வங்காளதேச படகு விபத்து - பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு

கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆனது. படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்தனர்.
படகு விபத்து
படகு விபத்து
Published on

டாக்கா:

வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர்.

கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, வங்காள தேச அதிபர் அப்துல் ஹமீது மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com