search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்கள்"

    • கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர்.
    • அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.

    கோத்தகிரி 

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சிலர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் குஞ்சப்பனை சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் சோதனை செய்தனர்.

    அவர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதற்காக பையில் கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கவுரி சங்கர் (வயது 40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
    • வனப் பகுதிகளிலும், பொது இடங்களிலும் காலி மது பாட்டில்கள் தேங்குவது தவிா்க்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில் 75 சதவீத காலி மது பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி பாட்டில்களை பொது இடங்களில் வீசிவிட்டு செல்வதை தவிா்க்க காலி மதுபான பாட்டில்களை சேகரிக்கும் மையம் 15 இடங்களில் மாவட்ட நிா்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளில் கடந்த மே 15-ந் தேதி முதல் விற்பனை செய்யப்படும் மதுபான புட்டிகளின் மேல் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    காலி பாட்டில்களை எந்தவொரு மதுபான கடையிலும் கொடுத்து ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் வனப் பகுதிகளிலும், பொது இடங்களிலும் காலி மது பாட்டில்கள் தேங்குவது தவிா்க்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ஜூலை 31-ந் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட பாட்டில்களில் 75 சதவீத காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தக்கலை போலீஸ் படையினர் திக்கணங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • புதூர் பகுதியில் நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனை நடத்தியபோது 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீஸ் படையினர் திக்கணங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது புதூர் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த ஒருவர் போலீசை கண்டதும் நைசாக ஓட முயற்சித்தார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரது கையில் இருந்த பையை சோதனை செய்த போது பிராந்தியுடன் கூடிய மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனே அவரை கைது செய்து போலீசார் அவரது கையில் இருந்த  விசாரனையில் கைது செய்யபட்ட நபர் புதூர் கொட்டாரத்துவிளையை சேர்ந்த தொழிலாளி சசிகுமார் என்று தெரிய வந்தது.

    சீர்காழி அருகே சாலையின் குறுக்கே மதுபாட்டில்களை தொங்கவிட்டு கள்ளச் சாராய விற்பனைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே வேட்டங்குடி மற்றும் வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த வாடி, வேம்படி, இருவக்கொல்லை ஆகிய கிராமங்களில் இரவும் பகலும் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மதுபிரியர்கள் வெளியூர்களில் இருந்து வந்து மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர். 

    மதுபாட்டில்கள் முக்கிய பொது இடங்களான பள்ளி, மற்றும் ஆரம்ப சுகாதாரநிலைய கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் விற்கப்படுவதால் ஊர் பொதுமக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

    அப்பகுதியில் விற்கப்படும் மதுபாட்டில்கள் போலி மதுபாட்டில்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனை கண்டித்து வேட்டங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சாலையின் குறுக்கே மதுபாட்டில்கள் மற்றும் கருப்பு துணி ஆகியவைகளை தோரணமாக கட்டி தொங்கவிட்டு பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×