search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுத்தம்"

    • ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்
    • 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர்.

    கன்னியாகுமரி:

    தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் தனியார் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தர்மபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பாக தலைவர் ரெங்க நாயகி கணேசன், ஊராட்சி செயலர் பாமா ஆகியோர் சம்பவ இடம் சென்றனர்.

    அவர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் ஆட்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், வயதான முதியோர்கள், குழந்தைகள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள், 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்கு ளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஈத்தா மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். தர்மபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ராம லெட்சுமி (பொறுப்பு), ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் செய்யது அலி பாத்திமா, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கனக பாய், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோரும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொது மக்கள், நாங்கள் வசித்து வரும் குடியிருப்பு வீடுகளை உடனடியாக காலி செய்து மாற்று இடத்திற்கு செல்ல முடியாத நிலையில் வறுமை யில் உள்ளோம். எங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கருணை கூர்ந்து நாங்கள் குடியிருப்பதற்கு மாற்று இடம் தந்து உதவ வேண்டும், முடியாத பட்சத்தில் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    இதன் பேரில் அதிகாரிகள் தற்காலிகமாக ஆக்கிர மிப்பு அகற்றுவதை நிறுத்தி வைத்து உள்ளனர்.

    • நன்னிலம் பகுதிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
    • சில பஸ்கள் காலை நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக குற்றச்சாட்டு.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அரசு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகிறது.

    இங்கு கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

    அனைத்து வழித்தடங்களில் இருந்தும் நன்னிலம் பகுதிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

    சில நேரங்களில் ஒரு சில வழித்தடங்களில் அதுவும் இயக்கப்படுவதில்லை.

    அதிலும், கூட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மனவெளி, சேங்கனூர், அச்சுதமங்கலம், வடக்குடி ஆகிய நிறுத்தங்களில் சில பஸ்கள் காலை நேரங்களில் நிற்காமல் செல்வதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    இதனால், மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து காலை- மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை குறைந்ததையடுத்து நடவடிக்கை
    • நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பியுள்ளது.மீதியுள்ள 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    அணைகளின் நீர்மட்டம் நிரம்பி வழியும் நிலையில் மழையோர பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வந்ததையடுத்து பேச்சிப் பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டது. கடந்த 3 நாட்களாக உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வந்ததால் கோதை ஆறு குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. மலையோர பகுதி களிலும், அணை பகுதி களிலும் மழை குறைந்துள்ள தையடுத்து பேச்சிபாறை அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரி நீர் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக மட்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    பேச்சிபாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டதையடுத்து கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந் துள்ளது. திற்பரப்பு அருவி யிலும் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. என்றாலும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்றும் அனுமதி வழங்கவில்லை.

    பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43. 73 அடியாக உள்ளது. அணைக்கு 850 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 788 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 73.54 அடியாக உள்ளது. அணைக்கு 214 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.68 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.77அடியாகவும் பொய்கை அணை நீர்மட் டம் 17.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 49.38 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.70 அடிைய எட்டியுள்ளது.

    அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதை எடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • திருச்சி மாவடி குளத்தில் அமைய இருந்த ஓய்வு நேர படகு சவாரி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது
    • ஒருங்கிணைப்புக்குழு இல்லாததால் தடுமாற்றம்

    திருச்சி

    திருச்சி மாநகரில் புண்ணிய ஸ்தலங்களைத் தவிர வேறு வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. மாநகர் மக்கள் காவிரி பாலத்தில் நின்று தண்ணீர் செல்லும் அழகை வேடிக்கை பார்ப்பதையே முக்கியமாக கருதி வந்தனர். தற்போது காவிரி பாலம் சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதால் அதுவும் தடைபட்டுள்ளது.

    இதற்கிடையே திருச்சி பொன்மலைபட்டியில் 142 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் மாவடி குளத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க படகு சவாரி கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை மூலம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் ஆகியவை 2021 ஜனவரியில் நிறைவடைந்தன.

    பின்னர் கிழக்குறிச்சி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அந்தக் குளத்தில் படகு சவாரியை கொண்டு வர ரூ.1.75 லட்சத்தில் இரண்டு துடுப்பு படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகள் வாங்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது திருச்சி நகரின் மிகப்பெரிய நீர்நிலையான மாவடிக்குளம் குளத்தில் உத்தேசிக்கப்பட்ட ஓய்வுநேர படகு சவாரி அதிகாரப்பூர்வமற்ற முறையில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே குளத்தையொட்டி அமைக்கப்பட்ட நடைபாதை இரண்டு ஆண்டுகளில் சேதமடைந்துள்ளது. இங்கு சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு போடப்பட்ட நடைமேடை, சரியான வாய்க்கால் இல்லாததால், சமீபத்தில் பெய்த மழையில் சேதமடைந்தது. சாலை மற்றும் தெருவிளக்கு உள்கட்டமைப்பும் மோசமாக உள்ளது.

    மேலும் தற்போது நடைபெற்று வரும் பாதாள வடிகால் பணியால் சேதமடைந்த பாதசாரிகளுக்கான பாதையை திருச்சி மாநகராட்சி சீரமைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை கூறினாலும், உள்ளாட்சி அமைப்பு இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. குளத்தை மேம்படுத்த ஏற்கனவே ரூ.1 கோடியே 92 லட்சம் செலவழித்துள்ளோம். இனிமேலும் நாங்கள் செலவழிக்க தயாராக இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி பழுதடைந்த நடை பாதையை சீரமைத்து படகு சவாரியை திட்டமிட்டபடி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணமகனுக்கு நோய் இருப்பதாக புகார் கூறியதால் பரபரப்பு
    • போலீசார் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டாரை அடுத்த செவரக்கோடு மருதாக்க விளையைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

    பெற்றோரை இழந்த இளம்பெண் கான்வெ ண்டில் படித்து வளர்ந்தவர். இவர்களது திருமணம் நேற்று நடை பெறுவதாக இருந்தது.தேமானூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மாலை 3 மணிக்கு திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    உறவினர்கள் உள்பட பலரும் விழாவுக்கு வந்த நிலையில், மணப்பெண் வீட்டில் இருந்து யாரும் வராதது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விசாரித்தபோது, மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருக்கிறது. எனவே திருமணத்தில் எங்களுக்கு விருப்பமில்லை என மணமகள் வீட்டார் கூறி உள்ளனர். இதனைக் கேட்டு மணமகன் வீட்டாரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திருவட்டார் போலீசில் மணமகன் புகார் செய்தார்.எனக்கு நோய் இருக்கிறது என நான் ஏற்கனவே கூறியுள்ளேன். என்னை திட்டமிட்டு அவமானப்ப டுத்தி, மனதளவில் வேதனைப்படுத்தி யுள்ளார்கள் என புகாரில் அவர் கூறியிருந்தார்.

    மேலும் மணப்பெண்ணை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது எனக்கு இன்று காலையில் தான் தெரியும். ஏற்கனவே இவருக்கு நோய் இருப்பது தெரிந்திருந்தால் திருமணத்திற்கே சம்மதித்து இருக்க மாட்டேன்.

    ஏற்கனவே தாய், தந்தையை இழந்து, உறவினர் பாதுகாப்பில்தான் வளர்ந்து வருகிறேன். எனவே இவரை திருமணம் செய்ய முடியாது என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். திருமண நாளில் மணமகள் திருமணத்தை நிறுத்தியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ரெயில் இயக்கப்படாது.
    • தெற்கு ரெயில்வே தகவல்

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொல்லம் கோட்டயம்- ஏற்றுமானூர் மற்றும் எர்ணாகுளம்-திருச்சூர் ஆகிய பிரிவுகளில் ரெயில் நிலையங்களில் திட்ட மிடப்பட்டுள்ள பாதை பராமரிப்பு பணிகளுக்காக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் எண்: 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2 முதல் 19 வரை (18 நாட்கள்) சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுவது திருவனந்தபுரம் சென்ட்ரலில் நிறுத்தப்படும். அதாவது திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் குருவாயூர் இடையே இந்த ரெயில் இயக்கப்படாது.

    ரெயில் எண்: 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2 முதல் 19 வரை (18 நாட்கள்) குருவாயூருக்குப் பதிலாக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து சேவையைத் தொடங்கும். அதா வது குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ரெயில் இயக்கப்படாது.

    ரெயில் எண்: 16382 கன்னியாகுமரி - புனே சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் நவம்பர் 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் (3 நாட்கள் காயங்குளம் சந்திப்பு மற்றும் எர்ணாகுளம் டவுன், ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் செல்லாது. அம்பலப்புழா, ஹரிபாட், ஆலப்புழா, சேர்த்தலா மற் றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதல் தற்காலிக நிறுத்தம் வழங்கப்படும்.

    • திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகரில் 2-வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் விநியோகம் நாளை 30-ந்தேதி நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது குடிநீா்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் மின்சார வாரியத்தின் மூலம் சனிக்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 1, 13, 14, 3வது மண்டலத்துக்கு உள்பட்ட 44, 45, 50, 51, மற்றும் 4வது மண்டலத்துக்கு உள்பட்ட 52, 55 ஆகிய வாா்டுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில், வரும் திங்கள்கிழமைமுதல் மேற்கண்ட பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேட்டூர்நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த மாத சம்பளத் தொகையை வழங்கவில்லை என கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் நேற்று முடிவுக்கு வந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர்நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 100 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்களுக்கு கடந்த மாத சம்பளத் தொகையை வழங்கவில்லை என கடந்த 17-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் நேற்று முடிவுக்கு வந்தது. அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு சம்பளத்தொகை வழங்கப்–பட்டபதை அடுத்து இன்று காலை முதல் அனைவரும் பணிக்கு திரும்பினார்கள்.

    • மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்று வருகின்றனர்.
    • சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்று வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பளம் வழங்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மேட்டூர் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை என தெரிகிறது.
    • இதையடுத்து நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் அமர்ந்து வேலை புறக்கணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது.

    குறிப்பாக, கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருவதால் மழை நீரில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே சாலைகளில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு குள்ளாகி உள்ளனர்.

    • இடலாக்குடி , வடிவீஸ்வரம் , வாகையடி, கோட்டார் , வடசேரி போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் 7 நாட்கள் தாமதம் ஆகும்.
    • நான்கு இடங்களில் பழுது ஏற்பட்டு தண்ணீர் விரையம் ஆவதால் பழுதுகளை சரி செய்ய வேண்டி உள்ளது .

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான முக்கடல் அணையிலிருந்து கிருஷ்ணன் கோவில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் 600 எம்.எம். பிரதான குழாயில் நாகர்கோவில் திட்டுவிளை ரோட்டில் துவரங்காடு பெட்ரோல் பங்க் அருகில் , இசாந்திமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் மற்றும் அருகுவிளை வெள்ளாளர் தெரு ஆகிய நான்கு இடங்களில் பழுது ஏற்பட்டு தண்ணீர் விரையம் ஆகுவதால் மேற்படி பழுதுகளை சரி செய்ய வேண்டி உள்ளது .

    இதனால் நகரில் இடலாக்குடி , வடிவீஸ்வரம் , வாகையடி, கோட்டார் , வடசேரி போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் 7 நாட்கள் தாமதம் ஆகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து விசைத்தறிகள் வேலைநிறுத்தம் போராட்டம் அறிவித்தி ருந்தனர்.
    • இந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கொங்கு விசைத்தறி கள் சங்கத்தார் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தி ருந்த னர். தற்போது இந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக சங்க நிர்வாகி சங்கமேஸ்வரன் கூறியதாவது:

    கோவை மாவட்ட விசைத்தறி சங்கத்தார் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேட்டுக்கொண்டனர். அதற்கு விசைத்தறி சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பொறுத்திருங்கள். முதல்வரிடம் பேசி நல்லதொரு பதிலை சொல்கிறேன் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதால், அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

    அதே போல் அரசு கேட்டுக்கொண்ட தற்கிணங்க நாங்களும் மின் கட்டண உயர்வினை கண்டித்து நாளை தொடங்க விருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். எங்களுடன் கொங்கு மண்டல முறுக்கு நூல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×