search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி-7 உச்சி மாநாட்டில் டிரம்ப் தனிமைப்படுத்தப்பட்டார்
    X

    ஜி-7 உச்சி மாநாட்டில் டிரம்ப் தனிமைப்படுத்தப்பட்டார்

    ஜி-7 உச்சி மாநாட்டில் டிரம்ப் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். எனவே அவர் மாநாடு முடிவதற்கு முன்பே அங்கிருந்து விடைபெற்று விடக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
    டொராண்டோ:

    கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் தொடங்கியது.

    உக்ரைனின் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை தன்னோடு இணைத்துக்கொண்டதால் இந்த அமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது. ஆனால் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷியா விரும்பியது. இதை டிரம்ப் பேசும்போது வெளிப்படுத்தினார். அப்போது அவர், ரஷியா மீண்டும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

    ஆனால் இதில் ரஷியா பங்கேற்கக்கூடாது என்று பிற உறுப்பு நாடுகள் கருத்து கொண்டு உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    மேலும், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது டிரம்ப் இறக்குமதி வரியை விதித்து இருப்பதும் அவருக்கு எதிரான நிலையை பிற நாடுகள் எடுக்க வைத்து விட்டன. டிரம்பின் இந்த முடிவு சட்ட விரோதமானது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தார். வர்த்தகம், பருவநிலை மாற்றம், ஈரான் விவகாரம் ஆகியவற்றில் டிரம்பின் நிலைப்பாடு, உண்மையான ஆபத்தாக உருவெடுத்து உள்ளது என ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் எச்சரித்தார்.

    ஜி-7 உச்சி மாநாட்டில் டிரம்ப் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். எனவே அவர் மாநாடு முடிவதற்கு முன்பே அங்கிருந்து விடைபெற்று விடக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. 
    Next Story
    ×