search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோவாளை"

    • உடல்களில் காயங்கள் இருப்பதாக புகார்
    • ஆரல்வாய்மொழி போலீசாருக்கும் பூதப்பாண்டி வனத்துறையினருக்கும் தகவல்

    கன்னியாகுமரி:

    தோவாளை வில்லிசேரி குளத்தின் அருகே, நாகர்கோவிலைச் சேர்ந்த நல்லதம்பி என்பவருக்கு தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தில் அய்யாப்பிள்ளை என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். சுமார் 22 ஆடுகளை அவர் பராமரித்து வருகிறார்.

    தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் அய்யாபிள்ளை, மாலையில் அவற்றை தோட்டத்தில் அடைத்து விடுவார். நேற்று மாலையும் அவர் ஆடுகளை அடைத்து விட்டு, தனது வீட்டுக்குச் சென்று விட்டார்.

    இன்று காலை அவர் தோட்டத்திற்கு வந்தபோது, 6 ஆடுகள் மர்மமாக இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்து கிடந்த ஆடுகளின் உடல்களில் காயங்கள் காணப்பட்டன. ஏதோ மிருகம் கடித்தது போன்று அந்தக் காயங்கள் இருப்பதாக அய்யாப்பிள்ளை தெரிவித்தார்.

    இதுபற்றி ஆரல்வாய் மொழி போலீசாருக்கும் பூதப்பாண்டி வனத்துறை யினருக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • வருகிற 27-ந் தேதி உறியடி திருவிழா
    • பத்தாம் திருவிழா ஆராட்டு நிகழ்ச்சியோடு முடிவடைகிறது.

    கன்னியாகுமரி:

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தோவாளை கிருஷ்ணசுவாமி கோவிலில் கொடியேற்று விழா நடை பெற்றது.

    வருகிற 27-ந் தேதி உறியடித் திருவிழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் நேற்று காலையில் கணபதி ஹோமம், கலச பூஜை, அலங்காரம் பல்லக்கில் வீதி உலா வருதல், கொடி பூசை திரு கொடியேற்று விழா நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் அறநிலைய துறை கண்கா ணிப்பாளர் ஆனந்தன் ஸ்ரீகாரியம் சேர்மராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், பஞ்சாயத்து தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணு, பக்தர் சங்க நிர்வாகிகள் கண்ணன், சிதம்பரதாணு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    7-வது திருவிழா அன்று விநாயகப் பெருமான், முருகப்பெருமான், அம்மை யப்பர் கிருஷ்ண சாமி வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறும். 9-ம் திருவிழா அன்று உறியடி மகா உற்சவம் நடைபெறும். பத்தாம் திருவிழா ஆராட்டு நிகழ்ச்சியோடு முடிவடைகிறது.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
    • பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை

    நாகர்கோவில்:

    தோவாளை ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், மரியவளன் ஆகியோர் இன்று அதிகாலை அங்கு சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டி ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வருகிற 12-ந் தேதி நடக்கிறது
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் திருமலை முருகன் பக்தர்கள் சங்கம் செய்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 53-வது மலர்முழுக்கு விழா வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.

    விழாவை முன்னிட்டு அன்றைய தினம் காக்கும் விநாயகர் கோவில் கணபதி வேள்வியும் சுப்பிர மணிய சுவாமிக்கு திருநீர் முழுக்கு நடக்கிறது. தொடர்ந்து பின்பு காக்கும் விநாயகர் கோவிலில் இருந்து அலங்கார யானை மீது பால்குடம் மற்றும் பால்குடம் ஏந்தி பக்தர்கள் மேளதாள பரவச பஜனைகளுடன் ஊர்வலம் செல்கிறது.

    தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன் முன்னிலையில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.அதன் பின்பு பகல் பால், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் முழுக்குகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

    இரவு மலர் முழுக்கு விழா தொடங்கி சிறப்பு தீபாராதனை அதன்பிறகு தோகைமயில் முருகப் பெருமானாக பக்தர்களுக்கு காட்சியளித்து பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா வின் சிறப்பு நிகழ்ச்சியாக குமரேசர் கலையரங்கத்தில் தோவாளை பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா அரசு வக்கீல் பழனி தொடங்கி வைக்கிறார்.

    மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் பஞ்சாயத்து தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலையில் திரைப்படம் மெல்லிசை நடைபெறுகிறது. மலர் முழுக்கு விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் திருமலை முருகன் பக்தர்கள் சங்கம் செய்து வருகிறது.

    • நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்

    நாகர்கோவில்:

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் அய்யப்பன், கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் இன்று நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தோவாளை தாலுகா வீரமார்த்தாண்டன்புரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட தோவாளை ஊராட்சியில் உள்ள வில்வச்சேரி குளத்தில் இருந்து மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண், குறுமண் எடுத்திட அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வேவிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளார்.
    • கொரோனா காலத்திற்கு பிறகு 16321 பாசஞ்சர் ரெயில் விரைவு ரெயிலாக மாற்றப்பட்டு பெயரளவில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக உள்ளதே தவிர வேறு எந்த வசதிகளும் இல்லை.

    கன்னியாகுமரி:


    மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே குமரி மாவட்டம் வந்தார். மார்த்தாண்டம் சுவாமியார் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


    பின்னர் நாகர்கோவில் அருகே கீழ குஞ்சன்விளை யில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து வடசேரியில் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். பாரதிய ஜனதா மகளிரணி பொறுப்பாளர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் கன்னியாகுமரி யில் நடந்த 75-வது சுதந்திர தினவிழா புகைப்படக்கண்காட் சியிலும் கலந்து கொண்டார். மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வேவிடம் தளவாய்சுந்த ரம் எம்.எல்.ஏ. அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-


    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் கோயம்புத்தூருக்கு 16321 எண்ணுள்ள பாசஞ்சர் ரெயில் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு தோவாளை, ஆரல்வாய் மொழி ரெயில் நிலையங் களில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வள்ளியூர், திருநெல்வேலி, மதுரை வழி யாக கோயம்புத்தூருக்கு இரவு 7 மணிக்கு சென்ற டைந்து வருகிறது.

    கொரோனா காலத்திற்கு பிறகு இந்த பாசஞ்சர் ரெயில் விரைவு ரெயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதில் விரைவு ரெயில் வண்டிக ளுக்குரிய எந்த வசதிகளும், பயணிகளுக்கு செய்யாத நிலையே காணப்படுகிறது. பெயரளவில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக உள்ளதே தவிர வேறு எந்த வசதிகளும் இல்லை.


    மேலும் ஏற்கனவே நின்று சென்ற தோவாளை, ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களில் நிற்காமல் சென்று வருகிறது. இதனால் இப்ப குதியிலிருந்தும், சுற்று வட்டார கிராமங்க ளிலிருந்தும் திருநெல்வேலி, கோவில் பட்டி பகுதிகளுக்கு அரசு பணி மற்றும் தனியார் பணிக்கு செல்பவர்கள், உயர்கல்வி படிக்க கல்லூரி செல்லும் மாணவர்கள் பிற தொழில் மற்றும் வியாபாரத் திற்கு செல்பவர்கள், திருக் கோவில்களுக்கு செல்பவர் கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    மறுமார்க்கமாக கோவை யிலிருந்து 16322 எண்ணுள்ள ரெயில் காலை 8 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவி லுக்கு இரவு 8.10 மணிக்கு வருகிறது. ஆரல்வாய்மொழி, தோவாளை ரெயில் நிலை யங்களில் இந்த ரெயில் நிற் காமல் செல்வதால், மேற் கூறியபடி பணிக்கு சென்ற வர்கள் இந்த ரெயில் நிலை யங்களில் இறங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் எந்த வசதிகளும் செய்யாமல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்குரிய கட்டணம் இந்த ரெயிலில் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலை பயணிகளுக்கு வருத் தத்தை ஏற்படுத்துகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த ரெயில் தோவாளை மற்றும் ஆரல் வாய்மொழி ரெயில் நிலையங்களில் நின்று செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

    ×