search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்
    X

    விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்

    • விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம் 12 இடங்களில் நடக்கிறது.
    • ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகரில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பால திட்டப்பணிகள் 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2020-21-ம் ஆண்டில் நிறைவு பெற வேண்டிய இந்த பணிகள் தற்போது வரை நிறைவடையவில்லை. இதை விரைந்து முடிக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே சொத்துவரி அதிகமாக விதிக்கும் நகரமாக ராஜபாளையம் உள்ளது. சென்னையை விட (12.40 சதவீதம்) அடிப்படை வரி விகிதம் அதிகமாக (20.80சதவீதம்) உள்ளது.

    இந்த வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று நகர்மன்றம் 6 மாதங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியது. இதுவரை வரியும் குறைந்தபாடில்லை. இதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வரி விகிதத்தை 10 சதவீதமாக குறைக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் செல்ல முடியாமல் நிரம்பி உள்ளது. அனைத்தையும் சரி செய்ய வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பிப்ரவரி 1-ந் தேதி தேதி முதல் 6-ந் தேதி வரை ராஜபாளையம் நகரில் 12 மையங்களில் போராட்டம் நடத்துவது என்று கிளைச் செயலாளர், நகர் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு நகர குழு உறுப்பினர் மேரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அர்ஜுனன், நகர செயலாளர் மாரியப்பன், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×