search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படப்பிடிப்பு"

    • முதல் ஆளாக வந்து சாப்பிடுகிறாயே என்று விஜயகாந்தை சாப்பிட விடாமல் எழுப்பிவிட்டார்.
    • விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் தான் என்று திரையுலகமே அவரை பாராட்டி மகிழ்ந்தது.

    'இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகமான விஜயகாந்த், மதிய உணவு இடைவேளையில் அனைவரும் சாப்பிட உட்காரும்போது தானும் சாப்பிடுவதற்காக மேஜையில் அமர்ந்தார். அப்போது படக் குழுவை சேர்ந்த ஒருவர், படத்தின் ஹீரோவே இன்னும் சாப்பிடவில்லை. அதற்குள் முதல் ஆளாக வந்து சாப்பிடுகிறாயே என்று விஜயகாந்தை சாப்பிட விடாமல் எழுப்பிவிட்டார். அரிசி ஆலை வைத்திருந்த விஜயகாந்துக்கு அன்று உணவுக்கு ஏற்பட்ட நிலைமை அவரை மிகவும் பாதித்தது. அன்றிலிருந்து சினிமா துறையில் நாம் உயரத்தை எட்டியதும் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்வதை முதல் கடமையாக செய்ய வேண்டும் என்று அவருக்குள் சபதம் எடுத்துக் கொண்டார்.

    அதன்படி சினிமா துறையில் அவர் சாதித்ததும் சாப்பாடு விஷயத்தில் அனைவருக்கும் உணவு கொடுப்பதில் மிகவும் முன்னுரிமை கொடுத்து வந்தார். படப்பிடிப்பில் சினிமா தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு கொடுப்பதை விஜயகாந்த் தான் முதலில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தான் மற்றவர்களும் 3 வேளை உணவு கொடுக்க தொடங்கினார்கள். இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் தான் என்று திரையுலகமே அவரை பாராட்டி மகிழ்ந்தது.

    • ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது
    • பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

    ரசிகர்களை பார்த்து அவர் கை அசைத்தார். ரஜினிகாந்துடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படப்பிடிப்பு முடித்த பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கன்னியாகுமரியில் உள்ள விடுதிக்கு சென்றார். கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசி னார். அவருக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன் சில நிமிடங்கள் பேசினார். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    • நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதிகளான குரால் வீர பயங்கரம் கூகையூர் பாக்கம் பாடி, காளசமுத்திரம், நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஜி3 ஆலைய மூவிஸ் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு ஐயப்பன் துணை இருப்பான் என வைக்கப்பட்டுள்ளது.படத்தை தனலட்சுமி கணேசன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, பாடல், இயக்கம் மகாகணேஷ், இணை தயாரிப்பு சரஸ்வதி செல்வராஜ், அசோசியட் விஜயராஜ், உதவி இயக்குனர் திருமலை மாயக்கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை ராஜமுத்து, தயாரிப்பு நிர்வாகம் சந்திரசேகரன், இசை சதாசிவம் ஜெயராமன், ஒளிப்பதிவு துருகம் சதா, எடிட்டிங் ஆனந்த் செய்து வருகிறார். படப்பிடிப்பு சின்னசேலம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சினிமா படபிடிப்பை அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

    • தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் எப்போதுமே இதமான காலநிலை காணப்படும்.

    இந்த கால நிலையை அனுபவிக்கவும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.

    குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த மே மாதம் நடந்த கோடை கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிகமானோர் வந்திருந்தனர். அவர்கள் கண்காட்சியை கண்டு ரசித்து சென்றனர்.

    கோடை விடுமுறை முடிந்த பின்னரும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே உள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டும். அப்போது சுற்றுலாபயணிகள் வருகை வெகுவாக குறைந்து இருக்கும். தற்போது பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் சுற்றுலாபயணிகள் வருகையானது தொடர்கிறது.

    தற்போது பக்ரீத் பண்டிகை விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் நீலகிரியில் கடந்த வியாழக்கிழமை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கேரள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.

    ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள், ஊட்டி படகு இல்லம், பைக்கார படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டு பூத்து குலுங்கிய மலர் செடிகளை கண்டு ரசித்ததுடன், அதனுடன் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

    நேற்று ஒரே நாளில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 23 ஆயிரத்து 883 பேர் வந்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக மாவட்டத்தின் நுழைவு வாயிலான கூடலூர், குஞ்சபனை, பர்லியார் பகுதிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது கூடலூர் பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து சென்றன.

    நீலகிரியில் கோடை சீசன் காரணமாக தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    தற்போது கோடைசீசன் முடிவடைந்தையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சீசன் முடிந்த பின்னரும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடி முதல் கல்லட்டி வரை சாலையோரங்களில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சாலைகளில் உலா வருகின்றனர்.

    சிலர் வனங்களுக்குள் சென்று இயற்கை உபாதைகளை கழிப்பது, சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் மான் உள்ளிட்டவற்றை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அத்துமீறுபவர்களை பிடித்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.

    ×