search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Died due to electrocution"

    • மாங்காய் பறித்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள ஆராத்திரி வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 46). இவர் சென்னையில் கண்ணகி நகரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று பிரகாசம் அவரது தம்பி மோகன் இருவரும் சொந்த கிராமமான ஆராத்திரி வேலூருக்கு வந்தனர். பிரகாசம் அவரது வீட்டில் இருந்த மாங்காய் மரத்தில் மாங்காய் பறிப்பதற்கு வீட்டு மாடியில் ஏறினார்.

    மாங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது மாடியில் இருந்த மின்சார ஒயரில் தவறுதலாகபட்டது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பிரகாசம் இறந்தார்.

    இதுகுறித்து பிரகாசம் மனைவி திலகவதி மோரணம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • பள்ளிகொண்டாவில் விவசாயிகளை ஏமாற்றி வீடுகள் நிலங்களை பறித்துள்ளனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

    விவசாய கூட்டத்துக்கு அணைக்கட்டு தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் பொன்முருகன், தலைமையிடத்து துணை தாசில்தார் குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    விவசாயிகளுக்காக நடத்தப்படும் ஜமாபந்தி விழாவில் அரசிய ல்வாதிகள் தலையிட்டால் விவசாயிகள் புறக்கணிக்க ப்படுகிறார்கள். எனவே, இந்த ஆண்டு நடைபெறும் ஜமாபந்தி விழாவில் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

    அனைத்து தாலுகாவிலும் மழை மானியம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டு தாலுகாவில் மழை மானியம் இல்லாததால் விவசாயிகள் எந்த அளவிற்கு மழை பெய்தது, எந்த அளவில் பாதிப்ப டைந்துள்ளது என தெரியாமல் உள்ளனர். ஆகவே அணைக்கட்டு தாலுகாவில் மலைப்பகுதியில் மழை மானியம் வைக்க வேண்டும்.

    பட்டா நிலத்தில் செங்கல் சூளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். 6 மாதகாலமாக அனுமதி கேட்டு விவசாயிகள் தாலுகா அலுவலகம் வந்து செல்வது வேதனை அளிக்கிறது. அணைக்கட்டு தாலுகாவில் ஒரே மாதத்தில் 4 பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    பள்ளிகொண்டாவில் விவசாயிகளை ஏமாற்றி வீடுகள் நிலங்களை பறித்துள்ளனர். அதற்க்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மலைப்பகுதிகளில் முள் இல்லா மூங்கில் மரங்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் வனவி லங்குகள் பாதிப்படையாமல் அங்கேயே இருக்கும் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க உதவும், மேலும் நாட்டு ரக காளைகளின்

    சினை ஊசிகளை கால்நடை மருத்துவர்கள் கிராம பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

    அதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை களுக்கு அதிகாரிகள் பதிலளித்து பேசினர். கூட்டத்தில் சில துறை அதிகாரிகள் மட்டுமே கலந்துக்கொண்டு இருந்தனர். பல துறை அதிகாரிகள் வராமல் இருந்ததால் அங்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காமளே இருந்தது. எனவே அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்துக்கு அணைத்து துறை அதிகா ரிகள் கலந்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    • நெல் விதைத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிபேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 58) விவசாயி.இவர் விவசாய நிலங்களில் விதை நெல்லை விதைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

    ஞானராஜ் நேற்று மதியம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தனது மகனுடன் விதை நெல்லை விதைத்து கொண்டிருந்தார்.

    அப்போது, நிலத்தின் ஒரு பகுதியில் இருந்து மின்மோட்டாருக்காக மின்சாரம் கொண்டு செல்ல அமைக்கப்பட்டு இருந்த சேதமடைந்த மின்ஒயரில் எதிர்பாராதவிதமாக ஞானராஜ் தவறி விழுந்துள்ளார்.

    இதனால் மின்சாரம் பாய்ந்து ஞானராஜ் கீழே விழுந்தார். அவரது மகன் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஞானராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிடத்தின் மேலே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.
    • புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவினாசி :

    திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூரை சேர்ந்த ராஜகோபால் மகன் நாகராஜ் (வயது 46).இவரும் கணேசன் என்பவரும் அவினாசி அருகே கந்தசாமி என்பவருடைய கட்டிடத்தின் மேலே பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மின்கம்பத்தில் இருந்து மீட்டருக்கு வரும் வயரை எதிர்பாராத விதமாக நாகராஜ்பிடித்த போது பழைய வயர் என்பதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் கணேசன் உயிர்தப்பினார். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மின் கம்பி அறுந்து விழுந்து பரிதாபம்
    • அதிகாரிகள் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகு தியை சேர்ந்தவர் துரைக்கண்ணு (53). விவசாயியான இவர் மாடுகளையும் மேய்த்து வருகிறார்.

    நேற்று வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 2 பசுமாடுகள் மீது மின்சார கம்பி விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகளும் பரிதாபமாக இறந்தன.

    இதேபோல புளிய மங்கலம் ஸ்ரீராம் நகர் அறுந்து பகுதியை சேர்ந்த குமார சாமி என்பவரது பசுமாடும் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்தது.

    அரக்கோணம் அடுத்த அணைக்கட்டாபுதூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் 2 செம்மறி ஆடுகள் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சென்ற 2 ஆடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.

    இதுகுறித்து அந்தந்த பகுதி விஏஓகள் அளித்த தகவலின் பேரில் அரக் கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் நேரில் சென்று விசாரித்து வருகிறார்.

    • தொழிற்சாலையில் கிரேனை இயக்கிய போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள லாலா பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 34). இவர் லாலாபேட்டை பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் லாலாபேட்டையை அடுத்த கிருஷ் ணாவரம் பகுதியில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் இருந்து, தனது தொழிற்சாலைக்கு தேவையான பொருட் களை ஏற்றி வர, டிராக்டரில் சென்று உள்ளார். அங்குள்ள தொழிற்சாலையில் கிரேன் இயக்க ஆள்இல்லாததால், அவரே இயக்கியுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வைத்தியலிங்கம் வேலை நிமித்தமாக சிங்ப்பூர் சென்றுவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார்.
    • வீட்டை சுற்றி முற்புதர்கள் மண்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் சென்ற அவர் 4 நாட்கள் ஆகியும் வெளியில் வரவில்லை.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது50) இவரது மனைவி விஜயலெட்சுமி இருவரும் தங்களது மகளுடன் அறந்தாங்கியில் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். வைத்தியலிங்கம் வேலை நிமித்தமாக சிங்ப்பூர் சென்றுவிட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார்.

    வெளிநாட்டிலிருந்து வந்த அவர் தனது சொந்த ஊரில் உள்ள பழைய வீட்டை புதுப்பிப்பதற்காக மாங்குடிக்கு சென்றுள்ளார். அங்கே வீட்டை சுற்றி முற்புதர்கள் மண்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் சென்ற அவர் 4 நாட்கள் ஆகியும் வெளியில் வரவில்லை. இந்நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியதும் சந்தேக மடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல்த்துறையினர், உள்ளே சென்று பார்க்கையில் வைத்தியலிங்கம் காலில் மின் ஒயர் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு,அடக்கம் செய்யப்பட்டது.

    பழைய வீட்டை புதுப்பிக்க சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்து 4 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வேலை முடிந்து மாலை வீடு திரும்பும் போது பரிதாபம்
    • அறுந்து கிடந்த மின்கம்பியால் விபரீதம்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சதுப்பேரி பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி (வயது 58). இவருக்கு விஜயா என்ற மனைவியும் பரசுராமன் ஜீவரத்தினம் என்ற 2 மகனும் ஜீவஜோதி என்ற மகளும் உள்ளனர்.

    மணி தினமும் காலையில் விவசாய நிலத்திற்கு தன்னுடைய மாட்டை அழைத்து கொண்டு மீண்டும் விவசாய வேலை முடிந்து மாலை நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம்.

    இதே போல் நேற்று காலையில் தன்னுடைய விவசாய நிலத்திற்கு மாட்டை அழைத்து கொண்டு விவசாய பணியை முடித்து மீண்டும்வீட்டிற்கு திரும்பினார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபரின் விவசாய நிலத்தில் அருகில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.

    அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இதனை கண்ட மணி மாட்டை காப்பாற்ற முயன்ற போது மணி மீது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணியை மீட்டு தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல்சி கிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்சார துறையினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி மளிகை கடை ஊழியர் பலியானார்.
    • மழை பெய்து கொண்டிருந்ததால் தரையில் தண்ணீர் தேங்கி தரை வழுக்கியுள்ளது.

    கடலூர்:

    சென்னையை சேர்ந்தவர் மோசஸ் (வயது 18) இவருக்க தாய், தந்தை இல்லை. எனவே இவர் பண்ருட்டி அருகே கணிசப்பாக்கம் காலனியிலுள்ள தாய் மாமன் தரணிதரன் என்பவரது வீட்டில் தங்கி இருந்து பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கனி மார்க்கெட்டிலுள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல கடைக்கு வேலைக்கு செல்வதற்காக இன்று காலை வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமில்குளித்துவிட்டு வந்துள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் தரையில் தண்ணீர் தேங்கி தரை வழுக்கியுள்ளது. அப்போது கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மின் கம்பத்தின் எர்த் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் மோசஸ் பரிதாபமாக உயிரிந்தார். இது பற்றிதகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஏட்டு வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று மின்சாரம்தாக்கி உயிர் இழந்த மோசஸ் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    ×