search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பி வர வேண்டி உள்ளது.
    • நல்ல உடன்பாடு பொருத்தமான நேரத்தில் நடைபெறும்.

    சென்னை:

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இரு தரப்பினரும் மனம் திறந்து எங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்.

    ஒவ்வொரு கட்சிக்கு கூடுதலான இடங்களில் போட்டியிடுவதற்கு விருப்பம் இருக்கும். நாங்களும் கடந்த தேர்தலை விட கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தோம்.

    இரு தரப்புக்கும் சுமூகமான நல்ல உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    கேள்வி: எந்தெந்த தொகுதிகள் என்று விருப்ப பட்டியல் ஏதும் கொடுத்திருக்கிறீர்களா?

    பதில்: அதெல்லாம் பொருத்தமான நேரத்தில் கொடுப்போம்.

    கே: உங்கள் வசம் உள்ள கோவை தொகுதியை கூட்டணி கட்சிகள் கேட்பதாக சொல்கிறார்களே?

    ப: அதை யாரும் கேட்பார்கள். எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன உடன்பாடு என்பதுதானே பிரச்சனை. அதனால் அதைப் பற்றி எங்களுக்கு பிரச்சனை இல்லை. யாருக்கு எந்த தொகுதி என ஒவ்வொரு கட்சியிலும் பதிலை கேட்பார்கள். எங்களை பொருத்தவரையில் நாங்கள் எங்கள் கருத்துக்களை தி.மு.க. தலைமையிடம் சொல்லி உள்ளோம். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு முடிவுகளை தெரிவிப்போம்.

    கே: தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்?

    ப: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து திரும்பி வர வேண்டி உள்ளது. வந்த பிறகுதான் அதற்கான உடன்பாடு ஏற்படும். நல்ல உடன்பாடு பொருத்தமான நேரத்தில் நடைபெறும்.

    கே: தி.மு.க.விடம் கூடுதல் இடங்களை கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு தர மனம் உள்ளதா?

    ப: அதெல்லாம் பேச்சுவார்த்தையில் பொருத்தமான முறையில் நாங்கள் முடிவெடுப்போம்.

    கே: அடுத்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இருக்கிறதா?

    ப: வாய்ப்பு ஏற்பட்டால் அது ரொம்ப நல்லது.

    கே: நீங்கள் கூடுதல் தொகுதியை கேட்பதாக கூறுகிறீர்கள்? கடந்த முறை மாதிரி இந்த முறையும் அதே இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன?

    ப: அது சம்பந்தமாக நாங்கள் அரசியலாக என்ன தேவையோ அதற்கேற்ப முடிவெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.
    • பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் கோட்டாலி பகுதியை சேர்ந்தவர் சாஜிமோன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.

    அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேறு ஒரு நபர் ஈடுபட்டது போன்று, வழக்கை திசை திருப்பவும் முயற்சி செய்தார். ஆனால் அது முடியாமல் போனது. சாஜிமோன் மீதான பாலியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    பின்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். மேலும் கோட்டாலி பிரிவு கிளைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சாஜிமோன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஊழியராக இருந்துவரும் பெண் ஒருவரை நிர்வாண படம் எடுத்த வழக்கில் சிக்கினார்.

    இதையடுத்து அவர் கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயணியர் விடுதி முன்பு தொடங்கிய ஊர்வலம் சங்கரன்கோவில் தேரடி திடலில் முடிவு பெற்றது.
    • கூட்டத்தில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் அனைத்து கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. பயணியர் விடுதி முன்பு தொடங்கிய ஊர்வலம் சங்கரன்கோவில் தேரடி திடலில் முடிவு பெற்றது. இதனைத் தொடர்ந்து மவுன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி துரை, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகரச் செயலாளர் பிரகாஷ், ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் ரத்தினவேல் குமார், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மருத்துவ அணி செயலாளர் திவான் மைதீன் உள்ளிட்ட பலர் அஞ்சலி உரையாற்றினர்.

    கூட்டத்தில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதிதிராவிட அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகம்மது ஹக்கீம், ஒன்றிய செயலாளர் சசி முருகன், தே.மு.தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அயூப்கான், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தைச் சேர்ந்த செல்வின், மதியழகன், செந்தில் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • அனைத்து கட்சியினர் சார்பில் சங்கராய்யா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகே மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சங்கராய்யா உருவப்படத்திற்கு அனைத்து கட்சியினர் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆலங்குளம் இடைகமிட்டி செயலாளர் பாலு தலைமை தாங்கினார்.

    இதில் நெல்லை முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தி.மு.க. நகர செயலாளர் நெல்சன், நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் தங்கசெல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார், திராவிடர் கழகம் நகர செயலாளர் பெரியார் குமார், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பொதிகை ஆதவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சங்கரய்யா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா உறுப்பினர்கள் வெற்றிவேல், நல்லையா, பரமசிவன், கிளை செயலாளர்கள் சந்தனகுமார், பத்திரகாளி, ஆறுமுகம். ராசையா ஆதி விநாயகம், சாமுவேல் ராஜா, லிவிங்ஸ்டன் விமல், பி.எஸ்.என்.எல். ராஜேந்திரன், வேலாயுதம், ஏசுராஜா, பொன்னுத்துரை, குணசேகரன் பொன்னுசாமி. காமராஜர் மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் தலைவர் ராஜா, மார்க்சிஸ்ட் ராமசாமி, பி.எஸ்.மாரியப்பன், வள்ளியம்மாள், வள்ளி மயில், வி.சி.க. அய்யனார்குளம் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
    • வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

    சிவகிரி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா மறைந்ததை யொட்டி சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக அனைத்து கட்சியினர் சார்பாக சங்கரய்யா புகைப்படத்தை கையில் ஏந்தி முக்கிய ரத வீதிகள் வழியாக மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு மீண்டும் கலையரங்கம் வந்து அடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சிவசுப்பிர மணியன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்தையா பாண்டியன், கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமல்ராஜ், சுப்பிரமணியன், சுப்புலட்சுமி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், மற்றும் பலர் கலந்து கொண்டு இரங்கல் கூட்டத்தில் பேசினர். வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே, சங்கரய்யா மறைவிற்கு சி.பி.எம். கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.இதில் வாசுதேவநல்லூர் பேரூர் தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவர் மகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தனித்து போட்டியிடுவதுதான் ஒரே வழி என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவுக்கு வந்துள்ளது.
    • இந்தியா கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடை பெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" எனும் கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன.

    காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. கம்யூ னிஸ்டு கட்சியினரும் அந்த கூட்டணியில் இடம் பெற்று இருந்தனர்.

    இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு, குறைந்தபட்ச பொது செயல் திட்டம் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்காக 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 13 கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அறிவித்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மட்டும் பிரதிநிதி பெயரை தெரிவிக்காமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் உயர்நிலை அமைப்பான பொலிட்பீரோ அமைப்பின் கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடந்தது. அந்த கூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியில் சில முக்கிய முடிவுகளை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எடுத்துள்ளது.

    அதன்படி இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு எடுத்துள்ளது. பாட்னா, பெங்களூர், மும்பையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட் டத்தில் பங்கேற்ற போதிலும் தொடர்ந்து இந்தியா கூட் டணியில் நீடிக்க இயலாது என்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

    ஆனால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சில தலைவர்கள் கூறுகையில், "இந்தியா கூட்டணியில் தேசிய அளவில் இடம் பெறுகிறோம். மாநில அளவில் இடம் பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே ஒட்டு மொத்தமாக ஒருமித்த அளவில் கூட்டணியில் நீடிக்க இயலாது" என்று தெரிவித்து உள்ளனர்.

    டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஒரு முடிவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மிக உறுதியாக எடுத்துள்ளனர். அதாவது மேற்கு வங்காளம், கேரளாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க இயலாது. எனவே இந்த 2 மாநிலங்களிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்துள்ளனர்.

    கேரளாவில் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் எலியும், பூனையுமாக உள்ளனர். எனவே அங்கு ஒருமித்த கருத்து உருவாக வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்தது.

    அதுபோல மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுடன் சுமூகமான மனநிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பரம விரோதிகளாக பார்க்கிறார்கள். எனவே தனித்து போட்டியிடுவதுதான் ஒரே வழி என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவுக்கு வந்துள்ளது.

    டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்கும் கூட்டணி அமைக்க இயலாத நிலை ஏற்பட்டு இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தெரி வித்து உள்ளனர். சில மாநி லங்களில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட விரும்புகிறது.

    எனவே மேலும் சில மாநிலங்களில் தொகுதி பங்கீடு செய்து கொள்வதில் இந்தியா கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இவற்றையும் ஆய்வு செய்து இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொலிட் பீரோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மூத்த தலைவர் பிரகாஷ்காரத் அளித்த பேட்டியில் கூறி இருப்பதா வது:-

    இந்தியா கூட்டணியில் அடிப்படை புரிதல் வேண்டும். அது இல்லாமல் எந்த அரசியல் கூட்டணியையும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மேற்கொள்ளாது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

    எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி ஆய்வு செய்யப்படும். அதற் கேற்ப கூட்டணி அமைப்பதும், தொகுதி பங்கீடு செய்வதும் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.

    இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி விலகி செல்வது உறுதியாகி இருக்கிறது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.பி.யும், பொலிட் பீரோ உறுப்பினருமான நிலோத்பல் பாசு கூறியிருப்பதாவது:-

    இந்தியா கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன. நாங்கள் சில இடங்களில் சமரசம் செய்து கொண்டால் ஓட்டுகள் சிதறி விடும். ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக நாங்கள் சில முடிவுகளை எடுத்து இருக்கிறோம்.

    கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் தனித்து போட்டியிடும் முடிவை திட்டவட்டமாக சொல்லி விட்டோம். எனவே தேசிய அளவில் தொகுதி பங்கீடு செய்து கொள்ளமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் எடுத்துள்ள முடிவை காங்கிரஸ் தலை வர்களிடமும், மற்ற கூட் டணி கட்சி தலைவர்களிடமும் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இது காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தங்கள் கட்சி சார்பில் பிரதிநிதி நியமனம் செய்யமாட்டாது என்றும் எதிர்க்கட்சிகளிடம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசித்து வருகின்றன.

    • 7-ந்தேதி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடக்கிறது
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் நாட்டில் மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையின்மையை போக்கிட வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக்கான சட்டம் இயற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. ஒப்பந்த அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், கூலி ரூ.600-ம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் அபிமன்னன், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • வரும் காலங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை வழங்காத கர்நாடக மாநில அரசை கண்டித்தும், கருகும் குறுவைப் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தியும் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் அபிமன்னன், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கர்நாடக அரசை கண்டித்தும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தியும் பேசினர்.

    இதில் தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், வரும் காலங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கர்நாடக அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்காமல் காவிரி நீரை வழங்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு நிர்வாகிகள் குருசாமி, இளங்கோவன், சரவணன், வசந்தி , விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நூதன போராட்டம் நடந்தது.
    • கைகளில் கட்டு போட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. நகர் குழு உறுப்பினர் பிரபு தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். கிருஷ்ணன்கோவிலில் இருந்து பூவாணி, கூட்டுறவு நூற்பாலை, ராமகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் உள்ள பாலங்களை விரிவுபடுத்த வேண்டும், சாலையின் இரு புறங்களிலும் உள்ள மணல் குவியல்களை அப்புறப்படுத்த வேண்டும்,

    மதுரை-தென்காசி சாலையை பழுது பார்ப்பதற்கு பதில் புதிய சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. சேதமடைந்த சாலைகளால் பொதுமக்கள் விபத்தில் சிக்குவதை பிரதிபலிக்கும் வகையில் தலை மற்றும் கைகளில் கட்டு போட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அனைத்து அமைப்புகளுக்கான ஜனநாயக உரிமையை பறிக்ககூடாது என்பதுதான் எங்களது நோக்கம்.
    • தமிழக கவர்னர் பல்வேறு விசயங்களில் விஞ்ஞானத்திற்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார்.

    நெல்லை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணிக்கு அனுமதி கேட்டு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. கோர்ட்டு விதித்த கட்டுப்பாட்டை ஏற்க ஆர்.எஸ்.எஸ். மறுத்தது.

    அனைத்து கட்சிகளும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்தது. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான அனுமதி கவலை அளிக்கிறது. அனைத்து அமைப்புகளுக்கான ஜனநாயக உரிமையை பறிக்ககூடாது என்பதுதான் எங்களது நோக்கம். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதி வருந்தத்தக்க விசயம்.

    தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு கவர்னர் முதலிலேயே அனுமதி அளித்து இருந்தால் தமிழகத்தில் 40 உயிர்கள் பலியாகி இருக்காது.

    தமிழக கவர்னர் பல்வேறு விசயங்களில் விஞ்ஞானத்திற்கு புறம்பான விஷயங்களை பேசி வருகிறார்.

    உலகின் அனைத்து நாடுகளும் மத அடிப்படையில் ஆட்சி நடத்துவதாக உண்மைக்கு மாறான பேச்சை பேசி வருகிறார். அரசியல் சட்டத்தின் விதிகளை மீறி கவர்னர் செயல்படுகிறார்.

    தமிழக அரசுக்கு இடையூறு செய்யும் விதமாக போட்டி அரசியல்வாதி போல் அவர் செயல்படுகிறார்.

    அம்பையில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் வேதனை அளிக்கிறது. சாதாரண குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மனித உரிமை மீறல் சம்பவத்தை நடத்தி இருக்கிறார். அவருக்கு ஆதரவாக போலீசாரும் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது சட்ட விரோத நடவடிக்கை.

    இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றால் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்படும்.

    டாஸ்மாக் கடைகளை எடுத்து நடத்தும் அரசு கனிமவள வியாபாரத்தையும் நடத்த வேண்டும். கனிமவள கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்.

    மக்கள் நல பணியாளர்கள் பணியை ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது ரத்து செய்தார்கள். ஒரு அரசு ஒரு திட்டத்தை வகுக்கும்போது, மற்றொரு ஆட்சி அமையும்போது அதில் குறைபாடுகள் இருந்தால் சரி செய்ய வேண்டுமே தவிர ரத்து செய்யக்கூடாது.

    தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், பாளை தாலுகா செயலாளர் முத்து சுப்பிரமணியன், மாவட்ட குழு நிர்வாகிகள் குழந்தை வேலு, நாராயணன், முருகன், பழனி, மாநில குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், கற்பகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் செயலாளர் வெள்ளைபாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவி பட்டணம் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் செயலாளர் வெள்ளைபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் ரவிந்திரநாத் பாரதி, மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ், நிர்வாகிகள் அமல்ராஜ், போத்தி, பாக்கியம், மாதர் சங்கத் தலைவி பேச்சியம்மாள், சின்னராசு, சூசையம்மாள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
    • மாவட்டத் தலைநகரம் 65 கி.மீ.தூரம் உள்ளதாக புகார்

    குடியாத்தம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சக்திவேல், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், பி.குணசேகரன் ஆகியோர் குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த அகரம்சேரி, கொல்லமங்கலம், கூத்தம்பாக்கம், பள்ளிக்குப் நம், சின்னச்சேரி ஆகிய ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு மாதனூரில் கருத்து கேட்பு கூட்டம் நடந்ததாக தகவல் வந்துள்ளது.

    இந்த கூட்டம் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நடைபெற்றதா எனத் தெரியவில்லை.அப்பகுதி மக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் யாருக்கும் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது. இது எந்த பலனையும் அளிக்காது.

    இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்துடன் இணைப்பதால் மாவட்டத் தலைநகருக்கு 65 கி.மீ.தூரம் உள்ளது. இது இந்த ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு பொருளாதார இழப்பு, பயண நேரம் என கடும் சிரமத்தை ஏற்படுத்தும்.

    வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் செல்ல வாணியம்பாடிக்கும், தலுகா அலுவலகம் செல்ல ஆம்பூருக்கும் செல்ல வேண்டும். மேற்படி அலுவலகங்கள் அனைத்தும் தற்போது குடியாத்தத்திலேயே உள்ளது.

    உடனடியாக குடியாத்தம் செல்ல தடையாக இருப்பது பாலாறு மட்டுமே. எனவே மாவட்ட நிர்வாகம் நீண்ட கால கோரிக்கையாக உள்ள அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே பாலப்பணியை உடனே தொடங்க கேட்டு கொள்கிறோம்.

    5 ஊராட்சிகளை மையப் படுத்தி அகரம்சேரியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் அதுவரையில் மாதனூர் மருத்துவமனையை பயன் படுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    ×