என் மலர்
உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆலோசனை கூட்டம்
- ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
- பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பாலப்பணியில் மெத்தப்போக்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பாலப்பணியில் மெத்தப்போக்கை கண்டித்து மக்களின் பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் நாளை நடத்தும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமையில் நடந்தது.
நகர செயலாளர் மாரியப்பன், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் நல்லமுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் தாமஸ், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் கண்மணி காதர், ஆதித்தமிழர் கட்சி வேல்முருகன், ராஜபாளையம் முகநூல் நண்பர்கள் குழு சரவணன், அறம் அறக்கட்டளை மணிகண்டன், அன்னை தெரசா நற்பணி இயக்கம் ஜெகன், டாச்சி தொழிலாளர் சங்கம் கண்ணன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர்கள் கணேசன், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளை (17-ந்தேதி) ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் நடத்தும் கடை அடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பது, அன்றைய தினம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






