search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் தற்கொலை"

    • அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தரணியை உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (45). மூங்கில் கடை வைத்துள்ளார். இவரது மகன் தரணி (17). இவர் சென்னிமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் தரணி அங்கு படிக்க விருப்பம் இல்லை என கூறியதையடுத்து அவரது தந்தை அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தரணியை சேர்த்தார். ஆனால் அங்கும் தரணி சரியாக பள்ளிக்கு செல்லாமல் செல்போனில் விளையாடி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் தரணி வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் விசாரித்தனர். அப்போது தான் எலிபேஸ்ட் (விஷம்) தின்று விட்டதாக கூறியுள்ளார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தரணியை உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெற்றோரை அழைத்து வர கூறியதால் விரக்தி
    • குடியாத்தம் அருகே பரிதாபம்

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தத்தை அடுத்த லத்தேரி ரெயில் நிலையம் பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒரு வர் நேற்று முன்தினம் இரவு ஓடும் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகு றித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடி யாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.

    மேலும் இறந்தவர் குறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில்

    அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கே.வி.குப்பம் தாலுகா திரு மணி பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகன் அருண்குமார் (வயது 20) என்பதும், இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.

    மேலும் கடந்த 20-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அருண் குமாரை கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து வரு மாறு கூறியுள்ளனர். இது குறித்து வீட்டில் தகவல்தெரி விக்காமல் அருண்குமார் இருந்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கல்லூரி நிர்வாகத்தின் மூலம் இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த அருண்குமார் நேற்று முன்தினம் இரவு வீட் டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் ஜோலார்பேட் டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயில் முன் பாய்ந்து தற் கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ராமகிருஷ்ணா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினார். இதை அவரது தந்தை சுரேஷ் பாபு கண்டித்து உள்ளார்.
    • பெற்றோர் ராமகிருஷ்ணாவை காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் மேட்டுநாசுவம்பாளையம் மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. லாரி டிரைவர். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா (22) என்ற மகன் உள்ளார்.

    இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் ராமகிருஷ்ணா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினார். இதை அவரது தந்தை சுரேஷ் பாபு கண்டித்து உள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தபோது ராமகிருஷ்ணா வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.

    உடனே இதைப்பார்த்த அவரது பெற்றோர் ராமகிருஷ்ணாவை காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கல்லூரி மாணவர் ராமகிருஷ்ணா தான் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வி அடைந்ததால் எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு உள்ளதாகவும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ணா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாய் சுமித்ரா கொடுத்த புகார் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெய அவினேஷ் மதுக்கரை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு ஜெயஅவினேஷ் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

    கோவை,

    திருவாரூர் மாவட்டம் கிழசேரியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். தி.மு.க. பிரமுகர். இவரது மகன் ஜெய அவினேஷ் (வயது 18). இவர் மதுக்கரை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இதற்காக அவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.

    சம்பவத்தன்று விடுதியில் இருந்த ஜெயஅவினேஷ் வயிறு வலிப்பதாக நண்பர்களிடம் கூறி உள்ளார். பின்னர் சீரகத்தை சாப்பிட்டார். ஆனாலும் வயிற்று வலி குறையவில்லை. இதனால் ஜெய அவினேஷ் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    விடுதியில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் கல்லூரி விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு ஜெயஅவினேஷ் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் அது என்ன ரொம்ப தொல்ல பண்ணுது அம்மா என எழுதி இருந்தார். அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்த போது பெண் ேதாழி ஒருவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் அது என்ன ரொம்ப தொல்ல பண்ணுது நான் போறேன் என அனுப்பி இருந்தார்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் ஜெய அவினேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • விஷ்ணு கோவை திப்பம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்
    • விஷ்ணு திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பொள்ளாச்சி,

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மனோஜ். இவரது மகன் விஷ்ணு (வயது 19). இவர் கோவை மாவட்டம் திப்பம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.

    சம்பவத்தன்று விஷ்ணுவுடன் தங்கி இருந்த மாணவர் ஆல்பின் பிஜூ என்பவர் மாதிரி தேர்வு முடிந்ததும் அவரது சொந்த ஊருக்கு சென்றார். இவர் மட்டும் தனியாக விடுதியில் இருந்தார். விடுதியில் இருந்த விஷ்ணு திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்து விடுதி வார்டன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.    

    • உறவினர்கள் மறியல்
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    செய்யாறு:

    செய்யாறு டவுன் வைத்தியர் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விமல் (வயது 18) ராணிப் பேட்டை மாவட்டம் கலவை யில் உள்ள தனியார் என்ஜி னீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் அவர் ஆற்காடு சாலையில் உள்ள டயர் கடையில் பகுதி நேர தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் மாணவர் விமல், அவரது வீட்டுகுளியலறையில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

    இது குறித்து விமலின்‌ தாயார் அலமேலு செய்யாறு போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில், டயர் கடை உரிமையாளர் பூதேரிபுல்லவாக்கம் கிராமத் தைச் சேர்ந்த ஒரு பெண்னுடன் போனில் பேசிக் கொண்டு இருந்ததை டயர் கடை உரிமையாளர் மனைவியிடம் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக டயர் கடையில் வேலை செய்யும் மற்றொரு கூலி தொழிலாளி, விமல் ஆகியோரிடம் விசாரித்ததாகவும், பின்னர் தனது மகன் விமலை தகாதமுறையில் திட்டியதாகவும், அதன் காரணமாக விமல் மனமுடைந்து தற் கொலை செய்து கொண்ட தாகவும் தெரிவித்து உள்ளார்.

    தற்கொலைக்குக் காரணமாக இருந்த டயர் கடை உரிமை யாளரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    அந்தப் புகாரில் அடிப்ப டையில் செய்யாறு போலீ சார் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர், இறந்த விமலின் உடலைகைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடி வுற்ற நிலையில் விமலின் உடலை வாங்க மறுத்தும், டயர் கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று மாலை அண்ணா சிலை முன்பு சாலையில் விமலின் உறவினர்கள் மற்றும் வெங்கட்ராய ன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப்- இன்ஸ்பெக்டர் சங் கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பாட்டியுடன் பேசிவிட்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றார்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள வண்ணான் கோவிலை சேர்ந்தவர் பிரதீப் இவரது மகன் அறிவரசு (வயது 16 ). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார் . நேற்று மாலை அறிவரசு வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் சிறிது நேரம் தனது பாட்டியுடன் பேசிவிட்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவைத் தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அறிவுரசு தூக்கில் பிணமாக தூங்கினார்.

    இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருணின் தாய் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விரைந்து வந்து வருணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண்(வயது20). இவர் ஆவடியை அடுத்த பட்டாபி ராமில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருணின் தாய் குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் வருண் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். தாயின் நினைவால் சரியாக தூங்காமலும், சாப்பிடாமலும் இருந்து வந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் தாய் இறந்த சோகத்தில் இருந்த வருண் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தாயின் புடவையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வருணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தாய் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கவுதமன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • ஓட்டல் ஊழியர் சாப்பாடு வாங்க வேண்டுமா என கேட்பதற்காக அறைக்கு சென்றார்.

    கோவை,

    கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் முருகன். இவர மகன் கவுதமன் (வயது 18). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். பின்னர் அங்குள்ள லாட்ஜில் ஓய்வு எடுப்பதாக கூறி அறை எடுத்து தங்கினார். பின்னர் ஓட்டல் ஊழியர் சாப்பாடு வாங்க வேண்டுமா என கேட்பதற்காக அறைக்கு சென்றார். அப்போது அறைக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

    சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அறைக்குள் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் தற்கொைல செய்து கொண்ட கல்லூ ரி மாணவர் கவுதமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முகாமிட்டுள்ளனர்.
    • போலீசாரின் விசாரணைக்குப் பிறகு தான் மாணவர் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

    ராசிபுரம்:

    தேனி மாவட்டம், வெங்கடாஜலபுரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் சதீஸ் (வயது 21). இவர் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி இ.சி.இ. இறுதியாண்டு படித்து வந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர் சதீசும் நேற்று மதியம் சொந்த ஊருக்கு செல்வதற்காக கல்லூரி விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் ராசிபுரம் அருகே உள்ள பாலப்பாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் அவரது கல்லூரி நண்பரான, சேலத்தை சேர்ந்த மாதேஸ் மகன் கலாநிதி (26) என்பவர் வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் சேர்ந்து போதைப் பொருள் உபயோகப்படுத்தியதாக கூறி புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், மாணவர்கள் இருவரும் போதை பொருள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. சம்பவ இடம் ராசிபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்டதாக இருந்ததால், சதீஸ் மற்றும் கலாநிதி ஆகியோரை ராசிபுரம் போலீசில் ஒப்படைத்தனர். ராசிபுரம் போலீசார் மாணவர் கலாநிதியின் பெற்றோரை அழைத்து பேசினர். மாணவர் சதீசுக்காக கல்லூரி ஆசிரியர்களை வரவழைத்து பேசினர். பின்னர் மாணவர்கள் இருவரையும் ராசிபுரம் போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.

    இந்நிலையில், நேற்று இரவு மாணவர் சதீஸ் மீண்டும் கல்லூரியின் விடுதிக்கு சென்று அவரது அறையில் தங்கி உள்ளார். மற்ற மாணவர்கள் யாரும் அவரது அறையில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவர் சதீஸ் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி விடுதி வார்டன் கல்லூரி நிர்வாகத்திற்கும், புதுச்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தந்தார். போலீசார் விரைந்து வந்து சதீசின் உடலை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஸ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக சதீசின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முகாமிட்டுள்ளனர். போலீசாரின் விசாரணைக்குப் பிறகு தான் மாணவர் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

    • விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவருக்கு இன்று பிறந்தநாள் ஆகும்.
    • போலீசார் சந்திரா ஒபுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போரூர்:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நாகேந்திர ரெட்டி. இவரது மகன் சந்திரா ஒபுல் ரெட்டி (வயது21). மதுரவாயலில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் விருகம்பாக்கம் நியு காலனி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்கு சென்றுவந்தார்.

    அதே விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவருக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதையொட்டி விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் நேற்று நள்ளிரவு விடுதி முன்பு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் கலந்து கொள்ள சந்திரா ஒபுல் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஒருவர் விடுதியின் 2-வது தளத்தில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது சந்திரா ஒபுல் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் மற்றும் போலீசார் விரைந்து வந்து சந்திரா ஒபுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • சதீசுக்கு கடந்த சில மாதங்களாகவே பள்ளிக்கு செல்வதற்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • தனக்கு செல்போன் வேண்டும் என்று பெற்றோரிடம் சதீஷ் அடம்பிடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி ராமசாமி தென்-வடல் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சதீஷ்(வயது 17).

    கருப்பசாமி தனது வீட்டின் அருகிலேயே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். சதீஷ் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் எழுந்து பல் துலக்கிய சதீஷ் டீக்கடைக்குள் சென்றுள்ளார்.

    அதன்பின்னர் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை கடைக்குள் சென்று பார்த்தபோது சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர் சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சதீசுக்கு கடந்த சில மாதங்களாகவே பள்ளிக்கு செல்வதற்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனக்கு செல்போன் வேண்டும் என்று பெற்றோரிடம் அவர் அடம்பிடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×