ஆரல்வாய்மொழி காற்றாலை பகுதியில் ரஜினிகாந்த் படப்பிடிப்பு

ஆரல்வாய்மொழி காற்றாலை பகுதியில் ரஜினிகாந்த் படப்பிடிப்பு

ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்ததுபா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Published on

நாகர்கோவில் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

ரசிகர்களை பார்த்து அவர் கை அசைத்தார். ரஜினிகாந்துடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படப்பிடிப்பு முடித்த பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கன்னியாகுமரியில் உள்ள விடுதிக்கு சென்றார். கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசி னார். அவருக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன் சில நிமிடங்கள் பேசினார். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com