search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு"

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவமாக பிடித்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுக்குப்பத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த குழந்தைகள் மையத்தில் 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் குழந்தைகள் மையம் இயங்கி வந்தது. அங்கு இருந்த பணியாளர் சத்து மாவு எடுப்பதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அலறிய பணியாளர் "பாம்பு பாம்பு" என அலறிக்கொண்டு அங்கிருந்த குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து பணியாளர்கள் தங்கள் மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் மேல் அதிகாரிகள் கடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவமாக பிடித்தனர். இதனை பார்த்த பிறகு தான் பணியாளர்கள் பெரும் மூச்சுவிட்டபடி அமைதி நிலைக்கு வந்தனர். தற்போது மழைக்காலங்கள் என்பதால் கட்டிடங்களுக்குள் பாம்புகள் வருவதால் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் பொதுமக்களும் பெற்றோர்களும் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

    • பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அதிகாலை நேரத்தில் நடந்து சென்றனர்.
    • சபரிமலைக்கு செல்லும் பாதையில் சிறுமியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்த வருகின்றனர். இந்நிலையில் சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்த சிறுமியை பாம்பு கடித்தது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் கட்டாக்கடை பகுதியை சேர்ந்த நிரஞ்சனா (வயது 6) என்ற சிறுமி, தனது தந்தை பிரசாந்த்துடன் சபரிமலைக்கு யாத்திரை சென்றார். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அதிகாலை நேரத்தில் நடந்து சென்றனர். சுவாமி அய்யப்பன் சாலையில் நடந்து சென்ற போது சிறுமி நிரஞ்சனாவை பாம்பு கடித்துள்ளது.

    இதையடுத்து சிறுமி, பம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு விஷ எதிர்ப்பு ஊசி போடப் பட்டது. பின்பு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி யின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சபரிமலைக்கு செல்லும் பாைதயில் சிறுமியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரள வனத்துறை மந்திரி சுசீந்திரனுடன், தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.அதனை தொடர்ந்து சன்னிதானத்திற்கு செல்லும் வழிகளில் வனத்துறையை சேர்ந்த பாம்பு பிடிப்பா ளர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

    அவர்கள் சபரிமலைக்கு செல்லும் பாதையில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் வனப்பாதை யில் பக்தர்களுக்கு உதவ வன அலுவலர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    • நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதும், இதனை வளர்ப்புப்பூனை சீறியபடி தடுக்க முயல்வதும் தெரியவந்தது.
    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையம், சரவணாநகரை சேர்ந்தவர் விஜர். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விஜர் குடும்பத்தினர் சம்பவத்தன்று வீட்டில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது விஜர் வீட்டு வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.

    தொடர்ந்து அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைய முயன்றது. இதற்கிடையே அங்கு நின்றிருந்த வளர்ப்பு பூனை தற்செயலாக நாகப்பாம்பை பார்த்தது. அது உடனடியாக பாம்பை நோக்கி சீறிக்கொண்டு வந்தது. இருந்தபோதிலும் அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. வீட்டு வாசலில் பூனையின் சீறலை தற்செயலாக கேட்ட விஜர் குடும்பத்தினர் உடனடியாக அங்கு வந்து பார்த்தனர். அப்போது நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதும், இதனை வளர்ப்புப்பூனை சீறியபடி தடுக்க முயல்வதும் தெரியவந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக வீட்டுக்கதவை மூடினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதையும், அதனை பூனை தடுத்து நிறுத்துவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தனர்.

    பூனையின் எதிர்ப்பால் பாம்பு அடங்கி அங்கிருந்து வெளியேறிச் சென்றது. இந்த காட்சிகளை வீடியோ எடுத்த சிலர் அதனை இணையத்தில் பரப்பினர். தற்போது சமூகவலை தளத்தில் அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

    • காஜா மைதீனை 2-வது முறையாக பாய்ந்து வந்து கடித்துவிட்டு அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்றது.
    • காஜாமை தீன் மிகுந்த வலியில் அலறியபடி மயங்கி விழுந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகில் உள்ள திம்மராயம்பாளையத்தை சேர்ந்தவர் காஜாமைதீன் (வயது 43). இவருக்கு மனைவி நெபீஷா, மகள் பாத்திமா ஆகியோர் உள்ளனர்.

    திம்மராயம்பாளையம் பள்ளிவாசலில் காஜா மைதீன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் பாம்பு பிடிக்கும் தொழிலிலும் பகுதிநேரமாக ஈடுபட்டு வந்து உள்ளார்.

    இந்த வகையில் அவர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளை பிடித்து பத்திரமாக காட்டுக்குள் விடுவித்து உள்ளார். எனவே காஜா மைதீனை அங்கு உள்ள பொதுமக்கள், பாம்புபிடி மன்னன் என்று மரியாதையுடன் அழைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சிறுமுகை-அன்னூர் சாலையில் தியேட்டர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள ஒரு மினி லாரியில் நாகப்பாம்பு புகுந்து உள்ளதாக தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது.

    தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து காஜா மைதீனுக்கு தகவல் தெரிவித்து, மினி லாரிக்குள் புகுந்திருக்கும் நாகப்பாம்பை பத்திரமாக பிடித்து ஒப்படைக்கும்படி அறிவுறுத்தினர்.

    எனவே காஜாமைதீன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு மினி லாரிக்குள் புகுந்து இருந்த நாகப்பாம்மை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பாம்பு எதிர்பாராதவிதமாக பாய்ந்து வந்து கொத்தியது. இருந்தபோதிலும் காஜாமைதீன் நாகப்பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டார்.

    தொடர்ந்து அவர் வனத்துறையினருடன் சிறுமுகை காட்டுக்குள் சென்றார். அங்கு நாகப்பாம்பு பத்திரமாக விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பாம்பு மீண்டும் காஜா மைதீனை 2-வது முறையாக பாய்ந்து வந்து கடித்துவிட்டு அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்றது.

    நாகப்பாம்பு 2 முறை கொத்தியதால் காஜாமை தீன் மிகுந்த வலியில் அலறியபடி மயங்கி விழுந்தார். தொடர்ந்து அவரை வனத்துறையினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்கை அளிக்கப்பட்டது. பின்னர் காஜாமை தீன் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே நாகப்பாம்பு கொத்தியதில் படுகாயம் அடைந்த காஜாமை தீன் குடும்பத்துக்கு தனியார் ஆஸ்பத்திரியில் உயர்தர சிகிச்சைகள் அளிக்க வேண்டும், மேலும் அவருக்கு தமிழக அரசு சார்பில் உரிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • காரை பல பாகங்களாக பிரித்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் பதுங்கியது.

    ஆத்தூர்:

    நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). விவசாயியான இவருக்கு சொந்தமாக ஒரு கார் உள்ளது. தனது காரை பழுது பார்ப்பதற்காக ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் உள்ள கார் பழுதுபார்க்கும் இடத்திற்கு வந்து கொண்டு இருந்தனர்.

    காரை மணிகண்டன் ஓட்டி வந்தார். கார் புதுப்பேட்டை பகுதியில் வந்தபோது காருக்குள் முன் பகுதியில் நான்கடி நீளமுள்ள பாம்பு வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் ராஜேந்திரன் காரை சாலையின் ஓரத்தில் அவசரமாக நிறுத்தினர்.

    பின்னர் இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரை பல பாகங்களாக பிரித்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் பாம்பு சிக்கவில்லை.

    தீயணைப்பு வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் பதுங்கியது. பாம்பு கிடைக்காத ஏமாற்றத்தில் தீயணைப்பு துறையினரும் ஏமாற்றத்துடன் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சேவை மைய கட்டிடம் உள்ளது.
    • அந்த கட்டத்தின் அருகில் ஒரு பாம்பு இருந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சேவை மைய கட்டிடம் உள்ளது.

    இதில் மகளிர் திட்ட வாழ்வாதார இயக்கம் அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இக்கட்டிடத்தின் பின்பகுதியில் சுவரையொட்டி ஒரு பாம்பு படுத்து கிடந்ததை பார்த்து அங்குள்ள அனை வரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் நடவடிக்கை எடுத்ததன் பேரில், சீர்காழியை சேர்ந்த பாம்பு பாண்டியன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது பாம்பு ஓடிவிட்டது.

    அந்த பாம்பை பாண்டியன் சுமார் 2 மணி நேரம் தேடி கண்டுபிடித்து அதனை லாவகமாக பிடித்தார்.

    பின்னர் பிடிபட்ட பாம்பு கண்ணாடி விரியன் பாம்பு என்று அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து பிடிபட்ட பாம்பு கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழியி டம் ஒப்படைக்கப்பட்டு, சீர்காழி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் பாம்புகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • தெருவிளக்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் உள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் ராமநாதபுரம் அரசு மருத் துவ கல்லூரி மாணவர்கள், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் படிக் கின்றனர்.

    இவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இவர்கள் கல்லூரிக்கு வரும் சாலை யில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதில்லை. கல்லூரியை ஒட்டி உள்ள பகுதிகள் புதர்கள் நிறைந்த பகுதியாக காட்சி அளிக்கி றது.

    இதனால் அடிக்கடி பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி சாலை யில் 2 பாம்புகள் சென்ற தால் மாணவர்கள் அச்ச மடைந்தனர். சில நாட்க ளுக்கு முன் கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு சென்றுள்ளது. மருத்துவ கல்லூரி பகுதியில் பாம்பு கள் படையெடுக்கும் நிலை ள்ளது.

    மேலும் விஷ பாம்பு மற்றும் ஜந்துகளால் மாண வர்களுக்கு ஆபத்து உள் ளது. அதிகாலையில் இப் பகுதியில் நடை பயிற்சி செய்வோரும் அச்சமடைந் துள்ளனர். அப்பகுதியில் மாணவர்கள் அச்சமின்றி சென்று வர தெரு விளக்கு கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மருத்துவ கல்லூ ரிக்கு செல்லும் சாலை முழுவதும் விளக்குகள் அமைத்து உயிர் காக்கும் மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாண வர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேட்டமங்கலம் வீட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்தது
    • தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ஆனந்தராஜா. இவர் ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஓட்டு வீட்டு விட்டத்தில் நல்ல பாம்பு ஒன்று இருந்து உள்ளது. அதை பார்த்த அனந்தராஜா இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டுக்கு மேலே ஏறி பாம்பை தேடி பிடித்தனர். பின்னர் பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

    • அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • 2 மகன்கள் உள்ளனர்.

    திருவட்டார்:

    குலசேகரம் அருகே பேச்சிப்பாறை வலியமலை காணி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பால் வெட்டும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் அபினேஷ் (வயது 13). ஆலம்பாறை பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால் வீட்டுக்கு வந்த மாணவன் மணலோடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு தாயுடன் சென்று உள்ளான். அங்கு சென்ற அபினேஷ் தாயுடன் நடந்து வரும்போது பாம்பு ஒன்று அபினேஷ் காலில் கடித்துவிட்டது. இது குறித்து அபினேஷ் தனது தாயாரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் முதலுதவி செய்தார்கள். போக்குவரத்து வசதி இல்லாததால் அந்த பகுதியில் இருந்து உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லமுடியவில்லை. வெகுநேரம் கழித்து குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவனை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அபினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து மணிகண்டன் குலசேகரம் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்டு அபினேஷ் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பாம்பு கடித்து பெண் இறந்தார்.
    • இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் வசந்தா (64). இவர் அங்குள்ள வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.
    • தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மகன் நவீன் (வயது 11). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மாண வர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டி ருந்தார். அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.

    இதனையடுத்து நவீனை கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாணவன் நவீன் இறந்து போனார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
    • வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அம்ஜத்( வயது 37), கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே ஒரு குட்டி நாக பாம்பு ஊர்ந்து சென்றது.

    அப்போது குடிபோதையில் இருந்த அம்ஜத், நாக பாம்பு குட்டியை கையில் பிடித்தார். அப்போது பாம்பு அம்ஜத் கையை கடித்ததில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, கடித்த பாம்பை பாட்டிலில் அடைத்து எடுத்துக் கொண்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு அம்ஜத்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாட்டிலில் பாம்புடன் சிகிச்சைக்கு வந்த சம்பவத்தால் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×