search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு விபத்து"

    • ஜொனாய் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்கன் சபோரி பகுதிக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.
    • குழந்தையை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அசாமின் தேமாஜி மாவட்டத்தில் உள்ள லாலி ஆற்றில் நாட்டு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஜொனாய் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்கன் சபோரி பகுதிக்கு அருகில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.

    இதையடுத்து, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தேமாஜி மாவட்டத்தின் தீயணைப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒரு வயது குழந்தை காணாமல் போயுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதனால், குழந்தையை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • படகில் மொத்தம் 85 பேர் பயணம் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
    • மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 300க்கும் மேற்பட்டோர் பலி

    லாகோஸ்:

    நைஜீரியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் அனம்ப்ரா மாநிலத்தில் நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற அந்த படகு, திடீரென வெள்ளம் அதிகரித்ததால் நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் 76 பேர் உயிரிழந்தனர். படகில் மொத்தம் 85 பேர் பயணம் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நைஜீரியாவில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பெரும்பாலான விளைநிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகிவிட்டதால் இந்த ஆண்டு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.

    துருக்கியில் இருந்து கீரிசுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் 2 படகுகளில் அகதிகளாக தப்பி சென்றனர். அப்போது கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதனால் 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று 30 பேரை பத்திரமாக மீட்டனர். 15 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மேலும், காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.

    • மாணவர்கள் உள்ளிட்ட 22 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்
    • விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எம்.பி. வலியுறுத்தினார்.

    துப்ரி:

    அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 29 பயணிகளுடன் சென்ற அந்த படகு, பாஷானிர் பகுதியில் உள்ள பாலத்தின் தூண் மீது மோதியதால் கவிழ்ந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாணவர்கள் உள்ளிட்ட 22 பேர் மீட்கப்பட்ட நிலையில், 7 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ள துப்ரி மக்களவை உறுப்பினர் பத்ருதீன் அஜ்மல், விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    • கரடோயா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆனது.
    • படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்தார்.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர்.

    கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 20 பேரை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆனது.
    • படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்தனர்.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர்.

    கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, வங்காள தேச அதிபர் அப்துல் ஹமீது மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • அதிக பாரம் காரணமாக படகு ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
    • காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர். கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். அவுலியார் காட் பகுதியில் இந்த கோர விபத்து நடந்தது.


    மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளிட்ட மீட்பு படையினர் மூலம் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக பஞ்சகர் மாவட்ட துணை நிர்வாகத் தலைவர் சோலைமான் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, வங்காள தேச அதிபர் அப்துல் ஹமீது மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படகு மூழ்கியதும் அதில் பயணித்தவர்களில் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரையேறினர்.
    • மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் தானாபூர் அருகே சுமார் 55 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, கங்கை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படகு மூழ்கத் தொடங்கியதும், படகில் இருந்தவர்களில் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரையேறினர். நீச்சல் தெரியாதவர்கள் சிக்கிக்கொண்டனர்.

    தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 பேரை காணவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 படகுகளில் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    • யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததும் சிலர் நீந்தி கரையேறினர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை

    பாண்டா:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் மாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் சுமார் 40 பேர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் சிலர் நீந்தி கரையேறினர்.

    தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மற்றவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    • படகு கவிழ்ந்ததும் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர், சிலர் நீந்தி கரையேறினர்.
    • முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்தனர்.

    பாண்டா:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று அதிக காற்று வீசியதால் கவிழ்ந்தது. இதில் 40-க்கும் மேற்ப்பட்டோர் பயணித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படகு கவிழ்ந்ததும் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீந்தி கரையேறினர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புல்வா( 50), ராஜ்ராணி (45), கிஷான் (6 மாதம்) ஆகிய 3 பேர் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும் 25 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த படகு பாண்டா மாவட்டம் மார்காவில் இருந்து பதேபூர் மாவட்டம் ஜராவ்லி காட் நோக்கி சென்ற நிலையில் கவிழ்ந்துள்ளது. படகு விபத்து தொடர்பாக மார்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் ராகேஷ் சச்சன், ராம்கேஷ் நிஷாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.

    • ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்.
    • ஜனவரி மாதம் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஏதென்ஸ்:

    துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது. இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டதாகவும், 50 பேரை காணவில்லை என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கடற்பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீட்பு பணி சவாலாக உள்ளது.

    ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்புதேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். அவர்களில பலர் கிரீஸ் நாட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டிற்கு, ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் மைகோனோஸ் தீவில் கடந்த ஜூன் மாதம் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 108 பேர் மீட்கப்பட்டதாக ஐநா அகதிகள் அமைப்பு கூறி உள்ளது.

    • பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிந்தது.
    • படகில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.

    ஹைதி நாட்டில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுவதால் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் கடல் வழியாக படகில் சென்று வருகின்றனர். நேற்று இரவு ஒரு படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் மியாமி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த படகு கவிந்தது.

    இதனால் அதில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.

    இது பற்றி அறிந்த கடற்படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலரை அவர்கள் மீட்டனர்.

    இந்த படகு விபத்தில் ஒரு கைக்குழந்தை, 12 பெண்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர் என ஹைதி நாட்டு பிரதமர் தெரிவித்து உள்ளார்.

    ×