என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு
- வேட்டமங்கலம் வீட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்தது
- தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ஆனந்தராஜா. இவர் ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஓட்டு வீட்டு விட்டத்தில் நல்ல பாம்பு ஒன்று இருந்து உள்ளது. அதை பார்த்த அனந்தராஜா இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டுக்கு மேலே ஏறி பாம்பை தேடி பிடித்தனர். பின்னர் பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
Next Story






