search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் சாதனை"

    • தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பாலமேடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • இதில் 10-ம் வகுப்பு பயிலும் 2 மாணவர்கள் இந்திய அளவிலான அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

    அலங்காநல்லூர்

    சென்னையில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தென் மாவட்ட அணியில் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அவர்கள் சிறப்பாக விளையாடி அந்த அணி தங்கப்பதக்கம் பெற்றது. இதையடுத்து 6 மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, உதவி தலைமை ஆசிரியர்கள் விஜித்ரா, முருகன், முதுநிலை ஆசிரியர் செந்தில், உடற்கல்வி ஆசிரியர்கள் மதுசிங், சத்தியசீலன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளமாறன், பயிற்சியாளர் சதீஷ்ராஜா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர். இதில் 10-ம் வகுப்பு பயிலும் ஆறுமுகம், கவிபாலன் ஆகிய இருவரும் இந்திய அளவிலான அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

    • போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    • தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    குன்னூர்,

    டெல்லி ஐ.சி.எஸ்.சி கவுன்சில் சார்பில் தேசிய அளவிலான ஆக்கி போட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது.போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

    தமிழக அணி சார்பில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் நீலகிரி மாவட்ட குன்னூர் கோழியின சென்ட் பள்ளி மற்றும் பிருந்தாவன் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். இவர்களை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

    • இதில் 14 மாணவர்கள் ஜூடோ போட்டியில் 19 மாணவர்கள் முதலிடமும் இரண்டாமிடமும் 12 மாணவர்கள் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
    • குத்துச்சண்டை போட்டி யில் 32 மாணவர்கள் முதலிடமும் 16 மாணவர்கள் இரண்டாமிடமும் 8 மாண வர்கள் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.முதலிடம் பிடித்த 55 மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மத்தூர்,

    தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் உள்ள ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    தருமபுரி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தடகளம், குழு மற்றும் தனிநபர் புதிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் தடகளம் போட்டியில் முகேஷ் என்கின்ற மாணவன் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் இரண்டாமிடமும் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜனஸ்ரீ என்கின்ற மாணவி முதலிடமும் கேரம் போட்டியில் மதுமதி, ஹாஷினி மற்றும் விபின் சந்திரசாமி முதலிடமும், கபடி போட்டியில் மாணவிகள் அணி மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    புதிய விளையாட்டு போட்டிகளான குத்துச்சண்டை மற்றும் ஜூடோ போட்டி நவம்பர் 1-ஆம் தேதி பாப்பிரெட்டிபட்டியில் நடத்தப்பட்டது.

    இதில் 14 மாணவர்கள் ஜூடோ போட்டியில் 19 மாணவர்கள் முதலிடமும் இரண்டாமிடமும் 12 மாணவர்கள் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

    குத்துச்சண்டை போட்டி யில் 32 மாணவர்கள் முதலிடமும் 16 மாணவர்கள் இரண்டாமிடமும் 8 மாண வர்கள் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.முதலிடம் பிடித்த 55 மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன், சுகன், அர்ச்சுனன் ஆகியோரையும் பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் கோவிந்தராஜ், செயலாளர் ஜெயந்திவெங்கடேசன், பள்ளியின் முதல்வர் சண்முகவேல், துணை முதல்வர் ரகுபதி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

    • 10 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சம்யுக்தா ஸ்ரீ முதலிடமும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அர்சிதா 3ம் இடமும் பெற்றனர்.
    • தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி கோவை டெகத்தலானில் நடந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர்சகோதயா பள்ளிகளுக்கான யோகாசன போட்டி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டஅளவிலான பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். 10 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சம்யுக்தா ஸ்ரீ முதலிடமும், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அர்சிதா 3ம் இடமும் பெற்றனர்.

    இதேபோல தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி கோவை டெகத்தலானில் நடந்தது.இப்போட்டியில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில், பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியின் 49மாணவ, மாணவிகளில்33 மாணவர்கள் முதல் பரிசும், 14 மாணவர்கள் 2ம்பரிசும் பெற்று சாம்பியன்பட்டம் பெற்றனர்.

    இதில் மாணவி அர்சிதா 138 புள்ளிகளும்,பிரதிஷா 131 புள்ளிகளும் பெற்று இலங்கையில்நடக்கும் யோகாசன போட்டிக்கு தகுதி பெற்றனர்.இதையடுத்து யோகாசன போட்டியில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர்சிவசாமி, செயலாளர்சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி, முதல்வர் லாவண்யா ஆகியோர்பாராட்டினர்.

    • மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி சாதனைப்படைத்துள்ளனர்.
    • முதல்வர் கலைவாணி, ஆசிரியர் பெர்னாட்ஷா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி பரிசு வழங்கினர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள மோளையானூர் ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் எறிபந்து போட்டியில் ஆண்கள் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடத்தினையும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தினையும் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி சாதனைப்படைத்துள்ளனர்.

    சாதனைப்படைத்த மாணவர்களையும் அதற்கு உறுதுனையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் நைனான், தீரன் சின்னமலை சேவை அறக்கட்டளையின் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பழனிச்சாமி மற்றும் பொருளாளர் வேணு, மேலாளர் கனி, பள்ளியின் முதல்வர் கலைவாணி, ஆசிரியர் பெர்னாட்ஷா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி பரிசு வழங்கினர்.

    • பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
    • உதவி தலைமையாசிரியா் பிரபாவதி, உடற்கல்வி ஆசிரியா் மோகன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

     அவிநாசி:

    அவிநாசியில் உள்ள தனியாா் பள்ளியில் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் கருவலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தடகளப் போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் கவின் மற்றும் லக்‌ஷிதா, 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் புவனேஷ்வரி ஆகியோா் தனிநபா் சாம்பியன் கோப்பையை வென்றனா்.

    மேலும் மேசைப்பந்து ஒற்றையா், இரட்டையா், கால்பந்து, உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். மாவட்ட அளவிலான 3000 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் மாணவி துளசிமணி முதலிடம் பிடித்து, திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றாா்.

    வெற்றி பெற்ற மாணவா்களை கருவலூா் பள்ளித் தலைமையாசிரியா் சத்தியபாமா, உதவி தலைமையாசிரியா் பிரபாவதி, உடற்கல்வி ஆசிரியா் மோகன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

    மேலும்அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் யாகவராஜ் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில்100 மீட்டா், 200 மீட்டா், மும்முறை நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று தனி நபா் சாம்பியன் கோப்பையை வென்றாா். இதேபோல பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். இவா்களுக்கு அவிநாசி அரசுப்பள்ளி ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

    • முதல்வர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டிவாழ்த்துகளை தெரிவித்தனர்.
    • ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அளவிலான குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நேஷனல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம் அளவிலான குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் 2022-23ஆண்டிற்கானது காரமடை வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியல் நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் நேஷனல் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    தடகளப்போட்டியில் 5 தங்கப்பதக்கங்கள், 5 வெள்ளி பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். பூப்பந்து போட்டியில் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்விஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டிவாழ்த்துகளை தெரிவித்தனர். 

    • சிலம்ப போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    டெல்லியில் ஸ்கூல் கேம்ஸ் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் கனிஷ்கா, நகசோன், திருமுருகன், வர்சன் ஸ்ரீ, முகேஷ், சபரி வாசன், தருண், கணேஷ்குமார், கார்த்திக்குமார், செல்லபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்,

    இந்த போட்டி ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்புசண்டை, சுருள் வாள், வாள் வீச்சு, வேல்கம்பு பிரிவுகளில் நடைபெற்றது, இதில் ஒற்றைக் கம்பு பிரிவில் மாணவர்கள் நகசோன், கார்த்திகுமார், கனிஷ்கா ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

    மாணவர் வர்சன் ஸ்ரீ, திருமுருகன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். மாணவர்கள் சபரிவாசன், முகேஷ், செல்லபாண்டி ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றனர்.

    இரட்டை கம்பு பிரிவில் கனிஷ்கா மற்றும் முகேஷ் மூன்றாம் பரிசு வெண்கலப் பதக்கம் வென்றனர்.மேலும் சுருள் வாள் பிரிவில் வர்சன் ஸ்ரீ 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.திருமுருகன் 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

    வாள் வீச்சுப் பிரிவில் நகசோன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். கனிஷ்கா, செல்லபாண்டி ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    கம்பு சண்டை பிரிவில் நகசோன், செல்ல பாண்டி ஆகியோர் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். திருமுருகன், கணேஷ்குமார், தருண் ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    வேல்கம்பு பிரிவில் சபரி வாசன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மத்யு இம்மானுவேல் பாராட்டினார்.

    • 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றும் சாதனை படைத்துள்ளனர்.
    • 2 பிரிவிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மூத்தோர் மற்றும் மிகமூத்தோர் ( 17 வயதிற்கு உட்பட்டவர்கள், 19 வயதிற்கு உட்பட்டவர்கள்) பிரிவிற்கு உண்டான எறிபந்து விளையாட்டு போட்டியில் 2 பிரிவிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். மூத்தோர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியை 2-0 கணக்கில் வெற்றி பெற்றும், மிக மூத்தோர் பிரிவில் கே.ஜி.மெட்ரிக் பள்ளியை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றும் சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் வெற்றிக்கு வித்திட்ட உடற்கல்வி ஆசிரியர் ஜெயராஜையும் பள்ளி தலைமை ஆசிரியர் பெள்ளி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு ராம்தாஸ் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.

    • ஆண்களுக்கான கோ-கோ விளையாட்டில் ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களை இப்பள்ளியின் தாளாளர் முருகேசன் மற்றும் செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    வயது வரம்பு அடிப்படையில் நடைபெறும் போட்டிகளில் ஆண்களுக்கான கோ-கோ விளையாட்டில் ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி சரகத்தில் உள்ள பல பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 14 வயது, 17 வயது, 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோ-கோ போட்டியில் அனைத்து பிரிவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் வெற்றிபெற பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் அஜித்குமார் ஆகியோரை இப்பள்ளியின் தாளாளர் முருகேசன் மற்றும் செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூயில் கடந்த நடைபெற்ற மாநில அளவிலான பொருளாதார விழாவில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    சின்னாளபட்டி:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூயில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற மாநில அளவிலான பொருளாதார விழாவில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக இளங்கலை பொருளியல்துறை மாணவர்கள் 11 பேர் கலந்து கொண்டனர்.

    மேலும் இவ்விழாவில் நடைபெற்ற போட்டிகளில் காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் வினாடி வினா, செவ்வியல் நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

    இதில் ஜெயசுருபா, மவுலீஸ்வரன் மற்றும் சக்தி ரேஷ்மா முதல் பரிசும், விஜயலட்சுமி ஆங்கிலக் கட்டுரை போட்டியில் 2-ம் பரிசும் வென்றனர். ஓட்டுமொத்த போட்டிகளில் காந்திகிராம பல்கலைக்கழகம் 2-ம் இடம் பெற்றது. பேராசிரியர்கள் சதீஸ்வரன், கொடியரசு ஆகியோர் மாணவர்களை இப்போட்டிகளுக்காக தயார் செய்து வழி நடத்தினர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார், துறைத்தலைவர் நேரு, பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர்
    • இறுதிப் போட்டியில் சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் தனித்திறமை, தொடும் முறை ஆகிய இரு பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட ஹாசினி, அஸ்மிதா ப்ரீத்தி உள்ளிட்ட 5 பேர் தங்கம் வென்றனர்

    திருச்சி:

    திருச்சி உறையூர் எஸ்.எம்.எஸ்.சி. பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. குமரேஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்த 350 சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் ஆசான் சீனிவாசன் தலைமையில் 9 சிலம்பம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    5 வயது முதல் 12 வயது வரை ஒரு பிரிவினரும், 13 வயது முதல் 17 வயது வரை ஒரு பிரிவினரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவும் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

    இறுதிப் போட்டியில் சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் தனித்திறமை, தொடும் முறை ஆகிய இரு பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட ஹாசினி, அஸ்மிதா ப்ரீத்தி, நந்தன ராஜேஷ், ரித்திகா காந்தி, மாதவன், சண்முக பிரியன், மலரவன், ஷாமினி பிரியா, அர்ச்சனா ஆகியோரில் 5 பேர் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்றனர்.

    4 பேர் 2-ம் பரிசாக வெள்ளிப் பதக்கமும், 9 பேர் 3-ம் பரிசாக வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி பரிசுகள் வழங்கினார்.

    சென்னை வீரா சாய் சிலம்பம் அசோசியேசன் ஆசான் சீனிவாசனுக்கு சிறந்த ஆசான் விருது வழங்கப்பட்டது.

    ×