search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டிகள்"

    • மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    • மாணவர்கள் மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

    கடலூர்:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் போட்டி களை தொடங்கி வைத்த னர். இதில் இணை ஒருங்கிணை ப்பாளர் ராஜராஜ சோழன், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகானந்தம், கருப்பையன், மனோகர் பயிற்சியாளர் மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவ, மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றது. 14 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போ ட்டிகள் நடைபெறுகிறது. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

    • கொரோனா காலத்தில் கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவில் சார்பில் தினமும் மதியம் உணவு வழங்கப்பட்டது.
    • அவ்வப்போது மாணவ-மாணவிகளை அழைத்து பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    தென்காசி:

    கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    அகத்தியர், தேரையர் தங்கி வழிபாடு நடத்திய தலம். அகத்தியர் இங்குதான் முதன்முதலி்ல் பல்கலைக்கழகம் போல் பாடசாலை அமைத்தார். முதன்முதலாக கபால அறுவை சிகிச்சை நடந்த இடமும் இதுதான்.

    இக்கோவிலில் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெறும். மேலும் வைகாசி விசாகம், தமிழ்புத்தாண்டு, தமிழ்மாத கடைசி வெள்ளி வழிபாடு, பவுர்ணமி கிரிவலம், கிருத்திகை பூஜை போன்ற வையும் சிறப்பாக நடை பெறும்.

    இங்கு தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக் கிழமை, தமிழ் மாத கடைசிவெள்ளி, பவுர்ணமி நாளில் காலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இக்கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் ஆன்மிகப்பணியோடு அறப்பணியையும் செய்து வருகிறார். கடைசி வெள்ளி அன்று விவசாயம் செழிக்க வருண கலச பூஜை நடத்தப்படுகிறது. தமிழ்புத்தாண்டு அன்று சிறந்த சமூக சேவகர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்படுகிறது.

    கொரோனா காலத்தில் கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவில் சார்பில் தினமும் மதியம் உணவு வழங்கப் பட்டது. மேலும் பொதுநல ஊழியர்களுக்கு முக்கசவசம், கிருமி நாசினியும் இலவசமாக வழங்கப்பட்டது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் இறைஅருளோடு பொது அறிவையும் பெற்றுச் செல்லும் வகையில் நூல்நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு ஆன்மிக புத்தகங்கள் மட்டுமின்றி, பொதுஅறிவு நூல்களும், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளன. மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு பயிற்சியும் அவ்வப்போது அளிக்கப்படுகிறது.

    மேலும் காவல்துறை, ராணுவம் போன்ற பணிகளுக்கு செல்ல விரும்புவோருக்காக உடற்பயிற்சி மைதானமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    அவ்வப்போது பக்கத்து ஊர்களில் இருக்கும் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.

    கடந்த கோடை விடுமுறையின்போது ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி, விளை யாட்டுப்போட்டி, கிராமிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    தோரணமலை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன் - ஆ சந்திரலீலா வாழ்ந்த வீட்டை முத்துமாலைபுரத்தில் இலவச மாலை நேர படிப்பகமாக மாற்றி மாணவ- மாணவிகள் பயன் பெரும் வகையில் உருவாக்கியுள்ளார்கள் .

    அதேபோல் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஊர் இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உலக சுற்றுலாத்தினத்தையொட்டி கடந்த 24-ந் தேதி சுற்றுலாத் துறையும், தோரணமலை நிர்வாகமும் இணைந்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் தோரணமலை கோவில் நடத்தப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்ப கராமன் செய்திருந்தார்.

    • போட்டியில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
    • சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்றார்.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசு சார்பில் சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகள போட்டி ஆலமநாயக்கபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்தனர். மாணவர்கள் ஜூனியர் பிரிவில் சந்தன முத்து வைரவன், சீனியர் பிரிவில் பவேஷ், சூப்பர் சீனியர் பிரிவில் பிரகாஷ் ஆகிய 3 பிரிவிலும் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.

    இதே போன்று பெண்கள் சூப்பர் சீனியர் பிரிவில் முத்துமலர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். வட்டார அளவில் சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 106 பள்ளிகளைச் சேர்ந்த 1500 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
    • வெற்றியாளர்களுக்கு கோப்பைகள்,பதக்கங்கள்,சான்றிதழ்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

    உடுமலை,செப்.11-

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் உடுமலை அளவிலான குறுமைய தடகள போட்டிகள் உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. போட்டிகளை காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது.3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 106 பள்ளிகளைச் சேர்ந்த 1500 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 2 -ம் நாள் நிகழ்வாக நேற்றும் 14 வயது,17 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றது.ஆயிரத்து 500 மீட்டர், 600,100,80 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடைதாண்டுதல் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம்,உயரம் தாண்டுதல், தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றது.

    அப்போது சக வீரர்கள், பயிற்சியாளர்கள் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஊக்கம் அளித்து வெற்றி பெற உறுதுணையாக இருந்தனர். அதைத்தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு கோப்பைகள்,பதக்கங்கள்,சான்றிதழ்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.அப்போது அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், பயிற்சி யாளர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

    இன்றுடன் தடகள போட்டிகள் நிறைவு பெற உள்ளது.

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள் நடந்தன.
    • 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்

    அரியலூர்

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அரியலூர் மாவட்டம், அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும், வாய்ப்பாட்டிசை, கருவிசை, நடனம், காட்சிகலை மற்றும் தனிநபர் நடிப்பு என்னும் 5 தலைப்புகளில் கலை பண்பாட்டு திருவிழா 2023-24-ம் கல்வி ஆண்டின் போட்டிகள் நேற்று ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார்.

    • தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவிகளுக்கு கூடைப் பந்து, பூப்பந்தாட்டம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் உடற்கல்வித்துறை இணைந்து ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் உடற்கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதின் முக்கியத்துவம் குறித்து பேசினர். இயற்பியல் துறைத்தலைவர் முஸ்தாக் அஹமது கான் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் நைனா முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி களுக்கு கூடைப் பந்து, பூப்பந்தாட்டம், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

    • 14, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
    • 9 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

     கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மண்டல அளவிலான ஆண்களுக்கான கோ-கோ தேர்வுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 215 மாணவர்கள் கலந்து கொண்டனர். 14, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 9 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை தலைமையில் நடந்த தேர்வுப் போட்டியில், உடற்கல்வி ஆசிரியர்கள் மாணிக்கம், ராகவன், கோபி, மாதேஷ், பரிமளா, மரியசெல்வம், திவ்யலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, மீனாட்சி, முருகன், ஆல்பர்ட், ஆண்டனி, கருப்பையா, செல்வகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) பெண்களுக்கான கோ-கோ தேர்வுப் போட்டிகள் நடக்க உள்ளன.

    • மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
    • காந்தி ஜெயந்தி விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் காந்திப் பேரவை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கவிதை, கட்டுரை போட்டி, ஓவியம், குழு நடனம், குழு நாடகம் ஆகிய போட்டிகளுக்கான இறுதி சுற்று போட்டி ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளது.

    • தடகள போட்டிகள் நடைபெற்றது
    • அரவக்குறிச்சி குறுவட்ட அளவில் நடந்தது

    கரூர்:

    கரூர் அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் அரவக்குறிச்சி குறுவட்டத்தை சேர்ந்த 30 பள்ளிகளை சேர்ந்த 450 மாணவர்களும், 350 மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் நேற்று நடைபெற்ற மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், குண்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மாணவிகளுக்கான போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட வருவாய் அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், குறுவட்ட செயலாளர் மதுரைவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடந்தன.
    • கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு பேச்சு போட்டிகள் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்க வளாக கூட்டரங்கில் நடந்த போட்டிகளில் 26 பள்ளி மாணவர்களும், 14 கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

    இதில் பள்ளிகள் பிரிவில் பொன் முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி குருவம்மாள், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெய்ஸ்ரீ, தோப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி தீப்தி ஆகியோர் பரிசு முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி ஷர்மிகா, டி.கல்லுப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமதர்ஷினி ஆகியோர் பெற்றனர்.

    கல்லூரி அளவில் செந்தமிழ்க் கல்லூரி மாணவி ராஜமாலதி, மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகக் கல்லூரி மாணவர் வெங்கடேஷ், மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி மங்கையர்க்கரசி ஆகியோர் முதல் 3 பரிசுகளை வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டரிடம் பெற உள்ளனர்.

    • பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விளை யாட்டு வீரர்கள் பங்கேற்ற னர்.

    கடத்தூர்,  

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு பள்ளியில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டது.இதில் பாப்பி ரெட்டிப் பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனி யார் பள்ளி களை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது.

    இதில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவிற்கான வாலிபால் போட்டிகளும், கோகோ போட்டிகளும் நடைபெற்றது.இந்த விளையாட்டு போட்டிகளை கடத்தூர் அரசு பள்ளி ஆசிரியர், சங்க தலைவர் கிருஷ்ணன், கண்ட கவுண்டனூர் தலைமை ஆசிரியர் அருள் வளவன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் மணி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விளை யாட்டு வீரர்கள் பங்கேற்றனர். மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேந்திரன், தென்றல், மாது, செல்வம், முரளி, சிங்காரம், உள்ளிட்ட இருபால் உடற்கல்வி ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். 

    • முதல், 2-ம், 3-ம் ஆண்டு துறைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
    • செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தலைவர் பி.சி. போஸ் மற்றும் செயலாளர் லூர்து போஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோ ப்பையை வழங்கினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சூலாமலை யில் செயிண்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் அனைத்து துறை மாண வர்களுக்கு இடையேயான போட்டிகள் விங்க்ஸ் 2023 என்ற பெயரில் நடந்தது.

    இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், நடன போட்டிகள், பேச்சு போட்டிகள், சிறப்பு பட்டிமன்றம், கவிதை போட்டிகள் நடைபெற்றது.

    இதில் முதல், 2-ம், 3-ம் ஆண்டு துறைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

    இதில் அதிக போட்டி களில் வென்று முதலிடம் பிடித்த கணினி, இ.சி.இ. மற்றும் சிவி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் சுழற்கோப்பையை தட்டி சென்றனர்.

    இந்த விழாவிற்கு செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தலைவர் பி.சி. போஸ் மற்றும் செயலாளர் லூர்து போஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோ ப்பையை வழங்கினார்கள்.

    இந்த விழாவில் செயிண்ட் ஜோசப் பாலி டெக்னிக் கல்லூரி இயக்குனர் குமரேசன், முதல்வர் சையத் ஆசிப் அகமது, துணை முதல்வர் ராகவேந்திர பிரசாத் மற்றும் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி னார்கள்.

    ×