search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒன்பிளஸ் 7 ப்ரோ"

    குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் ஓடைக்குள் லாரி பாய்ந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Gujarataccident
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம், பவாநகர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் அம்ரேலி மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு ஒரு லாரி மூலம் நேற்றிரவு தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    அம்ரேலி மாவட்டம், ரஜுலா நகரில் உள்ள ஓடைப் பாலத்தின் வழியாக வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தின் சுவற்றை உடைத்து கொண்டு ஓடை நீரில் விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காயமடைந்த 24 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். #Gujarataccident

    எல்ஜி நிறுவனத்தின் கியூ7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    சீயோல்:

    எல்ஜி நிறுவனத்தின் கியூ7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இவை கொரியாவில் அறிமுகமாகி உள்ளன. இவை இந்த ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, போர்டிரெயிட் மோட், கியூலென்ஸ், ஹை-ஃபை ஆடியோ, டிடிஎஸ் X 3டி சரவுன்ட் சவுன்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    3000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய ஸ்மார்ட்போனில் குவல்காம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் மூலம் 0-50% சார்ஜ் செய்ய 30 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    எல்ஜி கியூ7 / கியூ7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 18:9 FHD பிளஸ் 2160x1080 பிக்சல் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14என்எம் சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி (கியூ7) 
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி (கியூ7 பிளஸ்)
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 (ஓரியோ)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா (கியூ7 பிளஸ்)
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF (கியூ7)
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68) MIL-STD 810G சான்று
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி 2.0
    - 3,000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்

    எல்ஜி கியூ7 ஸ்மார்ட்போன் அரோரா பிளாக் மற்றும் லாவென்டர் வைலட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 495,000 கொரிய வொன் (இந்திய மதிப்பில் ரூ.30,850) என்றும் எல்ஜி கியூ7 பிளஸ் மொராக்கன் புளு நிற ஸ்மார்ட்போன் விலை 570,000 கொரிய வொன் (இந்திய மதிப்பில் ரூ.35,540) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் ஐரோப்பாவில் துவங்கி, அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என எல்ஜி அறிவித்துள்ளது.
    ஜி-7 உச்சி மாநாட்டில் டிரம்ப் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். எனவே அவர் மாநாடு முடிவதற்கு முன்பே அங்கிருந்து விடைபெற்று விடக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
    டொராண்டோ:

    கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் தொடங்கியது.

    உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை தன்னோடு இணைத்துக்கொண்டதால் இந்த அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது. ஆனால் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா விரும்பியது. இதை டிரம்ப் பேசும்போது வெளிப்படுத்தினார். அப்போது அவர், ரஷியா மீண்டும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

    ஆனால் இதில் ரஷியா பங்கேற்கக்கூடாது என்று பிற உறுப்பு நாடுகள் கருத்து கொண்டு உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    மேலும், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது டிரம்ப் இறக்குமதி வரியை விதித்து இருப்பதும் அவருக்கு எதிரான நிலையை பிற நாடுகள் எடுக்க வைத்து விட்டன. டிரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தார். வர்த்தகம், பருவநிலை மாற்றம், ஈரான் விவகாரம் ஆகியவற்றில் டிரம்பின் நிலைப்பாடு, உண்மையான ஆபத்தாக உருவெடுத்து உள்ளது என ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் எச்சரித்தார்.

    ஜி-7 உச்சி மாநாட்டில் டிரம்ப் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். எனவே அவர் மாநாடு முடிவதற்கு முன்பே அங்கிருந்து விடைபெற்று விடக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. 
    நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார். #NeetKillsPradeepa #BanNEET #ReliefPradeepaFamily #TNAssembly
    சென்னை:

    மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். நீட் தேர்வை தமிழில் 24 ஆயிரத்து 720 பேர் எழுதினார்கள். அவ்வாறு தமிழில் தேர்வு எழுதிய விழுப்புரம் மாவட்ட மாணவி பிரதீபா மிக குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். மாணவி பிரதீபா பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1125 மதிப்பெண் பெற்று இருந்தார்.

    கடந்த ஆண்டு நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காததால் இந்த ஆண்டு தேர்வு எழுதிய அவருக்கு 39 மதிப்பெண்களே கிடைத்தது. கடந்த ஆண்டு பெற்ற 155 மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண் கிடைத்ததால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.



    கடந்த ஆண்டு நீட் தேர்வால் மாணவி அனிதா மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது போல இந்த ஆண்டு மாணவி பிரதீபாவின் மரணமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி விஷம் குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும்  நீட் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசியபோது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

    இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், தேர்வுகளில் தோல்வி அடைந்ததற்காக தற்கொலை போன்ற தவறான முடிவுகளை மாணவர்கள் யாரும் எடுக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். #NeetKillsPradeepa #BanNEET #ReliefPradeepaFamily #TNAssembly
    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் கேலக்ஸி ஜெ7 ப்ரோ விலையில் ரூ.2000 குறைக்கப்பட்டது.

    மார்ச் மாத விலை குறைப்பை தொடர்ந்து கேலக்ஸி ஜெ7 ப்ரோ விலை ரூ.20,900-இல் இருந்து ரூ.18,900-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆஃப்லைன் விற்பனையகங்களில் விலை குறைப்பு அமலாக்கப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.2000 மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.16,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    புதிய விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பை மும்பையே சேர்ந்த மகேஷ் டெலிகாம் ட்விட்டரில் தெரிவித்து இருக்கும் நிலையில், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற தளங்களிலும் இதுகுறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் பிரபல மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக கேலக்ஸி ஜெ7 ப்ரோ இருக்கிறது. 

    மெல்லிய மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் கேலக்ஸி ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார் ஹோம் பட்டனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பில்ட்-இன் என்எஃப்சி (NFC) சப்போர்ட் மூலம் சாம்சங் பே வசதியை கொண்டிருக்கிறது.



    சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு நௌக்கட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 13 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
    - 3600 எம்ஏஎச் பேட்டரி
    இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ சலுகை வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சாம்சங் இந்தியா நிறுவனங்கள் இணைந்து சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கேஷ்பேக் மற்றும் இதர சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளன.

    அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2018) மற்றும் கேலக்ஸி ஜெ7 டுயோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி தூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. செப்டம்பர் 30, 2018 வரை கிடைக்கும் இந்த சலுகையில் கேலக்ஸி ஜெ2 (2018) ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு உடனடி கேஷ்பேக் ரூ.2,750 (ரூ.50 மதிப்புள்ள 55 வவுச்சர்கள்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஷ்பேக் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299 சலுகைகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.



    இதேபோன்று கேலக்ஸி ஜெ7 டுயோ ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கும் ரூ.2,750 (ரூ.50 மதிப்புள்ள 55 வவுச்சர்கள்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஷ்பேக் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299 மற்றும் அதற்கும் அதிக விலையில் கிடைக்கும் சலுகைகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

    இந்தியாவில் கேலக்ஸி ஜெ2 (2018) ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் அறிமுகம் செயய்ப்பட்டன. தற்சமயம் அறிவிக்கப்பட்டிருப்பதை போன்ற அறிமுக சலுகைகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த சலுகை தற்சமயம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஜெ2 டுயோ ஸ்மார்ட்போனும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனுக்கு எவ்வித அறிமுக சலுகைகளும் அறிவிக்கப்பட்டவில்லை.
    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் உடல்களும் இன்று பிற்பகலுக்குள் மறு பிரேதபரிசோதனை செய்யப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். #ThoothukudiFiring #SandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு பலியான 13 பேரில் 7 பேர்களின் உடல்கள் பிரேதபரிசோதனை நடந்து முடிந்துள்ளது. அந்த உடல்களை மறு பிரேதபரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி கலவரத்தில் பலியான 7 பேரின் உடல்கள் ஐகோர்ட் உத்தரவுப்படி மறு பிரேதபரிசோதனை இன்று மதியம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் வருகிறார். ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர், தமிழக மருத்துவர்கள் 2 பேர் பிரேத பரிசோதனை செய்வார்கள்.

    மாஜிஸ்திரேட் மற்றும் பலியானவர்களின் உறவினர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். இன்று பிற்பகலுக்குள் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மனித உரிமை ஆணைய சிறப்புக்குழு வந்தால் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம். ஒருநபர் விசாரணை கமி‌ஷனுக்கான அலுவலகம் தயார் நிலையில் உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் அரசு அறிவித்தபடி நாளை திறக்கப்படும். மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #SandeepNanduri
    ×