search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு கடி"

    • பாம்பு கடித்ததில் 9 பேர் பாதிப்பு.
    • விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் பாதிப்பு.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மேலும், விஷப்பூச்சிகள் உள்ளிட்டவை கடித்தததில் 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அம்மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

    இவர்களில், பாம்பு கடித்ததில் 9 பேரும், விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அதிகாலை நேரத்தில் நடந்து சென்றனர்.
    • சபரிமலைக்கு செல்லும் பாதையில் சிறுமியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்த வருகின்றனர். இந்நிலையில் சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்த சிறுமியை பாம்பு கடித்தது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் கட்டாக்கடை பகுதியை சேர்ந்த நிரஞ்சனா (வயது 6) என்ற சிறுமி, தனது தந்தை பிரசாந்த்துடன் சபரிமலைக்கு யாத்திரை சென்றார். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அதிகாலை நேரத்தில் நடந்து சென்றனர். சுவாமி அய்யப்பன் சாலையில் நடந்து சென்ற போது சிறுமி நிரஞ்சனாவை பாம்பு கடித்துள்ளது.

    இதையடுத்து சிறுமி, பம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு விஷ எதிர்ப்பு ஊசி போடப் பட்டது. பின்பு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி யின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சபரிமலைக்கு செல்லும் பாைதயில் சிறுமியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரள வனத்துறை மந்திரி சுசீந்திரனுடன், தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.அதனை தொடர்ந்து சன்னிதானத்திற்கு செல்லும் வழிகளில் வனத்துறையை சேர்ந்த பாம்பு பிடிப்பா ளர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

    அவர்கள் சபரிமலைக்கு செல்லும் பாதையில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் வனப்பாதை யில் பக்தர்களுக்கு உதவ வன அலுவலர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    • விகிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த வி.சி. ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது30). கட்டிட தொழிலாளி. இவரது மகள் விகிதா(7). கடந்த வாரம் பாலாஜி குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கினார்.

    நள்ளிரவில் பாலாஜி, அவரது மகள் விகிதா ஆகிய 2 பேரையும் பாம்பு கடித்து சென்று விட்டது.

    இதில் உயிருக்கு போராடிய அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாஜி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் விகிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோகுல் நகரில் உள்ள ஒரு ஏரி அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு பாம்பு அவரை கடித்து விட்டது.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது45). கட்டிட மேஸ்திரி. இவர் ஓசூரில் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது அவர் கோகுல் நகரில் உள்ள ஒரு ஏரி அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு பாம்பு அவரை கடித்து விட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 ஆண்டுகளில் பாம்பு கடியால் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • 2022-ம் ஆண்டுகளில் 1,945 பேர் பாம்பு கடியால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் அண்மை காலமாக பாம்பு கடியால் பாதிக்கப்ப டுவோரின் எண்ணிக்கை அதிக ரித்துள்ளது. குறிப் பிட்ட நேரத்தில் சிகிச்சை கிடைக்கப் பெறாததால் பாம்பு கடிக்கு ஆளான வர்கள் இறக்கும் சூழலும் உள்ளது.

    இந்த நிலையில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட வரின் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்டது. அதற்கான விவ ரங்கள் வழங்கப்பட் டுள்ளன.அதில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் 1,945 பேர் பாம்பு கடியால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை மூலம் சுமார் 1,909 பேரை காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் பாம்பு கடியால் கடந்த 2 ஆண்டுகளில் 36 பேர் உயிர் இழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பூவரசனை கடித்த பாம்புடன், அவருடைய தாயார் கோமதி ஆஸ்பத்திரிக்குள் வந்தார்.
    • பாட்டிலில் அடைக்கப்பட்டு இருந்த பாம்பை டாக்டர்கள் பார்த்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பூவரசன் (வயது 17).

    இவர் நேற்று மாட்டு தொழுவத்தில் இருந்து சாணம் மற்றும் குப்பைகளை அள்ளி அருகில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டினார். அப்போது குப்பைக்குள் மறைந்திருந்த சுமார் 1½ அடி நீளமுள்ள குட்டி பாம்பு பூவரசனை கடித்தது.

    இதில் வலியால் அலறி துடித்த அவரின் சத்தம் கேட்டு அவருடைய தாயார் கோமதி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது பூவரசனை கடித்த பாம்பு அங்கிருந்த குப்பைக்குள் ஊர்ந்து சென்றது.

    பாம்பு குட்டியாக இருந்ததால் அந்த பகுதியில் திரண்டு இருந்தவர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு தண்ணீர் பாட்டிலில் அடைத்தனர். பின்னர் அவர்கள் பூவரசனை மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது பூவரசனை கடித்த பாம்புடன், அவருடைய தாயார் கோமதி ஆஸ்பத்திரிக்குள் வந்தார்.

    பின்னர் பாட்டிலில் அடைக்கப்பட்டு இருந்த பாம்பை டாக்டர்கள் பார்த்தனர். பாம்புடன் பெண் வந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த குட்டி பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

    • பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வாலிபர் உயிரிழந்தது குறித்து கந்துகோல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (வயது 28). இவர் கந்தகுரு பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கடையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது பஸ் நிலையம் அருகே பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்து வித்தை காட்டிக் கொண்டு இருந்தார். இதனைக் கண்ட மணிகண்டா ரெட்டிக்கு பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசை வந்தது.

    பாம்பாட்டியிடம் சென்ற மணிகண்டா ரெட்டி பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பாம்பாட்டி மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் பாம்பாட்டியை வற்புறுத்தி பணம் தருவதாக கூறி தன்னுடைய கழுத்தில் பாம்பை சுற்றி விட வேண்டும் என கேட்டதால், அவரும் பணம் வருவதால் சம்மதம் தெரிவித்து பாம்பை மணிகண்டா ரெடியின் கழுத்தில் சுற்றிவிட்டார்.

    அப்போது மணிகண்டா ரெட்டி பாம்புடன் செல்பி எடுத்து கொஞ்சினார். பின்னர் தனது கழுத்தில் இருந்து பாம்பை எடுத்தபோது பாம்பு திடீரென மணிகண்டாவை கடித்து விட்டது. இதையடுத்து பாம்பை கழுத்தில் இருந்து வீசி எறிந்து விட்டு வலியால் அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு மணிகண்டா ரெட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கந்துகோல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சங்கராபுரம் அருகே பாம்பு கடித்ததில் முதியவர் பலியானார்.
    • அவரது குடும்பத்தினர் லட்சாதிபதியை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே புதுபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சாதிபதி (வயது58). இவர் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த போது பாம்பு கடித்தது. உடனே அவரது குடும்பத்தினர் லட்சாதிபதியை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே லட்சாதிபதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ×