என் மலர்
இந்தியா

தெலுங்கானாவில் புதிய கார் கேட்டு சட்டசபைக்கு பைக்கில் வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ.
- பா.ஜ.க எம்.எல்.ஏ. ராஜா சிங் தனக்கு புதிய கார் வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.
- பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் சட்டசபைக்கு பைக்கில் வந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானாவில் பாஜக எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராஜாசிங். முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னுடைய கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு புதிய கார்களை வழங்கினார்.
ஆனால் தெலுங்கானாவில் எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் குண்டு துளைக்காத பழைய கார்கள் வழங்கப்பட்டது.
பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட பழைய கார்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் பா.ஜ.க எம்.எல்.ஏ. ராஜா சிங் தனக்கு புதிய கார் வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா சிங் எம்.எல்.ஏ கடந்த வெள்ளிக்கிழமை தனது பைக்கில் சட்டசபைக்கு சென்றார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் சட்டசபைக்கு பைக்கில் வந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






