என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடத்தூரில் நடைபெறும் வாலிபால் போட்டியை கந்த கவுண்டனூர் தலைமையாசிரியர் அருள்வளவன் தொடங்கி வைத்த காட்சி.
கடத்தூர் அரசு பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்
- பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விளை யாட்டு வீரர்கள் பங்கேற்ற னர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு பள்ளியில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டது.இதில் பாப்பி ரெட்டிப் பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனி யார் பள்ளி களை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது.
இதில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவிற்கான வாலிபால் போட்டிகளும், கோகோ போட்டிகளும் நடைபெற்றது.இந்த விளையாட்டு போட்டிகளை கடத்தூர் அரசு பள்ளி ஆசிரியர், சங்க தலைவர் கிருஷ்ணன், கண்ட கவுண்டனூர் தலைமை ஆசிரியர் அருள் வளவன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் மணி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விளை யாட்டு வீரர்கள் பங்கேற்றனர். மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேந்திரன், தென்றல், மாது, செல்வம், முரளி, சிங்காரம், உள்ளிட்ட இருபால் உடற்கல்வி ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.






