search icon
என் மலர்tooltip icon

    ஹைதி

    • ஆயுதமேந்திய சிலர் உள்ளே அத்துமீறி நுழைந்து அதிபர் ஜோவெனலை சுட்டுக் கொன்றனர்
    • அதிபர் மனைவியின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என கூறப்படுகிறது

    கரீபியன் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு, ஹைதி (Haiti). இதன் தலைநகரம் போர்ட்-ஆ-ப்ரின்ஸ் (Port-au-Prince).

    கடந்த 2021 ஜூலை 7 அன்று அந்நாட்டு அதிபர் ஜோவெனல் மாய்ஸ் (Jovenel Moise), போர்ட்-ஆ-ப்ரின்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆயுதமேந்திய சிலர் உள்ளே அத்துமீறி நுழைந்து அதிபர் ஜோவெனலை சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதலில் அதிபர் ஜோவெனல் மாய்சின் மனைவி மார்டினெ மாய்ஸ் (Martine Moise) காயமடைந்தார்.

    அதிபர் படுகொலை விசாரணையில் இதில் 50க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டனர்.

    இந்த குற்றப்பத்திரிகையில், அதிபரின் மனைவி மார்டினெ மாய்ஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டதாவது:

    சம்பவம் நடந்த பிறகு அதிபரின் மனைவி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் பல அம்சங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

    மேலும், அதிபர் மாளிகையில் இருந்த செயலர், இச்சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன் அங்கு வந்த மார்டினெ சுமார் 5 மணி நேரம் அங்கிருந்து, சில முக்கிய பொருட்களை அப்புறப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

    மார்டினெ, ஜோவெனல் உயிரிழந்ததும், தான் அதிபராக பதவியேற்க திட்டமிட்டு, முன்னாள் பிரதமர் க்ளாட் ஜோசப் (Claude Joseph) மற்றும் சிலருடன் இணைந்து சதி செய்து தனது கணவரை கொலை செய்துள்ளார்.

    இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    க்ளாட் ஜோசப் பெயரும் இதில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

    "அதிபர் படுகொலையினால் பலனடைந்திருப்பது தற்போதைய பிரதமர் ஏரியல் ஹென்றி (Ariel Henry) என்றும், அவர் நீதித்துறையை ஆயுதமாக்கி தனது அரசியல் எதிரிகளை பழி வாங்குவதாகவும்" என க்ளாட் ஜோசப் குற்றம் சாட்டினார்.

    மாய்ஸ் உயிரிழந்த 2 வாரங்களில் அதிபராக பதவியேற்ற ஹென்றி, இந்த குற்றச்சாட்டுகளை "பொய் செய்தி" என மறுத்துள்ளார்.

    • கூட்டத்துக்குள் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
    • தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    போர்ட்-ஓ-பிரின்ஸ்:

    ஹைதி நாட்டு தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் வடக்கு புறநகர் பகுதியில் பாதிரியார் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தவ பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அணிவகுத்து சென்றனர்.

    அப்போது கூட்டத்துக்குள் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

    • வீடுகளுக்கு வெளியில் பிணமாக கிடக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் போராட்டக்காரர்கள் வெளியிட்டனர்.
    • சம்பவத்தை தொடர்ந்து உயிர் பயத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினார்கள்.

    கரீபியன் நாடான ஹைதியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் அவ்வப்போது அமைதியை குலைக்கும் வகையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அவர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்தநிலையில் அங்குள்ள சிறிய நகரமான கேபரெட் என்ற இடத்தில் ஒரு கும்பல் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் குடியிருப்பு பகுதிக்கு வந்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    ஈவு, இரக்கம் இல்லாமல் அவர்கள் அங்குள்ள 20 வீடுகளுக்கு தீ வைத்தனர். தீ மளமளவென பரவியதால் அந்த வீடுகள் சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் 12 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வீடுகளுக்கு வெளியில் பிணமாக கிடக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் போராட்டக்காரர்கள் வெளியிட்டனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிர் பயத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினார்கள்.

    • பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிந்தது.
    • படகில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.

    ஹைதி நாட்டில் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுவதால் பலர் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் கடல் வழியாக படகில் சென்று வருகின்றனர். நேற்று இரவு ஒரு படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் மியாமி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    பகாமா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த படகு கவிந்தது.

    இதனால் அதில் பயணம் செய்த அகதிகள் கடலுக்குள் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்கள்.

    இது பற்றி அறிந்த கடற்படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலரை அவர்கள் மீட்டனர்.

    இந்த படகு விபத்தில் ஒரு கைக்குழந்தை, 12 பெண்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர் என ஹைதி நாட்டு பிரதமர் தெரிவித்து உள்ளார்.

    ×