என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் காவல் நிலையத்தில் மகளிர் தின விழா: ஒரே நிறத்தில் சேலை கட்டி வந்த பெண் காவலர்கள்
- பெண் காவலர்கள் சந்தித்த வழக்கு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
- வழக்குகளை தைரியமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் காவல் நிலையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அண்மையில் பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் பிரான்வின் டானி அப்பகுதி பெண் காவலர்கள் 10 பேருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கேக் வெட்டி கொண்டாடி, இனிப்புகளை வழங்கினார்.
அனைவரும் ஒரே கலரில் சேலை உடுத்தி காவல் நிலையம் வந்திருந்தனர். ஒருவருக்கொருவர் தைரியம் ஊட்டும் வகையில் அவரவர் சந்தித்த வழக்கு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெண்கள் பாதுகாப்பு, பாலியல் சீண்டல், சிறுவயது திருமணம், வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளை தைரியமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
Next Story






