search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக எம்எல்ஏ"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க எம்.எல்.ஏ. ராஜா சிங் தனக்கு புதிய கார் வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.
    • பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் சட்டசபைக்கு பைக்கில் வந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பாஜக எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராஜாசிங். முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னுடைய கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு புதிய கார்களை வழங்கினார்.

    ஆனால் தெலுங்கானாவில் எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் குண்டு துளைக்காத பழைய கார்கள் வழங்கப்பட்டது.

    பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட பழைய கார்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக கூறப்படுகிறது.

    இதனால் பா.ஜ.க எம்.எல்.ஏ. ராஜா சிங் தனக்கு புதிய கார் வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.

    ஆனால் அவரது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா சிங் எம்.எல்.ஏ கடந்த வெள்ளிக்கிழமை தனது பைக்கில் சட்டசபைக்கு சென்றார்.

    பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் சட்டசபைக்கு பைக்கில் வந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. டாக்டர்.சி.கே.சரஸ்வதி மரியாதை செலுத்துவதற்காக வந்தார்.
    • திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. டாக்டர்.சி.கே.சரஸ்வதி மரியாதை செலுத்துவதற்காக வந்தார். அப்போது அவர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலை பார்த்ததும் கதறி அழுதார்.

    பின்னர் அவர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்கிருந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வின் உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆறுதல் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ பஜ்ரங்பாலியை வணங்குவதில்லை.
    • பாஸ்வானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள பிர்பைண்டி பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான், இந்து தெய்வங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை. அதனால், அவர்கள் பணக்காரர்கள் இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அவர், "ஆத்மா மற்றும் பரமாத்மா என்பது மக்களின் நம்பிக்கை மட்டுமே. நீங்கள் நம்பினால் அது தெய்வம். இல்லை என்றால் அது வெறும் கற்சிலை. கடவுள், தெய்வங்களை நம்புகிறோமா இல்லையா என்பது நம் கையில் தான் உள்ளது. அதை அடைய அறிவியல் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். தர்க்கரீதியான முடிவு, நீங்கள் நம்புவதை நிறுத்தினால், உங்கள் அறிவுத்திறன் அதிகரிக்கும்.

    பஜ்ரங்பாலி (ஆஞ்சநேயர்) சக்தி கொண்ட தெய்வம் மற்றும் வலிமையை அளிக்கிறது என்று நம்பப்படுகிறது. இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ பஜ்ரங்பாலியை வணங்குவதில்லை. அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் இல்லையா? நீங்கள் நம்புவதை நிறுத்தும் நாளில் இவை அனைத்தும் முடிவுக்கு வரும்" என்று கூறினார்.

    பாஸ்வானின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது.
    • இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சபை நடவடிக்கையின்போது, பாஜக எம்எல்ஏ ராகேஷ் கோஸ்வாமி மொபைலில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

    மற்றொருவர், தனது கையில் புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார்.

    இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவுடன், "சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பாஜக எம்எல்ஏக்கள்! என்று குறிப்பிட்டிருந்தது.

    மேலும், அத்துடன் மஹோபாவைச் சேர்ந்த எம்எல்ஏ சபையில் மொபைல் கேம் விளையாடுகிறார். ஜான்சியின் பாஜக எம்எல்ஏ புகையிலை சாப்பிடுகிறார். இவர்களிடம் மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் இல்லை. சட்டப்பேரவையை பொழுது போக்கு இடமாக வைத்துள்ளனர்.

    இவர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது!" என்று பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இரண்டு எம்எல்ஏக்களின் செயலை விமர்சித்து வருகின்றனர்.



    • தோல் கட்டி நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
    • இந்நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தல்

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடருக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், ஒரு பசுவை தன்னுடன் அழைத்து வந்தார். இதுதொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மாடுகள் லம்பி ஸ்கின் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் மாநில அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பசுவை அழைத்து வந்ததாகவும் அவர் கூறினார். 

    அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மாடு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அவரது ஆதரவாளர்கள் மாட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொடர்ந்து பேசிய எம்எல்ஏ ராவத், 'பாருங்கள். இந்த அரசு மீது கோமாதாவுக்கும் கோபம் வந்துவிட்டது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த தேவையான மருந்து ஊசிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், இந்நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

    அதேசமயம், சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

    கூட்டத்தொடர் தொடங்கும் முன், முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'லம்பி ஸ்கின் எனப்படும் தோல் கட்டி நோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்நோயிலிருந்து மாடுகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். தடுப்பூசி மற்றும் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும்' என்றார்.

    பெண்களை கடத்துவேன் என்று கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்கதம் நாக்கை யார் வெட்டி துண்டிக்கிறார்களோ, அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான சுபத்சவ்ஜி அறிவித்துள்ளார். #BJP #RamKadam
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராம்கதம். சமீபத்தில் இவர் ஒரு விழாவில் பேசுகையில், “இளைஞர்களே... நீங்கள் காதலிக்கும் பெண் பற்றி சொல்லுங்கள். அந்த பெண்ணை கடத்தி வந்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன்” என்று அறிவித்தார். அதோடு தனது செல்போன் எண்ணையும் வெளியிட்டார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து ராம்கதம் எம்.எல்.ஏ. பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான சுபத்சவ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களை கடத்துவேன் என்று கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்கதம் நாக்கை யார் வெட்டி துண்டிக்கிறார்களோ, அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். #BJP #RamKadam


    ×