மகளிர் தின கலைநிகழ்ச்சி பரிசளிப்பு விழா

வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் மகளிர் தின விழா நடந்தது. விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மகளிர் தின கலைநிகழ்ச்சி பரிசளிப்பு விழா
Published on

வாடிப்பட்டி

வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. மகளிர் திட்ட மாவட்ட இயக்குநர் காளிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் கார்த்திக், உதவி திட்ட அலுவலர்கள் வெள்ளைபாண்டிமரியாள் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் ரம்யா வரவேற்றார். மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி,சரசு, பூமிநாதன், ஜெயகாந்தன்,மீனா, சூர்யா, பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், வெங்கடேசுவரி, குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமுதாய ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, சமூகவள பயிற்றுநர் குமாரி, செல்வி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பொறுப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com