search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனித உரிமை"

    • புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர்
    • இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது. 28.9% குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்.

    குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பதும் அவசியம்.

    புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது புரிகிறது. பாதுகாப்பான நாடாகவும், ஒன்றுபட்ட சமூகமாகவும் வளர்வோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • 2022ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன
    • இது ஒரு தேசமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும் வளர்ந்த தேசத்தின் அடையாளம்.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன? என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

    அதில், "2022ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன, அதில் 31 ஆயிரம் பாலியல் வன்புணர்வு வழக்குகள் அடங்கும்.

    உத்தரகாண்டில் பாதிக்கப்பட்ட அங்கிதா பண்டாரியின் குடும்பமாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்காததால் குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவனாக இருந்தாலும் சரி, ஜார்கண்டில் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளான ஸ்பெயின் சுற்றுலா பயணியாக இருந்தாலும் சரி.

    இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும் ஒரு உணர்வற்ற அமைப்பு மற்றும் கொடூரமான சமூகத்தின் பிரதிபலிப்பாகும், இது ஒரு தேசமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும் வளர்ந்த தேசத்தின் அடையாளம்" என தெரிவித்துள்ளார்.

    • புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது
    • இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்டதை எதிர்த்து புதுச்சேரி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பாஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில் - பாஜகவின் மாநில முன்னாள் தலைவரும் மகளிருமான டாக்டர் தமிழிசை அவர்கள் துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அச்சிறுமியை கழுத்தை நெறித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது

    இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, பெண்குழந்தைகள் நலம் என மேடை தோறும் பொய்மூட்டைகளை அவிழ்த்து கொக்கரித்து வரும் பாஜக கட்சி ஆட்சி நடக்கும் மாநிலத்தில், அதுவும் மூச்சு முந்நூறு முறை பா.ஜ.க.வில் பெண்ணுரிமை" கூவும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை ஆளுநராக உள்ள மாநிலத்தில், உலகத்தில் எங்கும் நடைபெறாத ஒரு அவலம்- அதுவும் பெண் சிறுமிக்கு கொடுமை நடந்துள்ளது.

    2024 ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.

    இதுதான் பா.ஜ.க.வினர் கூறும் பெண் குழந்தைகள் வளர்ச்சியா..? என கேட்கிறேன். அத்துடன், 'உலகத்தையே பா.ஜ.க. ஆட்சிதான், இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது" என்று புளுகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. கட்சியினரே, நீங்கள் சொல்வது உண்மைதான். ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, பாஜக ஆளும் புதுச்சேரி மாநிலத்தின் பக்கம் திரும்பி காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

    அதுமட்டுமல்லாமல், இந்திய பிரதமர் மோடி அவர்கள், இந்தியா முழுவதும் பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும் 2015-ல் பிரதமர் மோடி அவர்கள் துவக்கிய 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" திட்டத்தை துவக்கினார். ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை

    "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை, காட்டுமிராண்டித்தனமான கொலையையும் பெண்களை பாதுகாக்கத் தவறிய பா.ஜக ஆட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுங் கண்டனத்தை தெரிவிப்பதோடு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்

    • சிறுமி விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல்.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக பெரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது

    இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுப்பேன். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் மனித உரிமையெல்லாம் நான் பார்க்க மாட்டேன்" என்றார்.

    ×