search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் தினம்"

    • வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் மகளிர் தின விழா நடந்தது.
    • விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. மகளிர் திட்ட மாவட்ட இயக்குநர் காளிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் கார்த்திக், உதவி திட்ட அலுவலர்கள் வெள்ளைபாண்டிமரியாள் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் ரம்யா வரவேற்றார். மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி,சரசு, பூமிநாதன், ஜெயகாந்தன்,மீனா, சூர்யா, பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், வெங்கடேசுவரி, குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமுதாய ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, சமூகவள பயிற்றுநர் குமாரி, செல்வி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பொறுப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • மகளிர் தின விழாவிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
    • நரிக்குறவர்களின் குழந்தைகள் பள்ளி செல்லும் நிலை தற்போது உருவாகியுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கீதா பள்ளியில் மாநகர தி.மு.க. மகளிர் அணி சார்பில் முதலாம் ஆண்டு மகளிர் தின விழா நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் பேச்சு போட்டி, கேள்வி- பதில், அறிவுத்திறன் போட்டி, மியூசிக்கல் சேர், பலூன் உடைத்தல், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு கள் வழங்கி பேசியதாவது:-

    கல்வி வேலைவாய்ப்பு களில் 30 சதவீதம் ஒதுக்கீடு, 8 மற்றும் பிளஸ்-2 வகுப்பு படித்தவர்களுக்கு திருமண உதவி, இப்போது பிளஸ்-2 வகுப்பிற்கு பின் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது கட்டமாக தொடங்கி வைத்துள்ளார்.

    இதனால் 2 ஆண்டு காலம் கல்லூரி படிப்பை ஓதுக்கி வைத்தவர்கள் 13 ஆயிரம் பேர் கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். கிராமப் புறங்களை சார்ந்தவர்களும் வளர்ச்சியடையும் வகையில் வங்கியில் வாங்கியுள்ள மகளிர் சுயஉதவி கடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நரிக் குறவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதன் மூலம் அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

    வாழ்க்கையில் தோல்வி வரத்தான் செய்யும். அதையும் கடந்து சாதனை படைக்க வேண்டும். ஜாதி, மதம், ஏழை- பணக்காரன் பாகுபாடு இல்லாமல் ஒன்றே குலம் ஓருவனே தேவன் என்ற கோட்பாடோடு பணியாற்றி நாம் பெற்ற ஆண், பெண் குழந்தைகளை பாரபட்சமின்றி நல்ல அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டும். சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும் ஆடம்பரம் இல்லா மல் நாமும் அறிவுத்திறனை வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பா ளர் உமாதேவி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர துணைச் செயலாளர் பிரமிளா, கவுன்சிலர்கள் ஜான்சி ராணி, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் தனலட்சுமி, முத்துமாரி, ம.தி.மு.க. கவுன்சிலர் ராமுஅம்மாள், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பார்வதி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணா தேவி, மகளிர் அணி நிர்வாகிகள் கவிதா தேவி, இந்திரா, பெல்லா, ரேவதி, சத்யா, கன்னிமரியாள், சந்தனமாரி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் சந்தானலட்சுமி, சாந்தி, பாரதி, சசிகலா, விமலா ரேகா, தனம் ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

    மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் கவிதா தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் சந்தானலட்சுமி, சாந்தி, பாரதி, சசிகலா, விமலா ரேகா, தனம் ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இணை அமைப்பாளர் ஹேமலதா வரவேற்றார். மாநில செயலாளர் கோதண்டபாணி தொடக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மாநில செயலாளர் ஹேமலதா கலந்து கொண்டு சிங்க மங்கைகளே சீறி எழுக, சங்க உரிமைகளை மீட்டு பெறவே என்ற தலைப்பில் பேசினார்.

    இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர் லதா நன்றி கூறினார்.

    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் ஊராட்சியில் பிரீடம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பிரீடம் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு ஆழைப்பாளராக திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ. டி. கே. ராஜா, கலந்து கொண்டு சாதனை படைத்த, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

    திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை அதிகாரி எழிலரசி உட்பட பலர் கலந்து ெகாண்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மேலாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

    • 106 வயதான குட்டியம்மா தனது 104 வயதில் எழுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்து தொடக்க கல்வி படித்து சாதனை படைத்தார்.
    • குட்டியம்மாவிற்கு டெல்லியில் நாளை நடைபெறும் மகளிர் தினவிழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் குட்டியம்மா. 106 வயதான இவர் தனது 104 வயதில் எழுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்து தொடக்க கல்வி படித்து சாதனை படைத்தார். இதற்காக டெல்லியில் நாளை நடைபெறும் மகளிர் தினவிழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் இன்று டெல்லிக்கு விமானத்தில் செல்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது பொக்கை வாய் திறந்து சிரித்தார்.

    • என் மகள்கள் பாலின பாகுபாட்டை சந்தித்திருக்கிறார்கள்
    • நாங்கள் விளம்பரம் தேடிக்கொள்ளவோ, முஸ்லிம் சமூகத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தவோ மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை

    காசர்கோடு:

    29 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியர், 3 மகள்கள் பிறந்து வளர்ந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவசியமும் நேர்ந்திருக்கிறது. இதுபற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:-

    கேரளாவில் திரைப்பட நடிகராகவும் வக்கீலாகவும் இருப்பவர், சூக்கூர். இவரது மனைவி, ஷீனா சூக்கூர். இவர் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை இயக்குனராக உள்ளார்.

    இந்த தம்பதியர் 1994-ம் ஆண்டு, அக்டோபர் 6-ந் தேதி தங்களது இஸ்லாமிய மத முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த தம்பதியருக்கு கதீஜா ஜாஸ்மின், பாத்திமா ஜெபின், பாத்திமா ஜேசா என வளர்ந்த 3 மகள்கள் உள்ளனர்.

    சூக்கூர்- ஷீனா தம்பதியர் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டப்படி (ஷரியத்) நடந்துள்ளதால், இவர்களது சொத்துக்களில் மூன்றில் இருபங்கு தான் மகள்களுக்குப்போகுமாம். எஞ்சிய ஒரு பங்கு சொத்து, சூக்கூர் சகோதரர்களுக்குத்தான் போகுமாம். சொத்துக்களை 3 மகள்களுக்குப் பிரித்து உயிலும் எழுதி வைக்க முடியாதாம்.

    ஆனால் சொத்துக்களை 3 மகள்களுக்கும் சமமாக பிரித்துக்கொடுக்க விரும்பியதால், சூக்கூர்- ஷீனா தம்பதியர் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

    சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, நேற்று ஹோஸ்துர்க் சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு திருமண சட்டத்தின்படி இந்த தம்பதியர் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் அவர்களுடைய 3 மகள்களும் கலந்து கொண்டனர். அப்போது கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ந்தனர்.

    இவர்களுடைய திருமணத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.வி.ரமேஷன், கோழிக்கோடு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் சஜீவ் ஆகியோர் சாட்சிகளாக இருந்து சார்பதிவாளர் அலுவலக பதிவேட்டில் கையெழுத்து போட்டார்கள்.

    இதுபற்றி சூக்கூர் கூறியதாவது:-

    என் மகள்கள் பாலின பாகுபாட்டை சந்தித்திருக்கிறார்கள். இனியும் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கவும், தாசில்தாரிடம் திருமண சான்றிதழ் பெற்று, சொத்துகளை மகள்களுக்கு சமமாக பங்கிட்டுக்கொடுக்கவும்தான் நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவரது மனைவி ஷீனா சூக்கூர் கூறும்போது, "நாங்கள் விளம்பரம் தேடிக்கொள்ளவோ, முஸ்லிம் சமூகத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தவோ மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. பெண்களிடம் தன்னம்பிக்கையையும், கண்ணியத்தையும் ஏற்படுத்தும் முயற்சியாகத்தான் மறுமணம் செய்தோம். பல பெண்கள் தங்கள் குடும்பங்களில் ஆண் பிள்ளை இல்லாமல் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். நாங்கள் இதைத் தவிர்க்கத்தான் எங்கள் மகள்களுக்காக மறுதிருமணம் செய்தோம்" என குறிப்பிட்டார்.

    • சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் பங்கேற்றார்

    துபாய்:

    துபாயில் அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கம் (TEWA) மகளிர் அமைப்பு இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நிகழ்ச்சி துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் ஸ்கூல் உள்ள அரங்கில் அமீரக தமிழ் சங்கம் மற்றும் TEWA அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதில் சிறுவர், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி, சமையல், பரதம், ஆடல், பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், ஓய்வு பெற்ற IAS அதிகாரி மற்றும் திரைப்பட இயக்குனருமான ஞான ராஜசேகரன், அரவிந்த் குழுமத்தின் உரிமையாளர் பிரபாகர், முத்தமிழ் சங்க நிர்வாகிகள் ராஜு மற்றும் பாலு, செய்தியாளர் அஸ்கர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் அமீரகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

    இதில் அமிரக தமிழ் சங்கம், தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கம் (TEWA) மகளிர் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • பெண் காவலர்கள் சந்தித்த வழக்கு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
    • வழக்குகளை தைரியமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் காவல் நிலையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அண்மையில் பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் பிரான்வின் டானி அப்பகுதி பெண் காவலர்கள் 10 பேருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கேக் வெட்டி கொண்டாடி, இனிப்புகளை வழங்கினார்.

    அனைவரும் ஒரே கலரில் சேலை உடுத்தி காவல் நிலையம் வந்திருந்தனர். ஒருவருக்கொருவர் தைரியம் ஊட்டும் வகையில் அவரவர் சந்தித்த வழக்கு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெண்கள் பாதுகாப்பு, பாலியல் சீண்டல், சிறுவயது திருமணம், வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளை தைரியமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    • வழக்கமாக வெளிநாட்டு பயணிகள் ரூ.600 கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும்.
    • பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பொது உரிமைகளை வெளிநாட்டு பயணிகள் பாராட்டினர்.

    மாமல்லபுரம்:

    இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிளை சுற்றுலா பயணிகள் இலவசமாக உள்ளே சென்று பார்க்கலாம் என இந்திய தொல்லியல்துறை அறிவித்தது. இதையடுத்து அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்த்து ரசித்தனர்.

    முதல் முறையாக மகளிர் தினத்தில் இலவசம் என்பதை மத்திய அரசு அறிவித்திருப்பது பெண்களுக்கு பெருமையாக இருப்பதாக அங்கு வந்த உள்நாட்டு பெண்கள் தெரிவித்தனர். வழக்கமாக, வெளிநாட்டு பயணிகள் ரூ.600 கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும். ஆனால் மகளிர் தினமான இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்த்ததை நினைத்து, இந்திய நாட்டின் பெண்ணுரிமை, அவர்களுக்கான தனி மரியாதை, அங்கீகாரம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட பொது உரிமைகளை பாராட்டி சென்றனர்.

    • உலகில் வாழும் 90% மக்கள் பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என ஆய்வு சொல்கிறது.
    • அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது.

    பெண்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்களின் சாதனைகளை நிலைநிறுத்துவது, சவால்களை அங்கீகரிப்பது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

    தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்சும் காலம் கனிந்து வருவது ஆரோக்கியமான விசயம். +2 தேர்வு முடிவுகளைப் பார்த்தால் பெண் பிள்ளைகளே அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். ஐ.டி கம்பெனிகளை எட்டிப் பார்த்தால் இளம்பெண்களே அதிகம் தென்படுகிறார்கள். கார்ப்ரேட் ஆஸ்பிடல்களில் பெண் டாக்டர்களே அதிகம்.

    இந்நிலையில், இப்போது யார் பாலின பாகுபாடு பார்க்கிறார்கள்? என்கிறார்கள். சமீபத்தில் ஐநா ஒரு ஆய்வு செய்தது. அதன் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. உலகில் வாழும் 90% மக்கள் (இதில் பெண்களும் சேர்த்து) பாலின பாகுபாட்டை கடைபிடிக்கிறார்கள் என அந்த ஆய்வு சொல்கிறது. இதில் அதிக அளவில் பாலின பேதத்தை கடைபிடிக்கும் நாடாக ஜிம்பாவேவையும், பாகுபாடு குறைந்த அளவில் கடைபிடிக்கும் நாடாக ஐரோப்பிய நாடான ஆண்ட்ரோராவையும் அடையாளம் கண்டுள்ளனர்.

    வேலைவாய்ப்பு, கடமையுணர்வு, தொழில்துறை அறிவு போன்றவை ஆண்களுக்கு உரித்தானது என 70% இந்திய ஆண்கள் இவ்வாய்வில் கூறியிருப்பதாக தெரிய வருகிறது.

    உலகில் 231 நாடுகள் உள்ளன. இதில் 193 நாடுகளில் 10 பெண் ஆளுமைகளே அரசியலில் பிரகாசிக்கின்றனர். நாகரிகத்தில் முன்னேறியவர்களாக கருதப்படும் அமெரிக்கர்கள், பெண்களை அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்று கருதுகின்றனர்.

    அதேவேளை கடந்த கோவிட் தொற்று காலம், இத்தகைய நிலையை சிறிது கலைத்தது.பெண் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்ட நியூசிலாந்து, ஜெர்மனி, தைவான், நார்வே போன்ற நாடுகளில் கோவிட்-உயிரிழப்புகள் குறைவாக இருந்தன.

    பெண் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, கோவிட்டுக்கு எதிராக போராடிய முன்களப் பணியாளர்கள் எனப் பாராட்டப்பட்டதில் 70% பேர் பெண் மருத்துவர்கள். 90% செவிலியர்கள் பெண்கள். 80% தூய்மைப் பணியாளர்கள் பெண்கள்.

    இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் தங்களை நிரூபித்து வந்திருக்கிறார்கள். அதேவேளை பெண்களுக்கெதிரான குற்றங்களும் இன்னும் குறைந்தபாடில்லை! என்பதையும் நாம் கவலையோடு பரிசீலிக்க வேண்டியுள்ளது.

    உலக அளவில் பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலை, தாம்ஸன் ராய்டர்ஸ் எனும் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டது. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது.

    இந்தியாவில், 4 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். பெண்கள் பாலியலில் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது, எய்ட்ஸ் நோய், பெண் சிசுக்கொலை, புறக்கணிக்கப்படுவது, பணி இடங்களில் அவமதிப்பு, என பல இன்னல்களை இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.

    அதுபோல் அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவமும் இந்தியாவில் மிகக்குறைவாகவே இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் எனும் அடிப்படையில் 193 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இந்தியா 149வது இடத்தில்தான் இருக்கிறது.

    இதனால் பெண்களை பாதிக்கும் சட்டங்கள் இயற்றப்படும்போது, வலிமையாக எதிர்த்து குரலெழுப்ப முடியாத நிலை உருவாகிறது. உதாரணமாக நாப்கினுக்கு ஜிஎஸ்டி போட்டபோது பாராளுமன்றத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை.

    இந்தியாவில் பெண்களின் நிலை முன்னேறி உள்ளது எனக் கூறுவோரும் இருக்கின்றனர். ஆனால் யதார்த்த நிலவரம் வேறு. கடந்த 10 ஆண்டுகளில் தென் மாநிலங்களில் (கேரளா விதிவிலக்கு) 10.16% பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. பெண் குழந்தைகளை வளர்ப்பது, கல்வி அளிப்பது, திருமணம் செய்து கொடுப்பது சுமையென ஆணாதிக்க சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்துள்ளது.

    கிராமப்புறங்களில் நிலவும் வறுமை உள்ளிட்ட காரணங்களால் பெண் குழந்தைகளின் கற்றல் இடைநிறுத்தப்படுகிறது.பெரும்பாலான பணியிடங்களில் குறைந்த கூலிக்கே பெண்கள் அமர்த்தப்படுகிறார்கள்.

    சமீபகாலமாக சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. காந்தி கனவு கண்டமாதிரி, இரவு நேரங்களில் பெண்கள் சுதந்திரமாக வீதியில் நடப்பது இருக்கட்டும், இணையத்தில் உலவமுடிகிறதா?

    எனவே, சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதென்பது, மானுடத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் சுதந்திரத்தை, பாதுகாப்பை, மாண்பை, சுயமரியாதையை உறுதி செய்தவதாகும்.

    -கரிகாலன்

    • பெண்கள் தொடாத துறையே இல்லை.
    • தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் தொடாத துறையே இல்லை. தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பெண் குழந்தைகள் கனவு காணவும், தைரியமாகவும் வளர வேண்டும்.
    • குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    மகளிர் தினத்தையொட்டி நடந்த கலந்துரையாடலில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சு இன்று டுவிட்டரில் பதிவிடப்பட்டு உள்ளது.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆணுக்கு நிகர் பெண் என மகள்களுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

    இன்று வளர்ந்து வரும் நம் மகள்களிடையே நம்பிக்கையை வளர்த்து அவர்கள் ஆணுக்கு சமமான பாலினத்தவர்களாக இருப்பதற்கு தகுதியானவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    பெண் குழந்தைகள் கனவு காணவும், தைரியமாகவும் வளர வேண்டும். அப்படி செய்யும்போது அவர்கள் தனிப்பட்ட முறையில் வளர்வது மட்டுமின்றி தங்கள் தேசத்தை வலிமையடையச் செய்கிறார்கள். உங்கள் வளர்ச்சியுடன் தேச நலனும் பின்னியுள்ளது என்பதை குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

    குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பை நாம் வழங்க வேண்டும். அந்த முடிவை அடைய நாம் மட்டுமே அவர்களுக்கு வழிகாட்ட முடியும். நீங்கள் சரியாக வளரவில்லை என்றால் அது உங்களின் சொந்த இழப்பு மட்டுமல்ல. வீட்டுக்கும் நாட்டுக்கும் இழப்பு என்பதை குழந்தைகள் உணரும் வகையில் வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×