search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரபலி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலத்தூரில் நரபலி நடந்த வீட்டில் போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
    • வீட்டின் அனைத்து பகுதிகளையும் கைரேகை நிபுணர்களும் சோதித்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரை சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவி லைலா.

    இவர்களுக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த முகமது ஷபி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. முகமது ஷபி மந்திரவாதி என அறிமுகப்படுத்தி கொண்டு அவர்களிடம் பழகி உள்ளார்.

    மேலும் நரபலி கொடுத்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்று கூறியுள்ளார். அதனை நம்பிய பகவல் சிங்கும், அவரது மனைவி லைலாவும் இலத்தூர் வீட்டில் நரபலி கொடுக்க ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து முகமது ஷபியே நரபலி கொடுக்க பெண்களை கடத்தி வந்துள்ளார். எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி மற்றும் தர்மபுரியை சேர்ந்த பத்மா ஆகியோரை இலத்தூருக்கு கடத்தி சென்றார்.

    பகவல் சிங் வீட்டில் அவர்கள் இருவரையும் வைத்து நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்துள்ளார்.

    பின்னர் அவர்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி குக்கரில் போட்டு சமைத்து சாப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முகமது ஷபி, பகவல் சிங், லைலா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின்போது அவர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா? என்று கேட்டபோது 3 பேருமே அதனை ஒப்புக்கொண்டுள்ளனர். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று அவர்களுக்கு எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. மேலும் 3 பேரின் டி.என்.ஏ. மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இலத்தூரில் நரபலி நடந்த வீட்டில் போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். வீட்டின் அனைத்து பகுதிகளையும் கைரேகை நிபுணர்களும் சோதித்து வருகிறார்கள்.

    இது தவிர இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களையும் கண்டுபிடிக்க போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • பத்மா நரபலி கொடுக்கப்பட்ட தகவல் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் இன்னும் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
    • தனது தாயாரின் எஞ்சிய பாகங்களை தந்து அவருக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும்.

    கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் பத்மாவின் மகன்கள் செல்வராஜ், சேட் ஆகியோர் எர்ணாகுளத்தில் தங்கி உள்ளனர்.

    அவர்கள் தாயார் பத்மாவின் உடலை அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளனர். பத்மா நரபலி கொடுக்கப்பட்ட தகவல் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் இன்னும் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

    பத்மாவின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருப்பதால், அவை பத்மா உடல் தானா? என்பதை கண்டுபிடிக்க அவரது மகன்களிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்முடிவுகள் வந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.

    இந்த நிலையில் பத்மாவின் மகன் செல்வராஜ், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் தனது தாயாரின் எஞ்சிய பாகங்களை தந்து அவருக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும்.

    கடந்த 11-ந் தேதி முதல் எர்ணாகுளத்தில் தான் இருக்கிறோம். எங்களது டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வந்தபின்னர்தான் உடலை ஒப்படைப்போம் என போலீசார் கூறுகிறார்கள்.

    அதனை விரைவாக முடித்து உடலை ஒப்படைக்க கேரள அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதுபோல தமிழக முதல்வருக்கும் பத்மாவின் மகன்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரபலி பூஜை நடந்த பகவல் சிங் வீட்டில் கடந்த 2 நாட்களாக போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
    • பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை தோண்டி எடுத்து அங்கிருந்த உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி மற்றும் அவரது கூட்டாளி பகவல் சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களை போலீசார் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    முதல்கட்ட விசாரணையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பும், பத்மாவை கடந்த மாதமும் நரபலி கொடுத்ததாக 3 பேரும் தெரிவித்தனர்.

    மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதையும் ஒப்புக்கொண்டனர். அதன்பின்பு அவர்களின் மர்ம உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து சில உடல் பாகங்களையும், நர மாமிசத்தையும் பிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அவற்றை போலீசார் மீட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    நர மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாத்தது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது அவற்றை பெங்களூருவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து நரமாமிசத்தை வாங்க தயாராக இருந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த முயற்சி ஒரு புறம் நடக்க நரபலி கொடுத்த பெண்களின் உடல் உறுப்புகள் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி முகமது ஷபியிடம் கேட்டபோது, சில மாதங்கள் பிணவறையில் பணி புரிந்ததாகவும், அங்கு பிரேத பரிசோதனையின்போது உடல் உறுப்புகள் வெட்டப்படுவதை பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினார். இதனை போலீசார் முழுமையாக நம்பவில்லை.

    எனவே இவர்களுக்கு வேறு நபர்கள் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே நரபலி பூஜை நடந்த பகவல் சிங் வீட்டில் கடந்த 2 நாட்களாக போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை தோண்டி எடுத்து அங்கிருந்த உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள். சில இடங்களில் எலும்பு துண்டுகளும் கிடைத்துள்ளன. அவை யாருடையது என்பதை கண்டுபிடிக்க பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அதன்முடிவுகள் வந்த பின்னரே பகவல் சிங் தம்பதி மற்றும் முகமது ஷபி ஆகியோர் வேறு யாரையும் நரபலி கொடுத்துள்ளார்களா? என்பது தெரியவரும்.

    • 2 பெண்களை நரபலி கொடுத்த பின்னர் அவர்களது உடல்களை 56 துண்டுகளாக வெட்டிய மந்திரவாதி உள்பட 3 பேரும் அதனை வீட்டின் பிரிட்ஜில் வைத்துள்ளனர்.
    • உடல்களை அடக்கம் செய்வதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்ட தொழிலாளி ஒருவரை வரவழைத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி மற்றும் தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி, அவரது நண்பர் சித்த வைத்தியர் பகவல் சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்திய போது, 2 பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தி பின்னர் நரபலி கொடுத்ததும், நர மாமிசம் சாப்பிட்டதாகவும் தகவல் கிடைத்தது. இதற்கிடையில் கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களை விசாரணைக்காக போலீசார் காவலில் எடுத்தனர். 3 பேரையும் 12 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இதனைத் தொடர்ந்து நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பகவல் சிங்கின் வீட்டுக்கு 3 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கொச்சி போலீஸ் துணை கமிஷனர் சசிதரன் முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பகவல் சிங்கின் வீட்டில் சில இடங்களிலும், பிரிட்ஜிலும் ரத்தக்கறைகள் காணப்பட்டன. இதுபற்றி போலீசார் அவர்களிடம் கேட்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    2 பெண்களை நரபலி கொடுத்த பின்னர் அவர்களது உடல்களை 56 துண்டுகளாக வெட்டிய மந்திரவாதி உள்பட 3 பேரும் அதனை வீட்டின் பிரிட்ஜில் வைத்துள்ளனர். உடல்களை அடக்கம் செய்வதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்ட தொழிலாளி ஒருவரை வரவழைத்துள்ளனர்.

    அதனால் நீண்ட நேரமாக பிரிட்ஜில் உடல் பாகங்கள் வைக்கப்பட்டதாக விசாரணையின் போது கைதானவர்கள் தெரிவித்தனர். தற்போது நடைபெற்ற சோதனையின் போது பிரிசரில் இருந்து மாமிச துண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் தான் ரத்தக்கறை உறைந்து காணப்பட்டு உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் 2 பெண்கள் தவிர மேலும் சிலரும் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது.

    போலீசாரின் இந்த சந்தேகத்திற்கு, பகவல் சிங்கின் வீட்டு தோட்டத்தில் எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டது தான் காரணம். மேலும் தோட்டத்தில் புதிதாக மஞ்சள் செடிகள் ஆங்காங்கே நட்டு வைக்கப்பட்டு உள்ளன. எனவே மாயமானவர்கள் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    போலீசாரின் இந்த சோதனையின் போது சிறப்பு பயிற்சி பெற்ற மோப்பநாய்கள் பயன்படுத்தப்பட்டன. 40 அடிக்கு கீழ் உடல்கள் அழுகி போய் இருந்தாலும் அதனை கண்டுபிடிக்கும் சக்தி வாய்ந்த மாயா, மர்பி என்ற மோப்பநாய்கள் மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது. தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் நரபலி கொடுக்கப்பட்டது எப்படி? என்பது குறித்து டம்மி உடலை வைத்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி விவரம் சேகரித்தனர்.

    • முகமது ஷபியின் செல்போன் எண்ணை கைப்பற்றி அதில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
    • செல்போனில் பதிவான தகவல்களை கண்டுபிடித்தால் அவருக்கு யார்-யாரிடம் தொடர்பு இருந்தது, நரபலி நடந்த வீட்டிற்கு வந்து சென்ற முக்கிய பிரமுகர்கள் பற்றிய விபரம் தெரியவரும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி மற்றும் தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா. இந்த 2 பெண்கள் 56 துண்டுகளாக வெட்டப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டனர்.

    நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி, அவரது நண்பர் பகவல் சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதும், நரபலி கொடுத்த பின்பு அவர்களின் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து கைதான 3 பேரையும் போலீசார் 12 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    பத்தினம்திட்டா பகுதியில் உள்ள பகவல் சிங்கின் வீட்டில் வைத்துதான் 2 பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த வீட்டிற்கு 3 பேரையும் அழைத்து சென்று போலீசார் சோதனை நடத்தினர். மேலும் நரபலி கொடுக்கப்பட்ட அறை, பெண்களின் உடல் பாகங்கள் புதைக்கப்பட்ட பகுதிகளில் போலீசாரும், கைரேகை நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதோடு அக்கம்பக்கத்தினரிடமும் பகவல் சிங், அவரது மனைவி லைலா குறித்து ரகசியமாக விசாரித்தனர். இதில் பகவல் சிங், கை நாடி பார்த்து வைத்தியம் செய்து வந்ததாகவும், அவரது வீட்டிற்கு அடிக்கடி சொகுசு கார்களில் பலர் வந்து சென்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்தது.

    பகவல் சிங் வைத்திய தொழிலுடன் மசாஜ் செய்வதிலும் வல்லவர் எனக்கூறப்படுகிறது. எனவே இவரிடம் மசாஜ் செய்து கொள்ள பல முக்கிய பிரமுகர்கள் வந்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர்.

    மேலும் இரவு நேரங்களில் பெண்களும் இங்கு வந்து சென்றுள்ளனர். அவர்களை வைத்து பகவல் சிங்கும், முகமது ஷபியும் விபசாரம் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தியதில் பகவல் சிங்கின் வீட்டிற்கு 2 மாணவிகள் வந்து சென்ற தகவல் கிடைத்தது. அந்த மாணவிகளுக்கு முகமது ஷபி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து அந்த மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக மகளிர் போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும் நேற்று மந்திரவாதி முகமது ஷபியின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது முகமது ஷபியின் செல்போனை கேட்டனர். ஆனால் அதை அவர் உடைத்து விட்டதாக அவர்கள் கூறினர்.

    எனவே முகமது ஷபியின் செல்போன் எண்ணை கைப்பற்றி அதில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். செல்போனில் பதிவான தகவல்களை கண்டுபிடித்தால் அவருக்கு யார்-யாரிடம் தொடர்பு இருந்தது, நரபலி நடந்த வீட்டிற்கு வந்து சென்ற முக்கிய பிரமுகர்கள் பற்றிய விபரம் தெரியவரும்.

    அப்போது இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • முகமது ஷபி எர்ணாகுளம் பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இதன் அருகே கல்லூரி மாணவிகள் விடுதி ஒன்று உள்ளது.
    • மாணவிகளை முகமது ஷபி அடிக்கடி நரபலி நடந்த பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ரோஸ்லி (வயது 50), தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (52) ஆகியோர் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணாமல் போனார்கள்.

    காணாமல் போன பத்மாவை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை முகமது ஷபி என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.

    போலீசார் முகமது ஷபியை கைது செய்து விசாரித்தபோது, அவர் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டுக்கு அழைத்து சென்று பத்மாவை நரபலி கொடுத்தது தெரியவந்தது. இதுபோல எர்ணாகுளத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் மாயமான ரோஸ்லியும் இதுபோல நரபலி கொடுக்கப்பட்டதையும் முகமது ஷபி ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் முகமது ஷபியின் நண்பர்களான பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் போலீசார் நரபலி நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று தடயங்களை சேகரித்தனர். இதில் பகவல் சிங் வாழ்க்கையில் செல்வம் பெருக பூஜை நடத்தியதும், இதற்காக ரோஸ்லி மற்றும் பத்மாவை கடத்தி வந்து நரபலி கொடுத்ததாகவும் கூறினர்.

    நரபலி கொடுக்கும் முன்பு அவர்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும், நரபலி கொடுத்த பின்பு அவர்களின் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறி அதிரவைத்தனர்.

    ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்க கடத்தி வந்தது முகமது ஷபி என்பதால் அவரை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்த போலீசார் அவரது பின்னணி பற்றி விசாரிக்க தனிப்படை அமைத்தனர்.

    இதில் முகமது ஷபியின் குரூர மனம், அவர் பெண்களை எப்படியெல்லாம் சித்ரவதை செய்தார் என்பது பற்றிய பகீர் தகவல்கள் தெரியவந்தது. மேலும் முகமது ஷபி மீது 8-க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகளும், 70 வயதான மூதாட்டியையும் கற்பழித்து அவரது மர்ம உறுப்புகளை சிதைத்த குற்றச்சாட்டும் அவர் மீது இருப்பது தெரியவந்தது.

    அப்படிதான் இவர் பகவல் சிங்கையும் தன் வசப்படுத்தி உள்ளார். பகவல் சிங்குக்கும் இவருக்கு பேஸ்புக் மூலமே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி என்ற பெயரில் இவர் தொடங்கிய பேஸ்புக் பக்கத்தில் பல ஹைக்கூ கவிதைகளை பதிவிட்டுள்ளார்.

    அதில் மாந்திரீகம் மூலம் செல்வம் பெருக வழிகள் இருப்பதாக கூறியுள்ளார். இதனை பார்த்துதான் பகவல் சிங், முகமது ஷபியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    அதன்பின்பு இருவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர். அதன்பின்புதான் பெண்களை வைத்து நிர்வாண பூஜை, நரபலி அளவுக்கு சென்றுள்ளனர்.

    இதன் ஒரு கட்டமாக பகவல் சிங்கின் கண்முன்பே அவரது மனைவியுடன் முகமது ஷபி உல்லாசமாக இருந்துள்ளார். இதுவும் செல்வம் தரும் பூஜையின் ஒரு பகுதி என பகவல் சிங்கிடம் கூறியுள்ளார்.

    முகமது ஷபி எர்ணாகுளம் பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இதன் அருகே கல்லூரி மாணவிகள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கி இருக்கும் சில மாணவிகள் அடிக்கடி முகமது ஷபியின் ஓட்டலுக்கு வந்து சென்றுள்ளனர். இவர்களில் 2 பேரிடம் முகமது ஷபிக்கு அதிக நெருக்கம் இருந்ததை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

    அந்த மாணவிகளை முகமது ஷபி அடிக்கடி நரபலி நடந்த பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த மாணவிகளை அவர் செக்ஸ் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் நரபலி சம்பவம் வெளியான பின்னர் இதுபோன்று வேறு யாரும் நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதில் எர்ணாகுளம் மட்டுமின்றி கேரளா முழுவதும் இந்த காலகட்டத்தில் சுமார் 26 பெண்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவர்களில் யாராவது நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதற்காக கைதான 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர். இதில் அவர்களை 12 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இந்த 12 நாட்களிலும் போலீசார் முகமது ஷபி மற்றும் லைலா, பகவல் சிங் ஆகிய 3 பேரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். அப்போது நரபலி சம்பவம் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • கேரளாவில் மேலும் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
    • கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின்(வயது 50). லாட்டரி வியாபாரி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து காலடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா(54), எர்ணாகுளம் நகருக்கு வேலை தேடி வந்தார். பின்னர் பொண்ணுரணி பகுதியில் தங்கியிருந்து, லாட்டரி வியாபாரம் செய்து வந்தார். அவர், கடந்த 26-ந் தேதி முதல் காணாமல் போனார். இதுகுறித்து கடவந்தரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    மர்மமான முறையில் 2 பெண்கள் அடுத்தடுத்து மாயமானது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பத்மாவின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். இதில் பெரும்பாவூரை சேர்ந்த முகமது ஷபி என்ற ஷிகாப்பு (48) என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதாவது, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள இலந்தூர் பகுதியை சேர்ந்த வைத்தியர் பகவந்த் (55), அவரது மனைவி லைலா (52) ஆகியோர் செல்வந்தராகும் ஆசையில் பத்மா, ரோஸ்லின் ஆகியோரை கடத்தி சென்று நரபலி கொடுத்தது தெரியவந்தது.

    மேலும் பரிகார பூஜை என்ற பெயரில் உடல்களை துண்டு துண்டாக வெட்டி மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதுடன், ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. மீதமுள்ள உடல் பாகங்களை குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து பகவந்த், லைலா மற்றும் முகமது ஷபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எர்ணாகுளம் முதல் வகுப்பு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து முகமது ஷபி மற்றும் பகவத்சிங் ஆகியோர் காக்கநாடு மாவட்ட சிறைச்சாலையிலும், லைலா அதே பகுதியில் உள்ள பெண்கள் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் கோர்ட்டில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் கேரளாவில் மேலும் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கு காரணம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் உறவினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கலக்கத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் காணாமல் போனவர்களின் முழு பட்டியலை தீவிரமாக சேகரித்து வருவதாகவும், நரபலி சம்பவம் தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜூ தெரிவித்தார்.

    கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள டி.ஜி.பி. அனில் காந்த் கூறியதாவது:-

    இந்த வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொச்சி மாநகராட்சி துணை கமிஷனர் எஸ்.சசிதரன் தலைவராகவும், பெரும்பாவூர் துணை சூப்பிரண்டு அனூஜ் பாலிவால் முக்கிய விசாரணை அதிகாரியாகவும் செயல்படுவார்கள். இவர்களுக்கு உதவியாக எர்ணாகுளம் மத்திய போலீஸ் கமிஷனர் சி.ஜெயக்குமார், கடவந்தரா போலீ்ஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பைஜூ ஜோஸ், காலடி இன்ஸ்பெக்டர் ஆகியோர் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நரபலி கொடுத்த 2 பெண்களையும் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து உள்ளனர்.
    • வேறு பெண்களை கடத்தி நரபலி கொடுத்துள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (வயது 51). இன்னொருவர் கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி (50). இவர்கள் இருவரையும் நரபலி கொடுத்ததாக மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களையும் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து உள்ளனர். அங்கு போலீசார் தோண்டி பார்த்தபோது பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக இருந்தது. இதுபற்றி கேட்டபோது பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டதாக கூறியிருக்கிறார்கள். மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 

    இவர்கள் இதுபோல வேறு பெண்களை கடத்தி நரபலி கொடுத்துள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் மேலும் பல தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பதால் போலீஸ் காவலுக்கு அனுப்பும்படி மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பகவல் சிங், லைலா, முகமது ஷபி ஆகியோரை 12 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

    2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    • பகவல் சிங்கை எப்படியும் செல்வந்தர் ஆக்கி விடுவேன் என்று முகமது ஷபி அவரிடம் உறுதியாக கூறியுள்ளார்.
    • லைலாவுக்கு கணவரை விட மந்திரவாதி முகமது ஷபியின் நெருக்கம் பிடித்து போனது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பத்தில் போலீசார் மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்துள்ளனர்.

    2 பெண்களை கொலை செய்த மந்திரவாதி முகமது ஷபி வேறு யாரையும் இதற்கு முன்பு கொலை செய்துள்ளாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் முகமது ஷபியும், லைலாவும் சேர்ந்து லைலாவின் கணவர் பகவல் சிங்கை கொலை செய்ய ரகசிய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் இன்று கூறியதாவது:-

    பகவல் சிங்கை எப்படியும் செல்வந்தர் ஆக்கி விடுவேன் என்று முகமது ஷபி அவரிடம் உறுதியாக கூறியுள்ளார். இதனை பகவல் சிங் முழுமையாக நம்பி, முகமது ஷபி கூறிய அனைத்தையும் செய்ய தயாராகி உள்ளார்.

    அதன்படி பகவல் சிங்கின் மனைவி லைலாவுடன் கணவர் கண்முன்பே முகமது ஷபி உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் லைலாவுக்கு கணவரை விட மந்திரவாதி முகமது ஷபியின் நெருக்கம் பிடித்து போனது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் பகவல் சிங்கை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கான நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தபோதுதான் அவர்கள் நரபலி வழக்கில் சிக்கி கொண்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர். முகமது ஷபி மற்றும் லைலாவை காவலில் எடுத்து விசாரிக்கும்போது இது தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அனைத்தும் மூட நம்பிக்கைகள் தான்.
    • மூட நம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், பெண்களும் தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம் எலந்தூர் கிராமத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் உட்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

    அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்து விட்ட இந்த காலத்தில், இந்த கொடுமை அரங்கேற்றப்பட்டிருப்பதை பார்க்கும் போது மனித குலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.

    கேரளத்தை கடந்து நரபலி உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில் தாத்தாவின் உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக 6 மாத பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து நரபலி கொடுத்த கொடுமை நடந்தது. நரபலி மட்டுமே மூட நம்பிக்கை அல்ல. பில்லி சூனியம் வைத்தல், பேய் ஓட்டுதல் போன்ற செயல்களும் அந்த வகையை சேர்ந்தவை தான்.

    அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத அனைத்தும் மூட நம்பிக்கைகள் தான். மூட நம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களும், பெண்களும் தான். சமூக வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயனளிக்காத, பிற்போக்குத்தனத்தை திணிப்பதற்கு மட்டுமே பயன்படும் மூட நம்பிக்கை தமிழ்நாட்டில் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்.

    அதற்காக தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை வரும் 17-ந் தேதி தொடங்கவுள்ள சட்டப் பேரவை கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்; அதற்கு கால அவகாசம் இல்லை என்றால், கூட்டத்தொடருக்கு பிறகு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். மூட நம்பிக்கையை நாடு தழுவிய அளவிலும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் மத்திய அரசும் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முகமது ஷபி பேஸ்புக் மூலம் பலரை நண்பர்களாக்கி உள்ளார்.
    • பேஸ்புக்கில் பூக்களின் படத்தை வைத்து இதுபோல மகிழ்ச்சியாக இருக்கவும், செல்வம் கொழிக்கவும் பூஜைகள் செய்து தருவேன் என பதிவிட்டு உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நரபலி கொடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (வயது 51). இன்னொருவர் கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி (50).

    இவர்கள் இருவரையும் நரபலி கொடுத்ததாக முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பத்மா காணாமல் போன பகுதியில் இருந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆன பகுதி வரையிலான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததின் மூலமே முகமது ஷபி மற்றும் பகவல் சிங், லைலா ஆகியோர் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

    கைதானவர்கள் பற்றி போலீசார் தெரிவித்த தகவல்கள் நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது. அதன்விபரம் வருமாறு:-

    நரபலி கொடுத்த 2 பெண்களையும் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து உள்ளனர். அங்கு தோண்டி பார்த்த போது பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக இருந்தது. இதுபற்றி கேட்டபோது பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டதாக கூறினர்.

    மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது எப்படி சாத்தியமானது என்று கேட்டபோது, நரபலிக்கு அழைத்து வந்த பெண்களை ஆபாச சினிமாவில் நடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி அழைத்து வந்துள்ளனர்.

    இதனால் அவர்களை நிர்வாணமாக இருக்க வேண்டும் என்றதும் அவர்களும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் நிர்வாணமாக படுத்துள்ளனர். அதன்பின்பு அவர்களின் கை, கால்களை கட்டி நிர்வாண பூஜை நடத்தி உள்ளனர்.

    இந்த பூஜையை மந்திரவாதி முகமது ஷபி நடத்தி உள்ளார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியே இவர்தான். முகமது ஷபி, பெண்களை வசியம் செய்வதில் கில்லாடி. இவர் மீது பல பாலியல் வழக்குகள் உள்ளது.

    அதில் 70 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் உண்டு. அந்த வழக்கில் இருந்து இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்துள்ளார். பெண்களை அழைத்து வந்து அவர்களை சித்ரவதை செய்வதில் முகமது ஷபி ஆர்வம் கொண்டவர்.

    இவர் மீதான வழக்குகளை ஆய்வு செய்த போது இவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் இது போன்ற சித்ரவதைக்கு ஆளாகி உள்ளனர். அதில் பெண்களின் மர்ம உறுப்பை அறுப்பது, மார்பகங்களை வெட்டி எடுப்பது போன்ற கொடுமைகளை செய்துள்ளார்.

    அதுபோல பத்மா, ரோஸ்லி இருவரின் மர்ம உறுப்புகளை சேதப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். மேலும் முகமது ஷபி இதுபோல வேறு பெண்களை கடத்தி நரபலி கொடுத்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்.

    தற்போது கைதான 3 பேரும் 14 நாள் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

    அப்போது இந்த வழக்கு தொடர்பான மேலும் பல உண்மைகள் தெரியவரும் என நம்புகிறோம்,

    முகமது ஷபி பேஸ்புக் மூலம் பலரை நண்பர்களாக்கி உள்ளார். பேஸ்புக்கில் பூக்களின் படத்தை வைத்து இதுபோல மகிழ்ச்சியாக இருக்கவும், செல்வம் கொழிக்கவும் பூஜைகள் செய்து தருவேன் என பதிவிட்டு உள்ளார். நரபலியில் ஈடுபட்டதாக கைதான பகவல் சிங் அவரது மனைவி லைலா இருவரும் பேஸ்புக் மூலமாகவே முகமது ஷபியுடன் பழக்கம் ஆகி உள்ளனர். எனவே முகமது ஷபியின் பேஸ்புக் தகவல்கள் அனைத்தையும் கைப்பற்றி அதனை ஆய்வு செய்ய உள்ளோம்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ் உள்பட போலீஸ் உயர்அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதனிடையே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    • பெண்களை நரபலி கொடுத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என கூறினார். இதற்கான பெண்ணை தானே ஏற்பாடு செய்வதாகவும் முகமது ஷபி கூறினார்.
    • கொலைக்கு பகவந்தின் மனைவி லைலாவும் உடந்தையாக இருந்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் செல்வம் பெருக 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    கேரளாவின் எர்ணாகுளத்தை அடுத்த காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின் (வயது 50). லாட்டரி சீட்டு விற்று வந்தார். கடந்த ஜூன் மாதம் லாட்டரி சீட்டு விற்க வெளியே சென்ற அவர் அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதுபற்றி உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஸ்லினை தேடி வந்தனர்.

    இதுபோல தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (52) என்ற பெண்ணும் கேரளாவில் தங்கி இருந்து லாட்டரி சீட்டு விற்று வந்தார். அவரும் கடந்த மாதம் திடீரென மாயமானார்.

    இது பற்றி அவரது மகன் எர்ணாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து பத்மாவை தேடி வந்தனர்.

    இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பத்மாவின் செல்போன் எண்ணை பெற்று கடைசியாக அவர் எந்த பகுதியில் இருந்து பேசினார் என்பதை ஆய்வு செய்தனர். இதில் அவரது செல்போன், பத்தினம்திட்டாவை அடுத்த திருவல்லா பகுதியில் இருந்து பேசப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். இதில் பத்மாவை முகமது ஷபி என்ற நபர் அழைத்து செல்வது பதிவாகி இருந்தது.

    போலீசார் முகமது ஷபியை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்தான் பத்மாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பத்மா கொலை செய்யப்பட்டதும், அவரது உடலை திருவல்லாவில் உள்ள பகவந்த் என்ற வைத்தியர் வீட்டின் பின்பகுதியில் புதைத்திருப்பதாகவும் கூறினார்.

    போலீசார் அங்கு சென்று பத்மாவின் உடலை தோண்டி எடுத்தனர். அந்த உடல் அருகே இன்னொரு உடலும் புதைக்கப்பட்டிருந்தது.

    அந்த உடல் யாருடையது என விசாரித்தபோது அது எர்ணாகுளத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாயமான ரோஸ்லின் உடல் என தெரியவந்தது.

    ரோஸ்லின், பத்மா இருவரையும் கொலை செய்தது ஏன்? என்பது பற்றி முகமது ஷபி, பகவந்த் இருவரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். அதில் சித்த வைத்திய தொழில் செய்து வந்த பகவந்த்துக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் அவர் செல்வம் பெருக என்ன செய்யலாம் என நண்பரும், மந்திரவாதியுமான முகமது ஷபியிடம் ஆலோசனை கேட்டார்.

    அவர் பெண்களை நரபலி கொடுத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என கூறினார். இதற்கான பெண்ணை தானே ஏற்பாடு செய்வதாகவும் முகமது ஷபி கூறினார்.

    இதையடுத்து முகமது ஷபி, எர்ணாகுளத்தில் இருந்து ரோஸ்லினை திருவல்லா அழைத்து வந்தார். பண ஆசை காட்டியும், சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் கூறி அழைத்து வந்த அவரை பகவந்த் வீட்டில் வைத்து நரபலி கொடுத்துள்ளனர்.

    முதலில் அவரை நிர்வாணமாக படுக்க வைத்து பின்னர் அவரது தலையில் சுத்தியலால் அடித்தும், மார்பகத்தை அறுத்தும் உள்ளனர். அவர் இறந்த பின்பு உடலை 56 துண்டுகளாக வெட்டி வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

    அதன்பின்பு தர்மபுரி பத்மாவையும் இதே போல அழைத்து வந்து அவரையும் 5 துண்டுகளாக வெட்டி நரபலி கொடுத்துள்ளனர்.

    இந்த கொலைக்கு பகவந்தின் மனைவி லைலாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

    கொலை நடந்த பகுதியில் இன்று போலீசார் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொலையுண்ட பெண்களின் உடல் பாகங்கள் பாதி தின்ற நிலையில் காணப்பட்டது. இது பற்றி போலீசார் கைதான 3 பேரிடமும் விசாரித்தனர்.

    அப்போது பகவந்த்தின் மனைவி லைலா, நரபலி முடிந்ததும் கொலையுண்ட பெண்களின் உடலை தின்றதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இந்த காலத்திலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்களே என்று வருந்தினர்.

    இக்கொலை சம்பவம் பற்றி எர்ணாகுளம் போலீஸ் டி.ஐ.ஜி. நிஷாந்தினி கூறியதாவது:-

    கேரளாவில் பெண்களை நரபலி கொடுத்ததாக முகமது ஷபி, பகவந்த் அவரது மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டின் பின்புறம் கொலையுண்ட பெண்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். அழுகிய நிலையில் இருந்ததால் உடல்கள் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.



    மேலும் உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனையும் நடத்தப்படுகிறது.

    நரபலி பூஜை என்ற பெயரில் மேலும் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதற்காக அந்த பகுதியில் மாயமான பெண்களின் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இதற்கிடையே இந்த வழக்கில் கைதான 3 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம், என்றார்.

    ×