search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய அளவிலான சிலம்ப போட்டி
    X

    தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்களுடன் சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல்.

    தேசிய அளவிலான சிலம்ப போட்டி

    • சிலம்ப போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    டெல்லியில் ஸ்கூல் கேம்ஸ் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் கனிஷ்கா, நகசோன், திருமுருகன், வர்சன் ஸ்ரீ, முகேஷ், சபரி வாசன், தருண், கணேஷ்குமார், கார்த்திக்குமார், செல்லபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்,

    இந்த போட்டி ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்புசண்டை, சுருள் வாள், வாள் வீச்சு, வேல்கம்பு பிரிவுகளில் நடைபெற்றது, இதில் ஒற்றைக் கம்பு பிரிவில் மாணவர்கள் நகசோன், கார்த்திகுமார், கனிஷ்கா ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

    மாணவர் வர்சன் ஸ்ரீ, திருமுருகன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். மாணவர்கள் சபரிவாசன், முகேஷ், செல்லபாண்டி ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றனர்.

    இரட்டை கம்பு பிரிவில் கனிஷ்கா மற்றும் முகேஷ் மூன்றாம் பரிசு வெண்கலப் பதக்கம் வென்றனர்.மேலும் சுருள் வாள் பிரிவில் வர்சன் ஸ்ரீ 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.திருமுருகன் 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

    வாள் வீச்சுப் பிரிவில் நகசோன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். கனிஷ்கா, செல்லபாண்டி ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    கம்பு சண்டை பிரிவில் நகசோன், செல்ல பாண்டி ஆகியோர் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர். திருமுருகன், கணேஷ்குமார், தருண் ஆகியோர் 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    வேல்கம்பு பிரிவில் சபரி வாசன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மத்யு இம்மானுவேல் பாராட்டினார்.

    Next Story
    ×