என் மலர்

  இந்தியா

  பிரதமர் மோடி
  X
  பிரதமர் மோடி

  தமிழ்நாடு வந்தது மறக்க முடியாதது- பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகம் வந்தது தொடர்பாக பிரதமர் மோடி இன்று டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் என குறிப்பிட்டு 2.07 நிமிட வீடியோ ஒன்றை பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
  புதுடெல்லி:

  பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.31,500 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடியின் சென்னை வருகை தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்த நிலையில் தமிழகம் வந்தது தொடர்பாக பிரதமர் மோடி இன்று டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நன்றி தமிழ்நாடு, தமிழகத்துக்கு நேற்றைய வருகை மறக்க முடியாதது’ என்று கூறியுள்ளார். மேலும் நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் என குறிப்பிட்டு 2.07 நிமிட வீடியோ ஒன்றையும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
  Next Story
  ×