தியாகதுருகம் அருகே பாம்பு கடித்து சிறுவன் சாவு

அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தியாகதுருகம் அருகே பாம்பு கடித்து சிறுவன் சாவு
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மகன் நவீன் (வயது 11). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மாண வர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டி ருந்தார். அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.

இதனையடுத்து நவீனை கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாணவன் நவீன் இறந்து போனார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com