கோவையில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

ஜெய அவினேஷ் மதுக்கரை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு ஜெயஅவினேஷ் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
கோவையில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
Published on

கோவை,

திருவாரூர் மாவட்டம் கிழசேரியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். தி.மு.க. பிரமுகர். இவரது மகன் ஜெய அவினேஷ் (வயது 18). இவர் மதுக்கரை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இதற்காக அவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.

சம்பவத்தன்று விடுதியில் இருந்த ஜெயஅவினேஷ் வயிறு வலிப்பதாக நண்பர்களிடம் கூறி உள்ளார். பின்னர் சீரகத்தை சாப்பிட்டார். ஆனாலும் வயிற்று வலி குறையவில்லை. இதனால் ஜெய அவினேஷ் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

விடுதியில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் கல்லூரி விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு ஜெயஅவினேஷ் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் அது என்ன ரொம்ப தொல்ல பண்ணுது அம்மா என எழுதி இருந்தார். அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்த போது பெண் ேதாழி ஒருவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் அது என்ன ரொம்ப தொல்ல பண்ணுது நான் போறேன் என அனுப்பி இருந்தார்.

பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் ஜெய அவினேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com