search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்களவை"

    • நேற்று அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் 13 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
    • இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    பாராளுமன்றத்தில் இருவர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர். இது பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு மக்களை சபாநாயகர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் நேற்று முதல் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 14 எம்.பி.க்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாநிலங்களவையில் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியதும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் அதே விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கூச்சலிட்டனர். அவைத் தலைவர்கள் சமாதானப்படுத்தியும் அவர்கள் கூச்சலை நிறுத்தவில்லை. இதனால் அவைகள் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவைத் தலைவர்கள் தன்னுடைய அறையில் சந்திக்குமாறு சேர்மன் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.
    • மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதற்கு பிரதமருக்கு பெண் எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்ப்பு இன்றி நிறைவேறி்யது.

    இந்நிலையில், கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    அதன்பின், பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடிய மாநிலங்களவை பெண் எம்.பி.க்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    மேலும், அவர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • மாநிலங்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.
    • மொத்தம் உள்ள 205 எம்.பி.க்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இக்கூட்டத் தொடர் மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்தச் சிறப்பு கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு மக்களவையில் நிறைவேறியது.

    இதேபோல், மாநிலங்களவையிலும் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. 205 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஒருவரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில், மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், மசோதா நிறைவேற ஒருமித்த கருத்துடன் ஆதரவு அளித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மசோதா நிறைவேறியது அரசியல் கட்சிகளின் நேர்மறை சிந்தனையைக் காட்டுகிறது. மசோதா நிறைவேறியதன் மூலம் நாட்டு மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மகளிருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் புதிய ஆற்றலை கொடுக்கும் என தெரிவித்தார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு இந்தியா கூட்டணி முழு ஆதரவு அளிக்கிறது என கூறினார்.

    • பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 முக்கிய தனியார் வங்கிகள் வசூலித்த தொகையின் விவரங்கள் வெளியிடப்பட்டது.
    • பெருநகரங்களில் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரையிலும் மாதாந்திர மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலித்துள்ள அபராத தொகை தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

    அதில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஐடிபிஐ, ஆக்சிஸ், இந்தஸ்இந்த் ஆகிய தனியார் வங்கிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் வசூலித்த தொகையின் விவரங்களை வெளியிட்டார்.

    வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புதொகை (மினிமம் பேலன்ஸ்) வைக்காததற்காக அபராதமாக ரூ.21000 கோடி வசூலிக்கப்பட்டதாக கூறி உள்ளார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஏடிஎம் எந்திரத்தை பயன்படுத்தியதற்காக ரூ.8000 கோடி, எஸ்எம்எஸ் சேவைக்காக ரூ.6000 கோடி என வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    பெருநகரங்களில் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரையிலும், நகர்ப்புறங்களில் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையிலும், கிராமப்புறங்களில் ரூ.500 முதல் ரூ.1,000 வரையிலும் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என பெரும்பாலான வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. இந்த இருப்புத் தொகையை பராமரிக்காததால் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான கட்டணங்கள் விதிக்கப்படலாம். 

    • டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
    • மக்களுக்காக உழைக்க உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளை பறிக்க அல்ல. மக்களுக்காக உழைக்க உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளை பறிக்க அல்ல.

    மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் நேற்று வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

    மசோதா நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே தொலைக்காட்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.

    அப்போது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமர் மோடி மதிக்கவில்லை. டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு தலையிடக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளனர். ஆனால் பிரதமர் மோடி நீதிமன்றத்தின் உத்தரவை கேட்க விரும்பவில்லை.

    சட்டங்களை இயற்றும் அதிகாரம் எங்களிடம் உள்ளது என்று பாராளுமன்றத்தில் அமித் ஷா கூறினார். மக்களுக்காக உழைக்க உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளை பறிக்க அல்ல.

    ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக நான்கு கருத்துக் கணிப்புகளில் தோல்வியடைந்தது. அவர்கள் பின்கதவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முயலுகின்றனர்.

    இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு "கறுப்பு நாள்".இ து டெல்லி மக்களின் வாக்குரிமையை அவமதிக்கும் செயலாகும்.

    டெல்லி சேவைகள் மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநிலங்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.
    • மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 3ம் தேதி தாக்கல் செய்து நிறைவேற்றியது.

    இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தன. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றும், ஊழலை தடுப்பதே மசோதாவின் நோக்கம் என்றும் கூறினார்.

    ஆம் ஆத்மி கட்சியை திருப்திப்படுத்தவே இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

    விவாதத்தின் முடிவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவை மக்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. அதன்பின்னர் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதில், மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது. இந்நிலையில், டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • நாங்கள் எமர்ஜென்சியை கொண்டு வருவதற்காக அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வரவில்லை.
    • டெல்லி தொடர்பான தற்போதைய மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்குப் பதிலாகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றார். அவர் மேலும் பேசியதாவது:-

    இந்த மசோதாவானது எந்த கோணத்திலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறவில்லை என்பதற்கான ஆதாரத்தை நான் வழங்குகிறேன். டெல்லி தொடர்பான தற்போதைய மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்குப் பதிலாகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. 

    மசோதாவின் ஒரு விதி கூட தவறாக இல்லை. ஊழலை தடுப்பதே மசோதாவின் நோக்கம். டெல்லியில் பல்வேறு கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன. 2015க்கு முன்பு பாஜக, காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அனைவரும் வளர்ச்சியை விரும்பினர். ஆனால் உயர் அதிகாரிகள் இடமாற்றம் விவகாரத்தில் மத்திய அரசுடன் ஒருபோதும் மோதலில் ஈடுபடவில்லை. ஆம் ஆத்மி கட்சியை திருப்திப்படுத்தவே இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

    நாங்கள் எமர்ஜென்சியை கொண்டு வருவதற்காக அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வரவில்லை. எமர்ஜென்சிக்கு மீண்டும் உயிர் கொடுக்க திருத்தங்களை கொண்டு வரவில்லை.

    டெல்லி அரசுக்கு நிர்வாக அதிகாரங்களை வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, ஆம் ஆத்மி அரசு ஊழல் தடுப்பு துறையில் உடனடியாக இடமாற்ற உத்தரவுகளை பிறப்பித்தது. டெல்லி அரசாங்கத்தின் ஊழல்களை விசாரித்ததாலும், கலால் கொள்கை ஊழல் மற்றும் முதல்வரின் வீடு புனரமைப்பு தொடர்பான கோப்புகள் அந்த அமைப்பிடம் இருந்ததாலும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற்றப்பட்டதும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி கூட்டணியான ஐ.என்.டி.ஐ.ஏ.விலிருந்து விலகுவார்.

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.

    • ஆரம்பத்தில் இருந்தே டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    டெல்லியில் அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே உள்ள அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் டெல்லி நிர்வாகம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) கொண்டு வரவும் மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது.

    இந்த அவசர சட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்து, பெரும் அமளிக்கு இடையே நிறைவேற்றியது. இந்த நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு மத்தியில், உள்துறை மந்திரி அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது.

    இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் ஜனநாயக விரோதமானது என்றும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    • செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் 1,040 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • அதிவேகமாக வாகனம் ஓட்டிச் சென்று 40 ஆயிரத்து 450 பேர் பலியாகினர்.

    புதுடெல்லி:

    சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமாரின் கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார்.

    அதில், கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 விபத்துகள் நடைபெற்றது. இந்த விபத்துகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் இறந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிவேக இயக்கம், குடிபோதை, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களால் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 825 விபத்துகள் ஏற்பட்டதாகவும், அதில் 56 ஆயிரத்து ஏழு பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிவேகமாக சென்று 40,450 பேரும், செல்போன் பேசியதால் ஏற்பட்ட விபத்தில் 1,040 பேரும் பலியாகியது குறிப்பிடத்தக்கது

    • வெளிநாட்டு சிறைகளில் 8 ஆயிரத்து 330 இந்திய கைதிகள் உள்ளனர்.
    • அதிகபட்சமாக வளைகுடா நாடுகளின் சிறைகளில் இந்தியர்கள் உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று அளிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் பதிலளித்தார். அப்போது அவர், மொத்தம் 90 வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,330 இந்திய கைதிகள் உள்ளனர். அதிகபட்சமாக 4,630 பேர் வளைகுடா நாடுகளின் சிறைகளில் உள்ளனர்.

    நேபாளத்தில் 1222, பாகிஸ்தானில் 308, சீனா 178, வங்காளதேசத்தில் 60, இலங்கையில் 20 இந்தியர்கள் சிறைகளில் உள்ளனர்.

    பல நாடுகளில் அமலில் உள்ள வலுவான தனியுரிமை சட்டங்களின் காரணமாக, சிறைக்கைதிகள் விருப்பப்பட்டால் அன்றி, அவர்களைப் பற்றிய தகவல்களை அந்நாட்டு அதிகாரிகள் அளிப்பதில்லை என தெரிவித்தார்.

    • சட்டவிதிகளை மீறி திரைப்பட திருட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
    • திரைப்பட பைரசியால் திரையுலகம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

    புதுடெல்லி:

    திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் சினிமா துறைக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கவும் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு இதற்காக கடுமையான விதிகளுடன் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    திருட்டுத்தனமாக திரைப்படங்களை பிரதி எடுப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. மேலும், திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் யுஏ சான்றிதழ் வழங்கும்போது, அதை வயதுவாரியாக யுஏ7+, யுஏ13+ மற்றும் யுஏ16+ என மூன்று பிரிவுகளாக வழங்கவும் இந்த சட்டத்தில் உள்ளது.

    முன்னதாக இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றபோது மணிப்பூர் விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

    விவாதத்திற்கு பதிலளித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பேசும்போது, திரைப்பட திருட்டு செயல்களால் (திரைப்பட பைரசி) திரையுலகம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்றார்.

    'பைரசியால் ஏற்படும் இந்த இழப்பை தடுக்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. திரைத் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த சட்டம் நிறைவேற்றும். திரைப்பட திருட்டு புற்றுநோய் போன்றது, அதை வேரோடு அறுப்பதற்கு இந்த மசோதா முயற்சி செய்யும்' என்றும் அனுராக் தாக்கூர் பேசினார்.

    • 2,000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டு காலம் 4 முதல் 5 ஆண்டுகள் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
    • இன்னும் ரூ.84 ஆயிரம் கோடி, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது தொடர்பாக பல்வேறு கேள்விகளை சில எம்.பி.க்கள் கேட்டிருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

    2,000 ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதம் 17-க்கு முன்பு வெளியிடப்பட்டதால் அவற்றின் பயன்பாட்டு காலம் 4 முதல் 5 ஆண்டுகளே என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது.

    பின்னர் ரிசர்வ் வங்கி நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் இவற்றின் பரிவர்த்தனைக்கு இனி முன்னுரிமை அளிக்கத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டு கடந்த 19-5-2023 அன்றைய திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    மே 19-ம் தேதி ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பில் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த ஜூன் 30-ம் தேதி வரை ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.84 ஆயிரம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

    நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியை (செப்டம்பர் 30) நீட்டிப்பது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×