search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ முகாம்"

    • நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டது
    • மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். சப்- கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் இனியன் வரவேற்றார். இதில் ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    மேலும் மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாற்று திறனாளிகளிடமிருந்து அனைத்துத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டது.

    கண் மருத்துவ பிரிவு, காது-மூக்கு-தொண்டை, எலும்பு மூட்டு சிகிச்சை, குழந்தை நலப்பிரிவு, மன நோய் பிரிவு உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    • இலவச கண் மருத்துவ முகாமினை திருநெல்வேலி அரவிந்த் கண் ஆஸ்பத்திரியுடன் இணைந்து நடத்தியது.
    • முகாமில் 455 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. தனது நிறுவன சமூக பொறுப்பின் கீழ் பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட தேவிகோடு சி.எஸ்.ஐ சமூகநலக் கூடத்தில் இலவச கண் மருத்துவ முகாமினை திருநெல்வேலி அரவிந்த் கண் ஆஸ்பத்திரியுடன் இணைந்து நடத்தியது.

    முகாமை தேவிகோடு சி.எஸ்.ஜ. சேகரசபை போதகர் ஜஸ்டஸ், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ் மற்றும் ஐ.ஆர்.இ. துணைப்பொது மேலாளர் (சுரங்கம் மற்றும் வள ஆதாரங்கள்) சிவராஜ் முன்னிலையில் தொடங்கி வைத்தார். முகாமில் கண்புரை நோய், சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தை கண்நோய், கிட்டப் பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமில் 455 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 225 பேருக்கு கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் திருநெல்வேலி அரவிந்த் கண் ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர், ஐ.ஆர்.இ. நிறுவன அதிகாரிகள், தேவிகோடு சி.எஸ்.ஐ.சேகரசபை செயலாளர் சாலமன் பால், உதவி போதகர் ராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 23-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2023-2024 நிதியாண்டில் பல்வேறு வகையான அரசு நலத்திட்டங்கள் எளிதில் எவ்வித சிக்கல்கள் இன்றி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைய ஏதுவாக பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வாணியம்பாடி வருவாய் உள் வட்டத்தில் இஸ்லாமியா கல்லூரி அருகில் அமைந்துள்ள அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வருகிற 23-ந் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் புதியதாக தேசிய அடையாள அட்டை பெற விரும்பும் நபர்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமாநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் பரிசோதனை செய்து கொண்டார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன் னிலை வகித்தார்.

    இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை மருத்து வம், தோல் சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், தொடர் பான அனைத்து வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் மேல் சிகிச்சை தேவைப்படு பவர்களுக்கு ஆலோசனை களும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் டாக்டர் ரத்தின குமார், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு தாது உப்புக்கள் வழங்கப்பட்டது.
    • விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து அவைகளுக்கு தடுப்பூசி, மருந்துகள் பெற்று சென்றனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர் கிருஷ்ணராஜ், உதவியாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு தாது உப்புக்கள் வழங்கினர். இதில் துணைத்தலைவர் ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து அவைகளுக்கு தடுப்பூசி போட்டு, மருந்துகள் பெற்று சென்றனர்.

    • கலிக்கம் மருத்துவ முகாம் ஆலய வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் 17-ந் தேதி நடைபெறுகிறது.
    • காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலய வளாகத்தில் கண்ணில் சொட்டு மருந்து விடும் கலிக்கம் மருத்துவ முகாம்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி பொற்றையடியில் அமைந்துள்ளது ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம். இவ்வாலயம் சார்பாக கண்ணில் சொட்டு மருந்து விடும். கலிக்கம் மருத்துவ முகாம் ஆலய வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் 17-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்த மாதம் நாளை மறுநாள் (வெள்ளிகிழமை) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலய வளாகத்தில் கண்ணில் சொட்டு மருந்து விடும் கலிக்கம் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கலிக்கம் என்ற சொட்டு மருந்து கண்ணில் விடுவதால் சொரியாஸிஸ், வெண்படை, கரும்படை, விஷக்கடி, தேமல் மற்றும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை. குளுக்கோமா, ரெடினா போன்ற குறைபாடுகள் உடையோருக்கு பயனளித்து வருவதாக மருத்துவ முகாம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வரும் ஸ்ரீஷீரடி சாயியாபா ஆனந்த ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
    • 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி சங்கம், திருப்பூர் மாநகராட்சி நடமாடும் தொழிலாளர்கள் மருத்துவமனை ஆகியவை இணைந்து கல்குவாரி தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.

    இதற்கு திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரணம்பேட்டை கல் குவாரி சங்க தலைவர் குணசேகர் முன்னிலை வகித்தார். செயலாளர் தேவராஜ் வரவறே்று பேசினார். கல்குவாரி தொழிலாளர்களுக்கு டாக்டர் அபிராமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர். நிகழ்ச்சியில் கல்குவாரி சங்க துணைத் தலைவர் பிரகாஷ் மற்றும் சந்திரசேகர், நடராஜ், மற்றும் கல்குவாரி தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புல்லாணியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
    • தாதனேந்தல் ஊராட்சி மன்றத்தலைவர் டாக்டர் ஆர்.கோகிலா ராஜேந்திரன் வரவேற்றார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம்-திருப்புல்லாணி ஈ.சி.ஆர் பள்ளப்பச்சேரி ரோட்டில் பி.வி.எம் மனநலக்காப்பகம் திறப்பு விழாவை முன்னிட்டு பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை 5-ந் தேதி நடக்கிறது.

    ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தும் சர்க்கரை நோயாளி களுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நாளை நடைபெறுகிறது.

    பி.வி.எம் அறக்கட்டளை போர்டு சேர்மன் சித்தார் கோட்டை முகம்மதியா பள்ளிகளின் இணைத் தலைவர், இளம் வள்ளல் புருணை தொழிலதிபர் ஹாஜி எஸ்.டி.ஷாஜஹான் வழிகாட்டுதலின் படி,

    பி.வி.எம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனை படி நடைபெறும் இந்த முகாமிற்கு பி.வி.எம் மருத்துவ சேவை அணியின் மாநில தலைவர் சமூக சேவகர் யாசர் அரபாத் தலைமை வகிக்கிறார்.

    திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர் ஆர்.கோகிலா ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார்.திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியன், திருப்புல்லாணி ஊராட்சி மன்றத் தலைவர் கஜேந்திரமாலா, ஐ.மு.மு.க மாநில செயலாளர் அன்வர் அலி, தொண்டரணி மாநில பொருளாளர் அகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவரும், புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் எடிட்டரும், பி.வி.எம் அறக்கட்டளை சேர்மனும், பி.வி.எம். மனநல காப்பகம் நிறுவனருமான தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் முகாம் அறிமுக உரை நிகழ்த்த உள்ளார். ராமநாத புரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி, திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்க உள்ளனர்.

    பி.வி.எம் மருத்துவ சேவை அணியின் மாவட்ட தலைவர் அபுல்ஹசன், மாவட்ட செயலாளர் ஷாநாஸ் கான், மாவட்ட துணைத்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் எம்.யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஹபீப் ரஹ்மான், முஹம்மது கனி, ஜாபர், ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது யூனுஸ் கான், நகர் துணை செயலாளர் சிவராஜா, நகர் செயலாளர் மன்சூர், நகர் பொருளாளர் சபரிநாதன், தி.மு.க தலைமை கழக சொற்பொழிவாளர் முஜிபுர் ரஹ்மான் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பி.வி.எம் அறக்கட்டளை மருத்துவ சேவை அணி ராமநாதபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    • முகாமில் உள்ள மருத்துவர்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தினார்.

    நாகர்கோவில், அக்.31-

    கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில், உள்ளடக்கிய கல்வியின் கீழ் 2307 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர். மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு வருவதற்கு, பள்ளிகளில் கற்கும் சூழல் உருவாக்கப்பட்டு, கற்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    குறைந்த பாதிப்புடைய மாற்றுத்திறன் குழந்தைகள் முறையாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தீவிர பாதிப்பினையுடைய 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, உள்ளடக்கிய கல்வியின் கீழ்இயங்கும் ஆயத்த பயிற்சி மையம் மூலம் சிறப்பு கல்வி மற்றும் இயன் முறைமருத்துவம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

    வீட்டு வழிக் கல்விபெறும் குழந்தைகளின் உடல்நலம், மனநலம் மற்றும் அறிவு வளர்ச்சி போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை முறையான மதிப்பீடு செய்து, அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க மாணவர்களை தேர்வு செய்தல், அடையாள அட்டைகள் வழங்குதல், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்பு தேவைகளை கண்டறிதல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெறுதல் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் பயனாளிகளை கண்டறிந்து, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மருத்துவ முகாமானது சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணைந்து அனைத்து வட்டார வள மையங்களிலும் நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வீல் சேர் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கி, சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டதோடு மாற்றுத்திறன் குழந்தைகளிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் முகாமில் உள்ள மருத்துவர்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட கல்வி அலுவலர் மோகன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தேசிய காசநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் சில்லரைப்புரவு ஊராட்சியில் நடைபெற்றது.
    • மருத்துவ பரிசோதனைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவனை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே சில்லரைப்புரவு ஊராட்சியில் தேசிய காசநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. சில்லரைப்புரவு ஊராட்சி மன்ற தலைவர் நா.குமார் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட கல்வியாளர் மாரிமுத்துசாமி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிய, எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவனை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு காசநோய் பரிசோதனையை செய்து கொண்டனர்.

    முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் முத்துலெட்சுமி, வார்டு உறுப்பினர்கள் மகேஸ்வரி, பார்வதி, கணேசன், தங்க மாரியப்பன், தாமரைச் செல்வன்,முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் முருகராஜ் மற்றும் மாரிமுத்து, அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கிராம சுகாதார செவிலியர், இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் செண்பக ராஜன் நன்றி கூறினார்.

    • திப்பணம்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளை சார்பில் டி.எம்.பி. பவுண்டேசன், திப்பணம்பட்டி கிளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காமராஜ் நினைவு இந்து நடுநிலைப்பள்ளி யில் நடைபெற்றது. முகாமில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் மீனாட்சி மற்றும் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திப்பணம்பட்டி கிளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இதயத்துடிப்பு போன்ற பல பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

    சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சென்னை சேத்துப்பட்டு அரிமா சங்கம் மற்றும் அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் இருதயநோய் மருத்துவம், புற்றுநோய் விழிப்புணர்வு முகாம், பல் பரிசோதனை, கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு கண்டறிதல், எலும்பு தேய்மானம் போன்ற இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டது. அப்பல்லோ மருத்துவ மனையில் இருந்து மருத்துவர்கள் வருகை புரிந்து இருதய பிரச்சினை உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கான அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் இருந்து மருத்துவர்கள் வருகை புரிந்து 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் கண்டறிந்து ஆலோசனையும் வழங்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு போன்ற பல பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. மாணவர்கள் தன்னார்வத்துடன் ரத்த தானம் வழங்கினர்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக அரிமா சங்க மாவட்ட ஆளுனர் ராஜேஷ் என்.தவே, முன்னாள் சர்வதேச இயக்குனர் சம்பத், வழி காட்டி மற்றும் மெகா கவர்னரும், ஆலோசகரும், சி.இ.ஓ.வுமான என்.ஆர்.தனபாலன், கல்லூரி முதல்வர் இனிதா லீபனோன் எபன்சி பங்கேற்றனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×