது50). இவரது பேரன் சபரிவாசன்(13).

    அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் சுலோச்சனா பேரனை பள்ளிக்கு செல்ல வெளியே அழைத்து வந்து விட்டு அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலையும் வழக்கம் போல் சுலோச்சனா, பேரன் சபரிவாசனுடன் அதே பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது மின்கம்பத்தில் இருந்த உயர்மின்அழுத்த கம்பி திடீரென அறுந்து சுலோச்சனா மீது விழுந்தது. இதில் சுலோச்சனா மின்சாரம் தாக்கி பலியானார். அருகில் நின்ற சபரிவாசனும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னரே மின்வாரிய அதிகாரிகள் வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து பலியான சுலோச்சனாவின் உடலை மீட்டு பிரசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த மாணவன் சபரிவாசனுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கொடி வைத்திருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.
    • போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி அருகே உள்ள பெட்டர்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெட்கோ கிராமத்தில் மொகரம் ஊர்வலம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் அந்த கிராமத்து இளைஞ்சர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் இரும்பிகளில் கொடிகளை கட்டி வந்தனர்.

    அந்த கொடிமேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கியது. இதனால் கொடி வைத்திருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 4 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    • மின்சாரம் தாக்கியதில் கவுதம் கார்த்திக் இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர், தேவி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் கார்த்திக்(33). தனியார் கேபிள் நெட்வொர்க்கில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு அவர் வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நெட்வொர்க் கேபிள் வயரை செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பாரமர் மீது கேபிள் வயர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் கவுதம் கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விபத்தில் பழனிசாமியின் கால் ஒன்று கருகி துண்டானது. மேலும் இந்த சம்பவத்தில் பசுமாடு ஒன்றும் மின்சாரம் தாக்கி இறந்தது.
    • தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மருங்காபுரி வளநாடு அருகே உள்ள கண்ணுக்குழி கல்லாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 54). இவர் அந்த ஊராட்சியில் தண்ணீர் திறப்பாளராக (வாட்டர் போர்டு ஆப்பரேட்டர்) வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அவரது வீட்டின் அருகே நள்ளிரவில் உயரழுத்த மின்கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து அங்குள்ள இரும்பு கம்பி வேலியின் மீது விழுந்தது. இதில் அந்த கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இது தெரியாமல் கம்பி வேலியை தொட்ட பழனிசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். இந்த விபத்தில் பழனிசாமியின் கால் ஒன்று கருகி துண்டானது. மேலும் இந்த சம்பவத்தில் பசுமாடு ஒன்றும் மின்சாரம் தாக்கி இறந்தது.

    மேற்கண்ட சம்பவம் தெரியாமல் அவரது குடும்பத்தினர் இரவு தூங்கினர். காலையில் பழனிசாமியும், பசு மாடும் உடல் கருகி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினர். பின்னர் இதுகுறித்து வளநாடு போலீசாருக்கும் மின்வாரியத்தினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்த மருங்காபுரி தாசில்தார் மற்றும் வருவாய்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    • வீட்டில் இருந்த மிக்சியை குப்பன் பழுது பார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கி குப்பன் பலியானார்.
    • பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம் அருகே உள்ள பனையஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன்(வயது23). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு நர்மதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தற்போது நர்மதா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்தநிலையில் வீட்டில் இருந்த மிக்சியை குப்பன் பழுது பார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கி குப்பன் பலியானார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ந்து 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளப்பாளையம், டெலிபோன் நகர், விரிவாக்க வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜனனி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், சாய் தர்ஷன் (9) என்ற மகனும் உள்ளனர். இதில் சாய் தர்ஷன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4 -ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில் நேற்று இரவு சாய் தர்ஷன் தனது நண்பர்களுடன் வீட்டில் அருகே உள்ள பகுதியில் விளையாடு கொண்டு இருந்தான். அங்கு மின் கம்பம் இருந்தது. அதன் அருகே நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அப்போது சாய் தர்ஷன் விளையாட்டு ஆர்வத்தால் மின் கம்பத்தில் இருந்த ஸ்டே வயரை பிடித்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக சாய் தர்ஷனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    இதில் படுகாயம் அடைந்த சாய் தர்ஷனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சாய் தர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    பின்னர் மாணவனின் உடலை அவரது பெற்றோர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கோபி செட்டிபாளையம் போலீசார் மாணவனின் வீட்டுக்கு வந்து அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாணவனை மின்சாரம் தாக்கிய போது அந்த பகுதியில் மின்விநியோகம் தடைப்பட்டது. பின்னர் மின் ஊழியர்கள் அங்கு வந்து மின் இணைப்பை சரி செய்தனர். மின்சாரம் பாய்ந்து 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
    • தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    மேடவாக்கம் அடுத்த ஜல்லடியான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 45). எலக்ட்ரீசியன். இவர் தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம், கருணாநிதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதன பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றார்.

    அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தசாமி பரிதாபமாக இறந்தார்.

    • காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டம் குமார்காட் நகரில் இன்று ஜெகன்னாதர் ரத யாத்திரை நடைபெற்றது. இரும்பினால் செய்யப்பட்ட ரதத்தை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். ரதம் சவுமுகானி பகுதியில் சென்றபோது உயர் அழுத்த மின் கம்பியில் ரதம் உரசியது. அப்போது ரதத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் ரதம் இழுத்த பக்தர்கள் பலத்த மின் தாக்குதலுக்கு உள்ளாகி தூக்கி வீசப்பட்டனர். அத்துடன் ரதமும் தீப்பற்றியது.

    இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குமார்காட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். அத்துடன், நேரில் பார்வையிடுவதற்காக குமார்காட் சென்றுகொண்டிருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • தங்கவேல் உடல் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையம் அப்துல் கலாம் வீதியை சேர்ந்தவர் தங்கவேல் (50). இவர் மின்வாரிய பவானி மேற்கு அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இவர் இன்று அதிகாலை பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பர்மரில் மின் பழுது ஏற்பட்டு உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவர் மற்றும் சந்திரன் ஆகியோர் பழுதை சரி செய்ய சென்றனர். அப்போது சந்திரன் கீழே நின்று கொண்டு இருந்தார்.

    தங்கவேல் டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது சரிசெய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து தங்கவேல் உடல் பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசாருக்கு உடனே அங்கு வந்து சதீஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் லக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 29). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி கொண்டப்பநாயன அள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது அங்குள்ள ஒரு மின்மோட்டாரை ஆன் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த குருபரபள்ளி போலீசாருக்கு உடனே அங்கு வந்து சதீஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×