search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு"

    • விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம் 12 இடங்களில் நடக்கிறது.
    • ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகரில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பால திட்டப்பணிகள் 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2020-21-ம் ஆண்டில் நிறைவு பெற வேண்டிய இந்த பணிகள் தற்போது வரை நிறைவடையவில்லை. இதை விரைந்து முடிக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே சொத்துவரி அதிகமாக விதிக்கும் நகரமாக ராஜபாளையம் உள்ளது. சென்னையை விட (12.40 சதவீதம்) அடிப்படை வரி விகிதம் அதிகமாக (20.80சதவீதம்) உள்ளது.

    இந்த வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று நகர்மன்றம் 6 மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியது. இதுவரை வரியும் குறைந்தபாடில்லை. இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் செல்ல முடியாமல் நிரம்பி உள்ளது. அனைத்தையும் சரி செய்ய வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பிப்ரவரி 1-ந் தேதி தேதி முதல் 6-ந் தேதி வரை ராஜபாளையம் நகரில் 12 மையங்களில் போராட்டம் நடத்துவது என்று கிளைச் செயலாளர், நகர் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு நகர குழு உறுப்பினர் மேரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ஜுனன், நகர செயலாளர் மாரியப்பன், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம்.
    • விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார்.

    அப்போது சில பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி முதல்-அமைச்சரிடம் மனுக்கள் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-

    பொதுவுடமை இயக்கங்களின் முன்னோடியான பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போராடிய மார்க்சிய சிந்தனையாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, அவரது மகள் பேராசிரியர் ஸ்டெபானி ஆகியோருக்கு சென்னையில் வருகிற 18-ந் தேதி வரவேற்பு விழா நடைபெற உள்ளது.

    இதில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பிதழ் அளித்தோம்.

    குமரி மாவட்டம் உள்ளிட்ட தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு விழா, நாகர்கோவிலில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

    ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம். தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

    கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழக அரசுக்கும், மக்களுக்கும் விரோதமாகவும், பழமைவாத சனாதன கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி வருகிறார். கவர்னராக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

    புதிய கல்விக்கொள்கையை அமலாக்குவது, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு என்ற பெயரை பயன்படுத்துவது தவறு என பேசி உள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

    கவர்னரின் இந்த போக்கு குறித்த தமிழக மக்களின் கொந்தளிப்பான எதிர்ப்பு உணர்வுகளை முதல்-அமைச்சருக்கு தெரியப்படுத்தினோம். அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்த முதல்-அமைச்சர், எங்கள் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    கவர்னருக்கு எதிராக தனித்தனியாக போராட்டம் நடத்துவதற்கு பதிலாக அனைவரும் ஒன்றாக இணைந்து இயக்கமாக போராட்டம் நடத்தலாம் என தி.மு.க. தலைவர் என்ற முறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறினேன். அதை பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

    அண்ணாமலை தலைமையில் இயங்கும் தமிழக பா.ஜனதா கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒரு கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. அது கிரிமினல் வழக்கு தொடர்பானது.

    அதற்கு பதில் கூறாமல் பத்திரிகையாளர் மீது கோபப்படுவது 3-ம் தர அரசியல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உடனிருந்தார்.

    • மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு வசதிகள் செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 வரை நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று ெசல்கிறார்கள்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, சுரேஷ், திருப்புவனம் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன், இளையான்குடி ஒன்றிய செயலாளர் ராஜு, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜெயராமன், மானாமதுரை ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனிராஜ், பரமாத்மா, முருகானந்தம், ராஜாராமன், மூர்த்தி, பாலசுந்தரி ஆகியோர் பேசினர். மானாமதுரை அரசு 

    • கல்குவாரிக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் ரூ.10.40 கோடி அபராதம் விதித்துள்ளாா்.
    • மூடப்பட்ட குவாரியை உடனடியாக திறந்து இயக்க சுரங்கத் துறை ஆணையா் அனுமதி அளித்துள்ளாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையத்தில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த தனியாா் கல்குவாரிக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் ரூ.10.40 கோடி அபராதம் விதித்துள்ளாா். அபராத தொகையை தவணை முறையில் செலுத்த அவகாசம் அளித்தும், முழு அபராத தொகையை செலுத்துவதற்கு முன்பாகவே மூடப்பட்ட குவாரியை உடனடியாக திறந்து இயக்க சுரங்கத் துறை ஆணையா் அனுமதி அளித்துள்ளாா்.

    முழு அபராத தொகையை செலுத்தும்வரை சம்பந்தப்பட்ட குவாரி இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு தடை விதிப்பதுடன், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பாலப்பணியில் மெத்தப்போக்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பாலப்பணியில் மெத்தப்போக்கை கண்டித்து மக்களின் பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் நாளை நடத்தும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமையில் நடந்தது.

    நகர செயலாளர் மாரியப்பன், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் நல்லமுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் தாமஸ், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் கண்மணி காதர், ஆதித்தமிழர் கட்சி வேல்முருகன், ராஜபாளையம் முகநூல் நண்பர்கள் குழு சரவணன், அறம் அறக்கட்டளை மணிகண்டன், அன்னை தெரசா நற்பணி இயக்கம் ஜெகன், டாச்சி தொழிலாளர் சங்கம் கண்ணன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர்கள் கணேசன், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாளை (17-ந்தேதி) ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் நடத்தும் கடை அடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பது, அன்றைய தினம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • குண்டு வீசிய நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்தது. அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகம் மீது குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஏ.கே.ஜி.சென்டரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் நேற்று இரவு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.நள்ளிரவு நேரத்தில் அலுவலக வாசல் முன்பு பயங்கர சத்தம் கேட்டது.

    அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதை கண்டனர். குண்டு வீச்சில் கட்டிடத்தின் வெளிப்புற பகுதியும், கண்ணாடி ஜன்னலும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    குண்டு வீசிய நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்தது. அவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதனால் அவர்களை உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதற்கிடையே தகவல் அறிந்து போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் வந்தனர். அவர்கள் அங்கு சோதனை நடத்தினர். இதில் அலுவலகத்தின் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் வெடிக்காத ஒரு நாட்டு வெடிகுண்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை அப்புறப்படுத்திய நிபுணர்கள், வெடிகுண்டு வீசிய நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அலுவலகம் மீது குண்டு வீசப்பட்ட தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்திற்கு காங்கிரசாரே காரணம் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம்சாட்டினர். அவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஆலப்புழாவில் உள்ள இந்திரா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பினரே காரணம் என்று காங்கிரசார் கூறினர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கேரளா முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள், லேப் டெக்னீசியன் நியமிக்க வேண்டும். புதிய ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, நகர செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பேசினர். நகர் குழு உறுப்பினர்கள் மேரி, முருகானந்தம், செல்வராஜ், மாதர் சங்க நகரத் தலைவர் மைதிலி, மாணவர் சங்க தாலுகா செயலாளர் ஹரிராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சரவணன், செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • மாவட்ட குழு உறுப்பினர் தாமஸ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை சமீபத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த மருத்துமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    அதை இயக்குவதற்கு தேவையான ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நகர செயலாளர் காத்தமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் தாமஸ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    ×