search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேஷனல் ஹெரால்டு வழக்கு"

    • பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம்
    • சோனியாகாந்தி ஒரு புலி, அமலாக்கத்துறை விசாரணைக்கு அவர் பயப்பட மாட்டார்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21ந் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு காங்கிரஸ இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பி உள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 18 ஆம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தும் வாய்ப்பைப் காங்கிரஸ் எம்.பி.க்கள் பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு புலி என்றும், அவர் பயப்பட மாட்டார் என்றும் கூறினார். இது போன்ற பல விஷயங்களை அவர் ஏற்கனவே சந்தித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    முன்னதாக கடந்த மாதம் ராகுல்காந்தி ஐந்து நாட்களுக்கும் மேலாக அமலாக்க அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரான போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவகாசம் வழங்க சோனியா காந்தி கோரியிருந்தார்.
    • வரும் 21ம் தேதி சோனியா காந்தி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

    ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்நிலையில், ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

    • நேஷனல் ஹெரால்டு வழக்கில் 5வது நாளாக ராகுல் காந்தியிடம் நேற்று விசாரணை நடைபெற்றது.
    • ராகுல் காந்தியிடம் நேற்று 12 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது.

    இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி ராகுலும், வரும் 23-ம் தேதி சோனியா காந்தியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் அப்துல் கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏற்கனவே 4 முறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 40 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.

    ராகுலிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    நேற்று 5-வது நாளாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி. முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவிலும் நீடித்தது. பின்னர் இரவு 9 மணிக்கு இரவு உணவுக்காக ராகுல் காந்தி வீட்டுக்குச் சென்றார். அதன்பின்னர் மீண்டும் அமலாக்கப் பிரிவு அலுவலகம் சென்றார் ராகுல் காந்தி. இரவிலும் துருவி துருவி ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்தனர்.

    இந்நிலையில், விசாரணைக்கு பின் டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரகம் அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 12 மணி நேர விசாரணை முடிந்து நள்ளிரவில் வெளியேறினார்.

    • பாஜக அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல்காந்தி துன்புறுத்தப்படுகிறார்.
    • மத்திய அமலாக்கத்துறையில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை?.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இன்று 5வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகும், இரவில் அரை மணி இடைவேளைக்கு பிறகும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களில் ராகுல் காந்தியிடம் மொத்தம் 40 மணிநேரம் விசாரணை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல் காந்தி துன்புறுத்தப் படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அமலாக்க இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

    பாஜக மற்றும் மோடி அரசுக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து, உறுதியான முறையில், குரல் கொடுத்து வருவதாகவும், எனவே ராகுல்காந்தியை துன்புறுத்தும் இந்த நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவது, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் போராட்டம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து நாட்டை திசை திருப்பும் முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

    மத்திய அமலாக்கத்துறையில் மற்ற வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

    • ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ராகுல் காந்தியிடம் 40மணி நேரத்துக்கும் அதிகமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத் துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர்.

    இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி ராகுலும், வரும் 23-ம் தேதி சோனியா காந்தியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் அப்துல் கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று 4-வது நாளாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடந்தது. அப்பகுதி முழுதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது. போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

    கடந்த 4 நாளாக ராகுல் காந்தியிடம் இதுவரை 40 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

    • ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ராகுல் காந்தியிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள "யங் இந்தியா" நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது

    இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பா.ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் கடந்த 2-ந் தேதி ராகுலும், 8-ந் தேதி சோனியா காந்தியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    வெளிநாட்டில் இருப்பதால் விசாரணை தேதியை மாற்றுமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் சோனியாவும் சம்மன் தேதியை மாற்றி வைக்க கோரினார். இதனையேற்ற அமலாக்கத்துறை ராகுல் காந்தி திங்கட்கிழமையும் (13-ந் தேதி) சோனியா காந்தி ஜூன் 23-ந் தேதியும் ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பியது.

    அதன் அடிப்படையில் கட்சியினருடன் ராகுல்காந்தி பேரணியாக சென்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு நேற்று காலை 11.10 மணிக்கு ஆஜரானார்.

    ராகுல்காந்தி அலுவலகத்தில் ஆஜரானதும் முதல் 20 நிமிடம் வருகை பதிவு மற்றும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கினர். மதியம் 2.30 மணிக்கு மதிய உணவுக்கான அவர் புறப்பட்டார்.

    மாலை 3.30 மணிக்கு ஆஜரான ராகுல்காந்தியிடம் இரவு 11.25 மணி வரை விசாரணை மேற்கொள்ளப் பட்டது. சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் சுற்று விசாரணையின்போது பண மோசடி தடுப்பு சட்டம் (பி.எம்.எல்.ஏ.) பிரிவு 50-ன் கீழ் தனது வாக்குமூலத்தை ராகுல்காந்தி சமர்பித்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். 144 தடை உத்தரவையும் மீறி பேரணியாக சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

    டெல்லி உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

    இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி இன்றும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜாரானார். அவரிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    காலை 11 மணி அளவில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்காவும் வந்தார். ராகுல் காந்தியிடம் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இன்றும் 9 மணி நேரம் வரை அவரிடம் விசாரணை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராகுல் மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் இன்றும் பேரணியாக செல்ல முயன்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    கே.சி.வேணுகோபால், ஆதர்ரஞ்சன் சவுத்ரி, சவுரவ் கோகாய், திபேந்தர் சிங் ஹீடா, ரஞ்சித் ரஞ்சன், மாணிக்கம் தாகூர், இம்ரான் உள்ளிட்ட தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட கட்சியை சேர்ந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நேசனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதைக் கண்டித்து நேற்று நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட கட்சியை சேர்ந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கொரோனாவால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 23-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு பேரணியாக சென்றனர்.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, ராகுல் காந்திக்கு ஆதரவாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காவலர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

    ×