search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைநிகழ்ச்சி"

    • வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் மகளிர் தின விழா நடந்தது.
    • விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. மகளிர் திட்ட மாவட்ட இயக்குநர் காளிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் கார்த்திக், உதவி திட்ட அலுவலர்கள் வெள்ளைபாண்டிமரியாள் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் ரம்யா வரவேற்றார். மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி,சரசு, பூமிநாதன், ஜெயகாந்தன்,மீனா, சூர்யா, பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், வெங்கடேசுவரி, குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமுதாய ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, சமூகவள பயிற்றுநர் குமாரி, செல்வி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பொறுப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • கீழடிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கீழடியில் உலகதரம் வாய்ந்த சுமார் ரூ.18.43 கோடி செலவில் அமைக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் திறப்பு விழா நடந்தது.

    இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். தனது செல்போனில் செல்பி படம் எடுத்து கொண்டார்.

    முன்னதாக கீழடி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் நிகழ்ச்சியில் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    கீழடி கிராமத்துக்கு செல்லும் வழியில் கிராமிய பாடல்கள் பாடியும், கரகம் ஆடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர்- திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ.- நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜிமுதீன், மானாமதுரை ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நகராட்சி, யூனியன் துணைத் தலைவர்கள் பாலசுந்தரம், முத்துசாமி, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. தொண்டர்கள், கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

    • போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும்.
    • டும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் உள்பட யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு 2, மாநகர காவல் துறை ஆகியன சாா்பில் பழைய பேருந்து நிலையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நாட்டு நலப் பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகர காவல் துணை ஆணையா் வனிதா பேசியதாவது:- போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும். இதனால் தனி மனிதன் மட்டுமின்றி அவா் சாா்ந்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் கல்வியில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். அதே வேளையில், குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் உள்பட யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி மூலமாக போதை ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில், பங்கேற்ற அனைவரும் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    • பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
    • கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருப்பூர்:

     தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் மாவட்டம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இணைந்து பல்லடம் பேருந்து நிலையத்தில் ஒருதடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியும், மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டியும் கலைநிகழ்ச்சி நடத்தினர்.

    முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பிளாஸ்டிக் தவிர்ப்பு பற்றி விரிவாக பொது மக்களுக்கு விளக்கினார். மேலும் பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

    இயற்கையாக கிடைக்கக்கூடிய மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களான துணிப்பைகள், வாழை இலை, காகித குவளைகள் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும்.நெகிழிப் பொருட்கள், மண் வளத்தை கெடுத்து விடும்.பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் சபதம் எடுப்போம் என்று பேசினார். பிறகு மாணவச் செயலர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மஞ்சப்பைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறினர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் இளம் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • குறைந்த வட்டியில் கடன் பெற்று, சேமிப்புகளை செலுத்தி பயனடைவீர்கள் என ஆலோசனை வழங்கப்பட்டது.
    • தெரு நிகழ்ச்சி மற்றும் தெரு நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்ட்டது.

    திருவையாறு:

    திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    இம்முகாமில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தலைமை வகித்தார்.

    தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி மற்றும் துணைப் பொதுமேலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அனீஷ்குமார் சிறப்புரை ஆற்றினார்.

    வைத்தியநாதன் பேட்டை, ஆச்சனூர், கடுவெளி மற்றும் பெரும்புலியூர் ஆகிய வருவாய்க் கிராமங்களுக்கு வைத்தியநாதன் பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் வேளாண் சேவையாற்றி வருவதை பாராட்டியும் இக்கிரா மங்களை விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து 'வேளாண்மைக்கு தேவை யான நிதி உதவிகளை குறைந்த வட்டியில்கடனாகப் பெற்றும், வேளாண் கருவி களைப் பெற்றும், சேமிப்புகளை இச்சங்க த்தில் செலுத்தியும் பயனடை யுமாறு ஆலோச னைகள் வழங்கப்பட்டது.

    கூட்டுறவு சங்கத்தின் சேவைகளை தெரு நிகழ்ச்சி மற்றும் தெரு நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்ட்டது.

    இம்முகாமில் திருவையாறு மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் பாரதிதாசன், வைத்தியநாதன் பேட்டை தொடக் வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளர் தவமூர்த்தி, தலைவர் சங்க இயக்குநர்கள், சங்க உறுப்பினர்கள் ' மகளிர் சுய உதவிக் குழுவினர், ரேசன் கடை விற்பனையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் திராவிடச் செல்வன் வாழ்த்துரையும் நிகழ்ச்சிகளைத் தொகு த்தும் வழங்கினார்.

    விழாநி றைவில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின்முதன்மை வருவாய் அலுவலர் குமரவேல் நன்றி கூறினார். இம்முகாமிற்கான ஏற்பாடு களை வைத்திய நாதன் பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வா கத்தினர் செய்திருந்தார்கள்.

    • மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டியில் விநாயகர்-பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இரவு நேரங்களில் பெண்கள் முளைப்பாளிகை, பக்தி பாடல் ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி, பக்தி பட்டிமன்றம் நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி மந்தைபகுதியில் விநாயகர், பெருமாள், முத்தாலம்மன், காளியம்மன், கருப்புசாமி ஆகிய தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டப்பட்டு கிராம பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கோவில்களின் கும்பாபிஷேகவிழா நடந்தது.

    முதல்நாள் விக்னேஷ்வர பூஜை, 2,3-ம் நாளில் யாகசாலை பூஜையும் நடந்தது. ேநற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோவில் கோபுரங்களில் ராமேசுவரம், அழகர்கோவில், பாபநாசம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார், கல்யாண சுந்தரகுருக்கள் ஆகியோர் தலைமையில் குழுவினர் செய்தனர். இரவு நேரங்களில் பெண்கள் முளைப்பாளிகை, பக்தி பாடல் ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி, பக்தி பட்டிமன்றம் நடந்தது. இதன்ஏற்பாடுகளை குட்லாடம்பட்டி கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×