search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைக்கடை"

    • யோகேஷ் ஜெயினின் உடன் பிறந்த தம்பி வினோத் ஜெயின் என்பவரே நகைகளை திருடியது தெரிய வந்தது.
    • தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த வினோத்தை யானை கவுனி போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சவுகார்பேட்டை பெரிய நாயக்கன் தெருவில் யோகேஷ் ஜெயின் என்பவரது நகைக்கடையில் இருந்து கடந்த 3-ந் தேதி ஒரு கிலோ தங்க கட்டி 15 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனது. இது தொடர்பாக யானை கவுனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் யோகேஷ் ஜெயினின் உடன் பிறந்த தம்பி வினோத் ஜெயின் என்பவரே நகைகளை திருடியது தெரிய வந்தது. அவர் தப்பி ஓடி தலைமறைவாக இருந்தார். இதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த வினோத்தை யானை கவுனி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம், 1½ லட்சம் ரொக்கம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    • கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.
    • நகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய கடை உரிமையாளர், பருவமழை நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை வெளுத்து வாங்கியது. இதில், பெங்களூருவில் உள்ள சாலைகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதில், அங்கிருந்த நகைக்கடை ஒன்றில் புகுந்த மழைநீர் அங்கிருந்த தங்க நகைகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சென்றன. இதனால், நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    மேலும், கடையில் இருந்த சுமார் 2.50 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், மரச்சாமான்களும் அடித்து செல்லப்பட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய கடை உரிமையாளர், பருவமழை நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

    • ஏராளமனோரிடம் பல கோடி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
    • 50-க்கும் மேற்பட்டோர் திடீரென பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போரூர்:

    சென்னை முகப்பேர் பகுதியில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நகைக்கடை மற்றும் ஏ.ஆர்.டி. டிரஸ்டட் பிராப்பிட் உள்ளிட்ட பெயர்களில் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

    இதனை சகோதரர்களான ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.

    இவர்கள் கவர்ச்சி கரமான பரிசு பொருட்களுடன் கூடிய தீபாவளி சீட்டு, நகைச்சீட்டு, ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.1½ லட்சத்துக்கு நகை வாங்கி கொள்ளலாம், முதலீடு செய்யும் தொகைக்கு வாரம் தோறும் 3 சதவீதம் வட்டி, ரூ.10 ஆயிரம் செலுத்தினால் 12 மாதத்தில் ரூ.2.40 லட்சத்துக்கு நகை வாங்கிக் கொள்ளலாம், வட்டியில்லாத நகைக்கடன், குலுக்கல் சீட்டு உள்ளிட்ட கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

    இதை நம்பிய பொது மக்கள் பலர் தங்களது பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். மேலும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களும் வாடிக்கையாளர்களிடம் பேசி பணத்தை முதலீடு செய்ய வைத்தால் அவர்களுக்கு ஊக்கத் தொகையும் கொடுத்து உற்சாகப்படுத்தி உள்ளனர்.

    இதனால் அங்கு நகைக்கடை மற்றும் நிறுவனங்களில் வேலைபார்த்த ஊழியர்களும் ஏராளமானோரை பணத்தை முதலீடு செய்ய வைத்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த நகைக்கடை மற்றும் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை முதலீடாக பெற்றது.

    இதையடுத்து கடந்த மார்ச் மாதம் திடீரென ஏ.ஆர்.டி. நகைக்கடை மற்றும் நிறுவனத்தை மூடிவிட்டு சகோதரர்களான ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் தலைமைறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நகைக்கடை தொடங்கிய 2 ஆண்டுகளில் சகோதரர்கள் ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    அவர்கள் மீது இதுவரை 925 பேர் மோசடி புகார் அளித்து உள்ளனர். மேலும் தினமும் 5 பேர் வரை ஏ.ஆர்.டி.நகைக்கடை மற்றும் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து இழந்ததாக புகார் தெரிவித்து வருகிறார்கள்.

    எனவே சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்து இழந்து இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இது வரை ரூ.13 கோடி மட்டும் மோசடி நடந்து இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் மேலும் பல கோடி மோசடி நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, 'இதுவரை ஏ.ஆர்.டி. நிறுவன உரிமையாளர்கள் மீது 925 புகார்கள் வந்துள்ளன. மேலும் தினசரி 5 பேர் வரை தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். இதுவரை ரூ.13 கோடி மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது.

    தலைமறைவான மோசடி சகோதரர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் ஏராளமனோரிடம் பல கோடி மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களிடம் பணத்தை இழந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    இதற்கிடையே பணத்தை பறிகொடுத்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    கடந்த மாதம் ஏ.ஆர்.டி.நகைக்கடை, அதன் உரிமையாளர்கள் வீடு, அலுவலகம் என 5 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று இரவு வேலை முடிந்ததும் சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் புறப்பட்டுள்ளார்.
    • அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 38). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வேலை முடிந்ததும் சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் புறப்பட்டுள்ளார். பொற்றையடி அருகே உள்ள இலங்காமணிபுரம் பகுதியில் அவர் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் கீழே விழுந்ததில் தலை உள்ளிட்ட இடங்களில் சுந்தரத்துக்கு காயம் ஏற்பட்டது.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே சுந்தரம் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுந்தரம் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (55). இவர் நேற்று இரவு வடலிவிளை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த ராஜாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பிடிக்க அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • ஊழியர் முருகன் வேலை முடிந்ததும், வளையல் பிரிவில் நகைகளை அடுக்கி வைக்கும் சமயத்தில் புதிய கவரிங் வளையல்களை அங்கு வைத்துவிட்டு, அதற்கு பதில் தங்க வளையல்கள் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.
    • போலீசார், முருகனை பிடித்து சென்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது 6 வளையல்கள் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அதனை ஊழியர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவைகள் அனைத்தும் கவரிங் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தங்க வளையல்களை திருடிவிட்டு அதற்கு பதிலாக கவரிங் நகை வைக்கப்பட்டது தெரியவந்தது. இந்த தங்க வளையல்களின் எடை 10 பவுன் ஆகும். அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.

    இதுதொடர்பாக அந்த நகை கடையின் மேலாளர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார், இந்த நூதன திருட்டு குறித்து முதற்கட்டமாக நகைக்கடையின் தங்க வளையல் பிரிவில் வேலை பார்த்தவர் யார்? என விசாரணை நடத்தினர். அதில், சேலம் சின்னபுதூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 40) என்பவர் தங்க வளையல் பிரிவில் ஊழியராக வேலைபார்த்து வருவது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம், தங்க வளையல் எங்கே? என கேட்டபோது தனக்கு இதுபற்றி தெரியாது என கூறினார். இதனை தொடர்ந்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கணினி மூலம் போலீசார் பார்த்தனர். அதில், ஊழியர் முருகன் வேலை முடிந்ததும், வளையல் பிரிவில் நகைகளை அடுக்கி வைக்கும் சமயத்தில் புதிய கவரிங் வளையல்கள் அங்கு வைத்துவிட்டு, அதற்கு பதில் தங்க வளையல்கள் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார், முருகனை பிடித்து சென்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன.

    இது குறித்து போலீசார் கூறியதாவது-

    நாங்கள், நகைக்கடையில் பணியாற்றிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினோம். இதில் ஊழியர் முருகன் தினமும் பணிக்கு வருவதால் முதலில் எங்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. இதையடுத்து நாங்கள், அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் நகைகளை முருகன் திருடுவது காட்டி கொடுத்தது.

    6 புதிய கவரிங் வளையல்கள் தயார் செய்து, அவற்றை கொண்டு வந்து வைத்துவிட்டு, 6 தங்க வளையல்கள் எடுத்துச் சென்றுள்ளார். திடீரென வேலையை விட்டு நின்று விட்டால், நகைகளை திருடியது நான் தான் என தெரிந்து விடும் என்று கருதி, தன் மீது சந்தேகம் வந்து விடக் கூடாது எனபதற்காக, விடுப்பு எடுக்காமல் தினமும் வேலை வந்துள்ளார்.

    நகைகளை மீட்பதற்காக நாங்கள் முருகனின் வீட்டில் சோதனை நடத்தினோம். திருடப்பட்ட வளையல்கள் அங்கு இல்லை. அவற்றை முருகன் விற்று பணத்தை செலவழித்துள்ளார்.

    இந்த நகை திருட்டுக்கு ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். கூட்டு சதி செய்து, இந்த நகைகள் திருடப்பட்டு இருக்கிறது. சக ஊழியர்கள் மற்றும் முருகன் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இதுபோல் போலி கவரிங் நகை வைத்து விட்டு தங்க நகைகள் திருடப்பட்டு இருக்கிறதா? என கண்டறிய மேலாளரிடம், அனைத்து நகைகளையும் பரிசோதிக்கும்படி உத்தரவிட்டுள்ளோம்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    • சிறிது நேரம் கழித்து பணம் மற்றும் நகைகளை காணாததை கண்ட கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உரிமை யாளர் ராமை யனுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து கருணாநிதி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த இரணியல் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக் களை ஆய்வு செய்தனர்.
    • அப்போது சி.சி.டி.வி.யில் கொள்ளையர்கள் 2 பேர் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.

    இரணியல், அக்.13-

    திங்கள்நகர் அடுத்த பூசாஸ்தான்விளையை சேர்ந்தவர் ராமையன் (வயது 65).

    இவர் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவில் அருகில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி (55) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று கருணாநிதி கடையில் இருக்கும் போது 2 வாலிபர்கள் வந்து ஒருவர் ராசிக்கல் கேட்டுள்ளார்.

    கருணாநிதி எடுத்துக் கொடுக்கும் போது மற்றொரு வாலிபர் கல்லாவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்ப ணம் மற்றும் 16 கிராம் தங்க நகைகளையும் எடுத் துள்ளார். பின்னர் அவர்கள் வாங்கிய ராசிக்கல்லுக்கான பணத்தை கொடுத்து விட்டு வாலிபர்கள் சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து பணம் மற்றும் நகைகளை காணாததை கண்ட கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உரிமை யாளர் ராமை யனுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து கருணாநிதி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த இரணியல் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக் களை ஆய்வு செய்தனர்.

    அப்போது சி.சி.டி.வி.யில் கொள்ளையர்கள் 2 பேர் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.

    • நகைக்கடை அதிபரிடம் 87 பவுன் நகை திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    தேனி நகர் ஜெகநாதன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். வியாபார நிமித்தமாக செந்தில்குமார் 87 பவுன் நகையுடன் காரில் மதுரைக்கு வந்தார். அரசரடி பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டலில் செந்தில்குமார் சாப்பிட சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர் கார் கதவை திறந்து அதில் இருந்த 87 பவுன் நகையை நைசாக திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினான். சிறிது நேரத்தில் ஓட்டலில் இருந்து வந்த செந்தில்குமார் கார் கதவு திறந்து கிடப்பதையும், நகை திருடு போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அதில், காரில் இருந்த 87 பவுன் நகையை எனது கடையில் வேலை பார்க்கும் மேலாளர், டிரைவர் திருடியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலையில் கடையை திறக்க வந்தபோது முன்பக்க சட்டர் உடைக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தபோது 75 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    குழித்துறை:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையை அடுத்த சி.எஸ்.ஐ. வணிக வளாகத்தில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

    முன்னாள் வர்த்தக சங்க செயலாளர் ராஜா செல்வின் ராஜ் என்பவர் இந்தக்கடையை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் அவர் கடையை அடைத்துச் சென்றார். இன்று காலையில் கடையை திறக்க வந்தபோது முன்பக்க சட்டர் உடைக்கப்பட்டிருந்தது.

    இதனைக்கண்டு செல்வின்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என கருதிய அவர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தபோது 75 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மொத்தம் 600 கிராம் எடையுள்ள கொலுசு, கம்மல், மாலை, மோதிரம், செயின் ஒட்டியாணம் போன்றவை கொள்ளை போய் இருப்பதாக ராஜா செல்வின்ராஜ் தெரிவித்தார்.

    இதுகுறித்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். அப்பகுதியில் கடைகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த கடையில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை திருட்டு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×