என் மலர்
உள்ளூர் செய்திகள்

என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
- உறவினர்கள் மறியல்
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
செய்யாறு:
செய்யாறு டவுன் வைத்தியர் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விமல் (வயது 18) ராணிப் பேட்டை மாவட்டம் கலவை யில் உள்ள தனியார் என்ஜி னீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் அவர் ஆற்காடு சாலையில் உள்ள டயர் கடையில் பகுதி நேர தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் மாணவர் விமல், அவரது வீட்டுகுளியலறையில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இது குறித்து விமலின் தாயார் அலமேலு செய்யாறு போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில், டயர் கடை உரிமையாளர் பூதேரிபுல்லவாக்கம் கிராமத் தைச் சேர்ந்த ஒரு பெண்னுடன் போனில் பேசிக் கொண்டு இருந்ததை டயர் கடை உரிமையாளர் மனைவியிடம் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டயர் கடையில் வேலை செய்யும் மற்றொரு கூலி தொழிலாளி, விமல் ஆகியோரிடம் விசாரித்ததாகவும், பின்னர் தனது மகன் விமலை தகாதமுறையில் திட்டியதாகவும், அதன் காரணமாக விமல் மனமுடைந்து தற் கொலை செய்து கொண்ட தாகவும் தெரிவித்து உள்ளார்.
தற்கொலைக்குக் காரணமாக இருந்த டயர் கடை உரிமை யாளரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
அந்தப் புகாரில் அடிப்ப டையில் செய்யாறு போலீ சார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர், இறந்த விமலின் உடலைகைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடி வுற்ற நிலையில் விமலின் உடலை வாங்க மறுத்தும், டயர் கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று மாலை அண்ணா சிலை முன்பு சாலையில் விமலின் உறவினர்கள் மற்றும் வெங்கட்ராய ன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப்- இன்ஸ்பெக்டர் சங் கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






