search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறுமைய விளையாட்டு"

    • 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 106 பள்ளிகளைச் சேர்ந்த 1500 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
    • வெற்றியாளர்களுக்கு கோப்பைகள்,பதக்கங்கள்,சான்றிதழ்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

    உடுமலை,செப்.11-

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் உடுமலை அளவிலான குறுமைய தடகள போட்டிகள் உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. போட்டிகளை காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது.3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 106 பள்ளிகளைச் சேர்ந்த 1500 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 2 -ம் நாள் நிகழ்வாக நேற்றும் 14 வயது,17 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றது.ஆயிரத்து 500 மீட்டர், 600,100,80 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடைதாண்டுதல் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம்,உயரம் தாண்டுதல், தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றது.

    அப்போது சக வீரர்கள், பயிற்சியாளர்கள் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஊக்கம் அளித்து வெற்றி பெற உறுதுணையாக இருந்தனர். அதைத்தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு கோப்பைகள்,பதக்கங்கள்,சான்றிதழ்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.அப்போது அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், பயிற்சி யாளர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

    இன்றுடன் தடகள போட்டிகள் நிறைவு பெற உள்ளது.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குறுமைய விளையாட்டு போட்டி தொடங்கியது.
    • இதில் கபாடி விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.

    ஈரோடு:

    ஊஞ்சலூர் அரசு பள்ளியில் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குறுமைய விளையாட்டு போட்டி தொடங்கியது. இதில் கபாடி விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான போட்டிகளை கொடுமுடி ஒன்றிய தி.மு.க செயலாளர் சின்னசாமி தொடங்கி வைத்தார்.

    இதில் ஆண்கள் பிரிவில் 19 வயதுக்குட்பட்டோருக்கு பிரிவில் 12 அணிகளும், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 13 அணிகளும், 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 14 அணிகளும் பங்கேற்றன.

    தொடர்ந்து இன்று மாணவிகள் பங்கேற்கும் பெண்களுக்கான கபாடி போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 6 அணிகளும்,

    17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 6 அணிகளும், 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 5 அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    • 6 குறுமையங்களில் ஆகஸ்டு 22-ந்தேதி முதல் குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது.
    • காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிட மாவட்ட கல்வித்துறை வேகம் காட்டி வருவதால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 குறுமையங்களில் ஆகஸ்டு 22-ந்தேதி முதல் குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது.ஒவ்வொரு போட்டியிலும், 14, 17 மற்றும், 19 வயது மாணவ, மாணவிகள் பிரிவில் மாநகராட்சி, அரசு, தனியார் பள்ளி அணிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றன. அனைத்து குழு விளையாட்டு போட்டிகளும் முடிந்த நிலையில், தடகள போட்டிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு குறுமைய தடகள போட்டிகள் வருகிற 12, 13ம் தேதி 2 நாட்கள் நடக்க இருந்தது. ஆனால் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிட மாவட்ட கல்வித்துறை வேகம் காட்டி வருவதால், தற்காலிகமாக குறுமைய தடகள போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தின் அனைத்து குறுமையங்களிலும் தடகள போட்டிகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறுமைய போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×