search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தம்
    X

    கோப்பு படம் : பேச்சிப்பாறை அணை

    பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தம்

    • மழை குறைந்ததையடுத்து நடவடிக்கை
    • நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பியுள்ளது.மீதியுள்ள 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    அணைகளின் நீர்மட்டம் நிரம்பி வழியும் நிலையில் மழையோர பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வந்ததையடுத்து பேச்சிப் பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டது. கடந்த 3 நாட்களாக உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வந்ததால் கோதை ஆறு குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. மலையோர பகுதி களிலும், அணை பகுதி களிலும் மழை குறைந்துள்ள தையடுத்து பேச்சிபாறை அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரி நீர் இன்று நிறுத்தப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக மட்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    பேச்சிபாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டதையடுத்து கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந் துள்ளது. திற்பரப்பு அருவி யிலும் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. என்றாலும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்றும் அனுமதி வழங்கவில்லை.

    பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43. 73 அடியாக உள்ளது. அணைக்கு 850 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 788 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 73.54 அடியாக உள்ளது. அணைக்கு 214 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.68 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.77அடியாகவும் பொய்கை அணை நீர்மட் டம் 17.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 49.38 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.70 அடிைய எட்டியுள்ளது.

    அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதை எடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×