search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைவாணி பள்ளி"

    • போட்டியில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
    • சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்றார்.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசு சார்பில் சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகள போட்டி ஆலமநாயக்கபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்தனர். மாணவர்கள் ஜூனியர் பிரிவில் சந்தன முத்து வைரவன், சீனியர் பிரிவில் பவேஷ், சூப்பர் சீனியர் பிரிவில் பிரகாஷ் ஆகிய 3 பிரிவிலும் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.

    இதே போன்று பெண்கள் சூப்பர் சீனியர் பிரிவில் முத்துமலர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். வட்டார அளவில் சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • பிளஸ்-2 தேர்வு எழுதிய 233 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவி மாரிச்செல்வி 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. பிளஸ்-2 தேர்வு எழுதிய 233 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18 மாணவர்கள் 550-க்கு மேல், 68 மாணவர்கள் 500 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றுள்ளனர். மாணவி மாரிச்செல்வி 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்று தென்காசி மாவட்ட அளவில் 3-ம் இடமும், சங்கரன்கோவில் தாலுகா அளவில் முதலிடமும், பள்ளி அளவில் முதலிடமும் பெற்று பெருமை சேர்த்துள்ளார். மாணவி பெற்ற மதிப்பெண்கள் பாடவாரியாக தமிழ்-98 ,ஆங்கிலம்-97, இயற்பியல்-99 மற்றும் வேதியியல் ,உயிரியல் ,கணிதம் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    மாணவி பிரீத்தி வர்ஷினி 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். பாடவாரியாக மாணவி பெற்ற மதிப்பெண்கள் தமிழ்-98, ஆங்கிலம்-97, உயிரியல்-99, கணிதம்-99, இயற்பியல் மற்றும் வேதியல் பாடத்தில் 100-க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி யாமினி பிரியா மற்றும் பிரவீன் குமார் இருவரும் 600-க்கு 588 மதிப்பெண் பெற்று பள்ளியில் 3-ம் இடம் பெற்றுள்ளனர். பாட வாரியாக முதல் மதிப்பெண் தமிழ்-98, 4 பேர் ஆங்கிலத்தில் 97 மதிப்பெண், 7 பேர் கணிதத்தில் 100-க்கு100 , ஒரு மாணவர் இயற்பியலில் 100-க்கு100 மதிப்பெண், 2 பேர் வேதியியலில் 100-க்கு100 மதிப்பெண், 10 பேர் உயிரியியலில் 100-க்கு100 மதிப்பெண், ஒரு மாணவர் வணிகவியலில் 100-க்கு100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி மற்றும் முதல்வர் பொன்னழகன்,ஆசிரியர்கள், ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.

    ×