search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் - கோவை செல்லும் ரெயிலை தோவாளை, ஆரல்வாய்மொழியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் : தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.
    X

    நாகர்கோவில் - கோவை செல்லும் ரெயிலை தோவாளை, ஆரல்வாய்மொழியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் : தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

    • மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வேவிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளார்.
    • கொரோனா காலத்திற்கு பிறகு 16321 பாசஞ்சர் ரெயில் விரைவு ரெயிலாக மாற்றப்பட்டு பெயரளவில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக உள்ளதே தவிர வேறு எந்த வசதிகளும் இல்லை.

    கன்னியாகுமரி:


    மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே குமரி மாவட்டம் வந்தார். மார்த்தாண்டம் சுவாமியார் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


    பின்னர் நாகர்கோவில் அருகே கீழ குஞ்சன்விளை யில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து வடசேரியில் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். பாரதிய ஜனதா மகளிரணி பொறுப்பாளர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் கன்னியாகுமரி யில் நடந்த 75-வது சுதந்திர தினவிழா புகைப்படக்கண்காட் சியிலும் கலந்து கொண்டார். மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வேவிடம் தளவாய்சுந்த ரம் எம்.எல்.ஏ. அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-


    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் கோயம்புத்தூருக்கு 16321 எண்ணுள்ள பாசஞ்சர் ரெயில் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு தோவாளை, ஆரல்வாய் மொழி ரெயில் நிலையங் களில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வள்ளியூர், திருநெல்வேலி, மதுரை வழி யாக கோயம்புத்தூருக்கு இரவு 7 மணிக்கு சென்ற டைந்து வருகிறது.

    கொரோனா காலத்திற்கு பிறகு இந்த பாசஞ்சர் ரெயில் விரைவு ரெயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதில் விரைவு ரெயில் வண்டிக ளுக்குரிய எந்த வசதிகளும், பயணிகளுக்கு செய்யாத நிலையே காணப்படுகிறது. பெயரளவில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக உள்ளதே தவிர வேறு எந்த வசதிகளும் இல்லை.


    மேலும் ஏற்கனவே நின்று சென்ற தோவாளை, ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களில் நிற்காமல் சென்று வருகிறது. இதனால் இப்ப குதியிலிருந்தும், சுற்று வட்டார கிராமங்க ளிலிருந்தும் திருநெல்வேலி, கோவில் பட்டி பகுதிகளுக்கு அரசு பணி மற்றும் தனியார் பணிக்கு செல்பவர்கள், உயர்கல்வி படிக்க கல்லூரி செல்லும் மாணவர்கள் பிற தொழில் மற்றும் வியாபாரத் திற்கு செல்பவர்கள், திருக் கோவில்களுக்கு செல்பவர் கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    மறுமார்க்கமாக கோவை யிலிருந்து 16322 எண்ணுள்ள ரெயில் காலை 8 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவி லுக்கு இரவு 8.10 மணிக்கு வருகிறது. ஆரல்வாய்மொழி, தோவாளை ரெயில் நிலை யங்களில் இந்த ரெயில் நிற் காமல் செல்வதால், மேற் கூறியபடி பணிக்கு சென்ற வர்கள் இந்த ரெயில் நிலை யங்களில் இறங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் எந்த வசதிகளும் செய்யாமல் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்குரிய கட்டணம் இந்த ரெயிலில் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலை பயணிகளுக்கு வருத் தத்தை ஏற்படுத்துகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த ரெயில் தோவாளை மற்றும் ஆரல் வாய்மொழி ரெயில் நிலையங்களில் நின்று செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

    Next Story
    ×