search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP Assembly"

    • உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது.
    • இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, இரண்டு எம்.எல்.ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சபை நடவடிக்கையின்போது, பாஜக எம்எல்ஏ ராகேஷ் கோஸ்வாமி மொபைலில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

    மற்றொருவர், தனது கையில் புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார்.

    இந்த இரண்டு வீடியோவையும் சமாஜ்வாடி கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவுடன், "சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பாஜக எம்எல்ஏக்கள்! என்று குறிப்பிட்டிருந்தது.

    மேலும், அத்துடன் மஹோபாவைச் சேர்ந்த எம்எல்ஏ சபையில் மொபைல் கேம் விளையாடுகிறார். ஜான்சியின் பாஜக எம்எல்ஏ புகையிலை சாப்பிடுகிறார். இவர்களிடம் மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் இல்லை. சட்டப்பேரவையை பொழுது போக்கு இடமாக வைத்துள்ளனர்.

    இவர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது!" என்று பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இரண்டு எம்எல்ஏக்களின் செயலை விமர்சித்து வருகின்றனர்.



    சட்டசபை வளாகத்திற்குள் விதிகளை மீறி செல்பி எடுப்பவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படும் என உ.பி. சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று உ.பி., சட்டசபையில் மாநில பட்ஜெட் தாக்கலானது. அப்போது எம்.எல்.ஏக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், சபாநாயகர் சதீஷ் மஹானா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    சட்டசபைக்குள் எம்.எல்.ஏக்கள் செல்பி எடுத்தாலோ, புகைப்படம் எடுத்தாலோ மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படும். 
    சட்டசபை கூட்டத்தொடர் சமயத்தின்போது, சட்டசபை வளாகத்தில் தனிப்பட்ட கேமராவை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.

    ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. 

    மீறுவோரின் மொபைல் போனை அவை காவலர்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின் போது ரூ.10 லட்சம் திருடு போனது தொடர்பாக சமாஜ்வாடி எம்.எல்.ஏ. கல்ப்நாத் பஸ்வான் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். #SamajwadiMLA #KalpnathPaswan
    லக்னோ:

    பொதுவாக தங்கள் தொகுதியை சேர்ந்த மக்களின் நலனுக்காக அந்தந்த தொகுதிகளின் பிரதிநிதிகள் அரசிடம் கோரிக்கை வைப்பதைதான் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகள் பார்த்து வருகின்றன. ஆனால் மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்க வேண்டிய எம்.எல்.ஏ. ஒருவரே, பெரும் நெருக்கடியில் சிக்கி தன்னை மீட்குமாறு கேட்டுக்கொண்ட சம்பவம் உத்தரபிரதேச சட்டசபையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    அங்குள்ள அசாம்கார் மாவட்டத்தின் மேநகர் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கல்ப்நாத் பஸ்வான். இவர் நேற்று சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின் போது கண்ணீருடன் கோரிக்கை ஒன்றை வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    என் வாழ்நாளில் ரூ.10 லட்சத்தை நான் கண்ணால் பார்த்தது இல்லை. ஆனால் நான் வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு அசம்காரில் உள்ள ஓட்டலுக்கு சென்றேன். பின்னர் ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது பணம் வைத்திருந்த சூட்கேசில் பணம் இல்லை. அதை யாரோ திருடிச் சென்று இருக்கின்றனர்.

    இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. நான் ஒரு பரம ஏழை. அந்த பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனவே நான் உங்களை கைகூப்பி கேட்கிறேன். இங்கிருந்தும் நீதி கிடைக்கவில்லை என்றால் நான் எங்கே போவேன்?

    இவ்வாறு பஸ்வான் கூறினார்.

    எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுவதை பார்த்த சக உறுப்பினர்களும் வருத்தமடைந்தனர். அப்போது சட்டசபை விவகாரத்துறை மந்திரி சுரேஷ் குமார் கன்னா எழுந்து, எம்.எல்.ஏ. பஸ்வானை அமைதிப்படுத்தினார். இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்படும் எனக்கூறிய மந்திரி, அந்த பணத்தை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிளித்தார்.

    இதைத்தொடர்ந்தே கல்ப்நாத் எம்.எல்.ஏ. அமைதியானார்.
    ×