பாவூர்சத்திரம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்

திப்பணம்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பாவூர்சத்திரம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்
Published on

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளை சார்பில் டி.எம்.பி. பவுண்டேசன், திப்பணம்பட்டி கிளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காமராஜ் நினைவு இந்து நடுநிலைப்பள்ளி யில் நடைபெற்றது. முகாமில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் மீனாட்சி மற்றும் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திப்பணம்பட்டி கிளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com